நாகர்கோவிலின் மையப்பகுதியில் இருக்கும் 'ஸ்ரீ கிருஷ்ணா மெஸ்’... நாஞ்சில் நகரில் பலரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. அன்பான வரவேற்பு, இன்முகத்துடன்கூடிய நலம் விசாரிப்பு, ருசியான சாப்பாடு என பட்டையைக் கிளப்பும் இந்த மெஸ்ஸில், பரிமாறுவது தொடங்கி... கல்லா பெட்டி வரை பெண்களின் கையில்தான்! கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக கலக்கிக் கொண்டிருக்கும் இந்த மெஸ்ஸின் உரிமையாளர்கள்... பத்மகுமாரி, ஜெலஜகுமாரி என்ற இரு சகோதரிகள் என்பது கூடுதல் சிறப்பு!

''பக்கத்துல இருக்கற கிருஷ்ணன்கோவில்தான் எங்க ஊரு. கல்யாணத்துக்கு முன்ன, மெடிக்கல் ஏஜென்சியில வேலை பார்த்தேன். கல்யாணத்துக்கு அப்புறமா வீட்டுல சும்மாதானே இருக்கோம்னு, நானும் என் தங்கச்சியும் எங்க பகுதியில் பத்துப் பெண்களைச் சேர்த்து மகளிர் சுய உதவிக் குழுவை தொடங்கினோம். 'ஏதாவது சுயதொழில் தொடங்கலாமே'னு யோசிச்ச நாங்க... தையல், எம்ப்ராய்டரின்னு பல தொழில்கள் பற்றியும் பேசி, கடைசியில... 'மெஸ் தொடங்கலாம்'னு முடிவெடுத்து முயற்சிகளை ஆரம்பிச்சோம்.

அலைஞ்சு, திரிஞ்சு... இந்தப் பகுதியில் சைவ ஹோட்டலே இல்லைனு தெரிய வர, இந்த இடத்தையே தேர்ந்தெடுத்தோம். குழுவில் இருந்த பத்து பேரில் ஆறு பேர், இது சரிப்பட்டு வராதுனு திடீர்னு ஒதுங்கிட்டாங்க. ஆனாலும் மனம் தளராம முயற்சிகளை எடுத்தோம். ஒரு முழு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, 2003-ம் வருஷம் இந்த மெஸ்ஸை ஆரம்பிச்சோம். ஒன்பது வருசமா நல்லாவே போயிட்டு இருக்கு. குழுவில் மீதியிருந்த நாலு பேர்ல ரெண்டு பேர் உடல் நிலை காரணமா ஒரு வருசத்துக்கு முன்ன பார்ட்னர்ஷிப்பை விட்டுட்டாங்க. நானும், தங்கையும் விடாப்பிடியா தொடர, இன்னிக்கு வெற்றிகரமா நடந்துட்டிருக்கு எங்க மெஸ்'' என்று அக்கா பத்மகுமாரி நிறுத்த, தொடர்ந்தார்... தங்கை ஜெலஜகுமாரி.

''நம்ம 'மெஸ்’-க்கு ஏதாவது ஒரு சிறப்பு இருக்கணும்னு யோசிச்சபோதான், 'ஆல் இன் ஆல் பெண்கள்’ ஐடியா வந்தது. புதுமைக்காக மட்டுமில்ல... பல பெண்களோட வாழ்க்கைக்கு அது கை கொடுத்த மாதிரியும் இருக்கும்னு கடையோட எல்லா வேலைகளுக்கும் ஆரம்பத்துலயே பெண்களாவே வேலைக்கு எடுத்தோம். சமையலை விட்டா வேற எதுவும் செய்யத் தெரியாத வயதான பெண்களுக்கு ஆதரவு கொடுத்தோம். காய்கறி வெட்டுறது, சமைக்கறது, பரிமாறுறது, கல்லாவில் நிக்கிறது, சுத்தம் செய்றது, ஆர்டர் டெலிவரி கொடுக்கிறதுனு எல்லாமே பெண்கள்தான்.

எங்க மெஸ்ஸுல தினமும் மதிய சாப்பாடு மட்டும்தான். ஆனாலும்... பருப்பு, சாம்பார், மோர்க்குழம்பு, வெந்தயக் குழம்பு, வத்தக் குழம்பு, மோர், அவியல், பொரியல், கிச்சடினு ஏகப்பட்ட அயிட்டங்களை வெச்சு அசத்திடுவோம். வெள்ளிக் கிழமை மட்டும் எக்ஸ்ட்ராவா பாயசமும் இருக்கும்'' என்றார் புன்னகையுடன்.

மெஸ்ஸில் வேலை பார்க்கும் பகவதி அம்மாள், ''ஆரம்பிச்ச புதுசுல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. அளவு தெரியாம குறைவா சமைச்சு, அரக்கப்பரக்க மறுபடி உலை வைப்போம். இப்ப எல்லாம் கை வந்துடுச்சு. ஆரம்பத்தில் ஆட்டோ பிடிச்சு வடசேரி சந்தைக்குப் போய் காய்கறிகள் வாங்கிட்டு இருந்தோம். இப்ப காய்கறிக் கடைக்காரரே பைக்கில் கொண்டு வந்து மெஸ்ஸில்

வெச்சுடறாரு. நாலஞ்சு வருஷமா நிச்சயதார்த்தம், சடங்குனு சின்னச் சின்ன விசேஷங்களுக்கும் ஆர்டர் எடுத்து சமைச்சுக் கொடுக்கிறோம். எல்லாருமே பெண்களா வேலை பார்க்கிறது எல்லா விதத்துலயும் நம்பிக்கையாவும், சுமுகமாவும் இருக்கு. எத்தனையோ வேலைகள் இருந்தாலும், இப்படி நாலு பேருக்கு நம்ம கையால சாப்பாடு போட்டு அவங்க வயிறு நிறைஞ்ச சந்தோஷத்தை முகத்துல பார்க்கறதுல, எங்க மனசு நிறையுது!'' என்றார் முகம் மலர.

நாம் சென்றிருந்த நேரத்தில் ஹோட்டலில் சாப்பிடுபவர்கள் நிறைந்து இருக்க, மற்றொரு அறையில் சாப்பிடுவதற்கு வெயிட்டிங்கில் இருந்தார்கள் பலர். சாப்பாடு முடித்து திருப்தியோடு வந்த ரமேஷ், ''வெயிட்டிங்ல இருக்கிற ஆட்களைப் பார்த்தீங்களா? அதுதாங்க இந்த மெஸ்ஸோட வெற்றி. நான் சென்னையில ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜரா இருக்கேன். தொழில் விஷயமா தமிழ்நாடு முழுக்க சுத்திக்கிட்டே இருப்பேன். நாகர்கோவில் வரும்போதெல்லாம் ஸ்டார் ஹோட்டல்ல தங்கினாலும்... சாப்பாட்டுக்கு இங்க வந்துடுவேன்'' என்றவர், நிறைவாக சொன்னது -

''இங்க சாப்பிடும்போது வீட்ல என்னோட அம்மா கையில சாப்பிட்டது மாதிரி இருக்கும்!'

இதைக் கேட்டு நெகிழ்ந்து நின்றார்கள் மெஸ் சகோதரிகள்!