Published:Updated:

களத்தில் விகடன்

விகடன் தானே துயர் துடைப்பு அணி

களத்தில் விகடன்

விகடன் தானே துயர் துடைப்பு அணி

Published:Updated:
களத்தில் விகடன்
##~##

'தானே’ தாக்குதலுக்கு உள்ளான கடலூர் மாவட்ட எல்லைக்குள் இருக்கின்றன இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் அம்பலவாணன்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி மறுவாழ்வு முகாம்கள். சிங்களர்களின் தாக்குதலுக்கு தப்பி வந்து, 10-க்கு 10 கூரைக்குள் தஞ்சமடைந்திருக்கும் இவர்களை, 'தானே’ புயலும் பதம் பார்த்தது. 30 ஆண்டுகள் பழமையான மரங்களே வேரோடு பிடுங்கி எறியப்பட்டபோது, சாதாரண மூங்கில் கழிகளால் கட்டப்பட்ட முகாம் வீடுகள் என்ன ஆகும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வீட்டையும் பொருட்களையும் அப்படியே போட்டுட்டு பக்கத்துல உள்ள அரசாங்கக் கட்டடத்துல போய் இருந்துட்டோம். கூரைகளை காத்து தூக்கிட்டுப் போயிருச்சு. நாங்க வெச்சுருந்த பொருட்களும் போயிருச்சு''

- எதிர்காலம் சூனியமாக ஆன நிலையில் நின்ற ஈழத் தமிழர்களுக்கு, விகடன் 'தானே' துயர் துடைப்புப் பணியின் மூலமாக உதவ முடிவெடுத்தோம்.

இரண்டு முகாம்களிலும் மொத்தம் 310 வீடுகள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 1,099 பேர். ''உடனடி தேவையாக என்ன வேண்டும்?'' என்றபோது, தயக்கத்துடன் முகாம்வாசி தர்மலிங்கம் போட்ட பட்டியலில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இடம்பிடித்திருந்தன. அவர்கள் கேட்ட அனைத்துப் பொருட்களும் முதல் தரத்தில் வாங்கப்பட்டன. அந்தந்த நிறுவனங்களின் உரிமையாளர்களும் 'தங்கள் பங்களிப்பு' என்று சொல்லி கணிசமான தொகையைக் கழிவாகக் கொடுக்க முன்வந்தார்கள். குழந்தைகளுக்குத் தேவையான துணிகளை, காரமடையைச் சேர்ந்த காளிமுத்து என்ற வாசகர் வாங்கித் தந்தார்.

களத்தில் விகடன்

3,300 கிலோ அரிசி, 330 கிலோ பருப்பு, 330 பாக்கெட் எண்ணெய், 330 பாக்கெட் மிளகாய்த் தூள், 660 துணி சோப்புகள், 1,000 குளியல் சோப்புகள், 160 பால் பவுடர் பாக்கெட்டுகள், 400 லுங்கிகள், 350 நைட்டிகளுக்கான துணி, 500 போர்வைகள் வாங்கப்பட்டன. கடந்த 10-ம் தேதி காலையில் அம்பலவாணன்பேட்டை முகாமிலும், மதியம் குறிஞ்சிப்பாடி முகாமிலும் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன. கூடவே, கேரம்போர்டு, செஸ் போர்டு, கிரிக்கெட் கிட், வாலிபால் பந்துகளும் வாங்கித் தரப்பட்டன.

''விகடனுக்கும் விகடன் வாசகர்களுக்கும் ரொம்ப நன்றி'' என்று சொல்லிக் கண்கள் கலங்கினர் முகாம்வாசிகள் அத்தனை பேரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism