சயின்ஸ்ல கையெழுத்து !

என் மூத்த மகளும், முதல் வகுப்பு படிக்கும் அவளுடைய மகளும் பொங்கல் விடுமுறைக்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஆசிரியையான என் மகள், தான் பணிபுரியும் பள்ளி பற்றியும், மாணவிகளின் தேர்ச்சி பற்றியும் என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள். சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த நான், ''நீ எதுல கையெழுத்துப் போடுவே..?'' என்று கேட்டேன். மகளும், ''அதிகமா தமிழ்லதான் போடுவேன். அப்பப்ப இங்கிலீஷ்லயும் கையெழுத்துப் போடுவேன்'' என்றாள். இதை கவனித்துக் கொண்டிருந்த பேத்தி, ''ஏம்மா... மேத்ஸ், சயின்ஸ்ல எல்லாம் கையெழுத்துப் போடமாட்டீங்களா..?'' என்று கேட்க, அவளின் குழந்தைப் பருவ அறியாமை நிறைந்த கேள்வியில் நாளெல்லாம் சிரித்தோம்!

- ஜே.ரஞ்சிதமணி, கோயம்புத்தூர்

தெப்பக் குளத்துக்குள்ளே ஸ்கூல்!

ஏழு வயதுப் பேரனை ஸ்கூலில் விடுவதற்காக டவுன் பஸ்ஸில் அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். பஸ் ஒரு ஸ்டாப்பில் நின்றதும், கண்டக்டர், ''தெப்பக் குளமெல்லாம் இறங்குங்க'' என்று சத்தம் கொடுத்தார். பேரனுடைய ஸ்கூல் யூனிஃபார்மில் இருந்த மாணவர்கள் பலரும் அங்கே இறங்க, நாங்களும் இறங்க ஆயத்தமானோம். உடனே அவன் கவலையுடன் முகத்தை வைத்துக் கொண்டு, ''பாட்டி, எங்க ஸ்கூல் தெப்பக் குளத்துக்குள்ள வந்துடுச்சா?'' என்று கேட்க, அந்தக் காலை நேர அவசரத்திலும் பஸ்ஸில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்து டென்ஷன் மறந்தார்கள்!

- சோஃபி எபினேசர், பொள்ளாச்சி

'ராமர் வர்றதுக்கு லேட் ஆகாதா?’

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு உறவினர்களுடன் சென்றோம். மூலவர் தரிசனம் முடித்து, பிராகாரத்தில் உள்ள சுவாமிகளை தரிசித்துக் கொண்டு வரும்போது... என் அண்ணாவின் ஐந்து வயதுப் பேரன் விஷ்ணு தூக்க கலக்கம் மற்றும் களைப்பில் அழுது கொண்டே வந்தான். ''ராமரை மட்டும் பார்த்துட்டுப் போயிடலாம் அழாதே'' என்று அவனை சமாதானம் செய்தாள் அவனுடைய அத்தை. உடனே அவன், ''நேத்து என்னை தூங்க வைக்க கதை சொல்லும்போது, ராமர் சீதையை அழைச்சிட்டு வர்றதுக்கு இலங்கைக்குப் போயிருக்கார்னு சொன்னியே... அப்போ அவர் வர்றதுக்கு ரொம்ப லேட் ஆகாதா..?'' என்று கவலையுடன் கேட்க, அந்த மழலையின் ஞாபக சக்தியையும், அந்த நேரத்தில் அவன் பேசிய வெள்ளந்தியான பேச்சையும் கேட்டு நாங்கள் மட்டுமல்ல... சுற்றி இருந்த சேவார்த்திகளும் சேர்ந்து சிரித்ததில் சந்நிதியே சிரிப்பலைகளால் நிறைந்தது!

- ஆர்.ராஜலஷ்மி, அம்பத்தூர்