கூட்டுக் குடும்பமாக இருந்தவரை குழந்தை வளர்ப்பு சுலபமானதாக இருந்தது. குழந்தை கூடுதலாக இரண்டு முறை 'கக்கா' போனால், 'வயித்துக்குச் சரியில்லை பார்த்துக்கோ’ என்று உஷார்படுத்துவார் பாட்டி. காய்ச்சலில் உடம்பு கொதித்தால், 'பருத்தித் துணியை தண்ணியில் நனைச்சு, உடம்ப துடைச்சு விடு’ என்று முதலுதவி சொல்வார் தாத்தா.

இன்றோ நியூக்ளியர் ஃபேமிலி கலாசாரம்... இளம் பெற்றோருக்கு ஆலோசனைகள் கூற பெரியவர்கள் யாரும் உடன் இல்லை. குழந்தையின் அழுகை தொடங்கி, சாப்பாடு ஊட்டுவது வரை குழப்பங்களும் அச்சங்களும் பிடித்துக் கொள்கின்றன பெற்றோரை.

அவர்களுக்குக் கைகொடுக்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஆர்.பிரதீப்ராஜ்...

''பால் குடிச்சவொடனே கக்கிடுது டாக்டர்.. என்பதுதான் புது அம்மாக்களின் முதல் கம்ப்ளெயின்ட். பால் குடிக்கும்போது காற்றையும் சேர்த்து உள்ளிழுக்கும். எனவே, தாய்ப்பால் கொடுத்தவுடன் குழந்தையைத் தோளில் போட்டு பத்து நிமிடம் முதுகில் மிருதுவாகத் தட்டிக்கொடுக்க, அப்போது வரும் ஏப்பத்தில் அந்தக் காற்று வெளிவந்துவிடும். ஓவர் ஃபீடிங்கும் கக்குவதற்கான காரணமாக இருக்கலாம்.

பசியினாலோ... தூக்கமின்மை, வியர்வை என அசௌகரியத்தாலோ குழந்தை அழுதால்... 20 நிமிடங்களுக்குள் சமாதானப்படுத்திவிடலாம். அதற்கு மேலும் குழந்தை அழுதால், டாக்டரை அணுக வேண்டியது அவசியம்.

'குழந்தை யூரின் போறப்போ எல்லாம் அழுது’ என்று பதறும் பெற்றோர் பலர். இதில் பயப்பட ஒன்றும் இல்லை. பிறந்த குழந்தைக்கு யூரின் பிளாடரும், அடிவயிற்றுத் தசைகளும் உறுதியாக இருக்காது. இதனால், யூரின் பிளாடர்களுக்குப் பிரஷர் கொடுத்தபடிதான் சிறுநீர் வெளியேறும். இந்தக் காரணத்தால், குழந்தை அழுவது இயல்பான ஒன்றுதான். இரண்டு வயதுக்குள் இது தானாகவே சரியாகிவிடும்.

ஆறு மாதத்துக்குப் பிறகு தாய்ப்பாலோடு குழந்தைகளுக்கு இணை உணவை ஆரம்பித்துவிட வேண்டும். எளிதாக ஜீரணிக்கக் கூடிய இட்லி, பருப்பு சாதம், மசித்த ஆப்பிள் என கொடுக்கலாம். முதல் வாரம் காலை இட்லி மட்டும், இரண்டாவது வாரம் காலை இட்லி, மதியம் சாதம், மூன்றாவது வாரம் காலை, மதியம், இரவு உணவு என கொடுக்கலாம். குறை மாதக் குழந்தைகளுக்குப் பிறந்து ஆறு வாரத்துக்குப் பின் இரும்புச் சத்து டிராப்ஸ், மல்டி வைட்டமின் டிராப்ஸ் கொடுக்க வேண்டும். இவர்களுக்கு, இணை உணவை தாமதமாகவே ஆரம்பிக்கலாம்.

குளிப்பாட்டுவது, அடுத்த சவால். இரண்டரை கிலோ எடையுடன் பிறக்கும் குழந்தைகளை 15 நாள் கழித்து இதமான சுடுநீரால் குளிப்பாட்டலாம். மூன்றரை கிலோ எடையுடன் பிறக்கும் குழந்தைகளைப் பிறந்த இரண்டாவது நாளே தலை தவிர்த்து உடம்புக்கு மட்டும் ஊற்றிக் குளிப்பாட்டலாம். குழந்தையின் காது, மூக்கை சுத்தம் செய்யும் வேலைகள் எல்லாம் வேண்டாம். இயற்கையாகவே சுத்தமாகிவிடும். எக்காரணம் கொண்டு நாக்கில் வசம்பு போன்ற வீரியமுள்ள பொருட்களை தடவக் கூடது.

தனிக்குடும்ப அம்மாக்கள் தங்கள் குழந்தைகள் பற்றி வைக்கும் பிரதான கவலை... 'என் குழந்தை இன்னும் பேசல’ என்பதுதான். தாத்தா பாட்டி, மாமா, சித்தி என்று உறவுகள் சூழ்ந்திருக்கும் கூட்டுக் குடும்பத்தில், ஒருவர் மாற்றி ஒருவர் குழந்தையைக் கொஞ்சுவது, பேசுவது, தாலாட்டு பாடுவது என்று இருப்பார்கள். அந்தச் சூழலில் குழந்தைக்கும் தானாகவே சீக்கிரம் பேச்சு வந்துவிடும். தனிக் குடும்பத்தில் குழந்தையிடம் அம்மா, அப்பாவே நேரம் செலவழித்துப் பேசுவதில்லை. பின் எப்படி அது மட்டும் பேசும்? எனவே, ஒரு மாத குழந்தையாக இருந்தாலும், அப்போதே பேச ஆரம்பித்து விடுங்கள். அதற்குப் புரிகிறதோ இல்லையோ... வீட்டுக்கு வருகிறவர்களை எல்லாம் பெயர், உறவு முறையுடன் அறிமுகப்படுத்துங்கள்.

விஷ§வல் ஸ்டிமுலேஷன் தெரபி, டேக்டைல் ஸ்டிமுலேஷன் தெரபி, ஆடிடிவ் ஸ்டிமுலேஷன் தெரபி என முக்கியமான சில தெரபிகள் இருக்கின்றன. விஷ§வல் ஸ்டிமுலேஷன் என்பது குழந்தைகளுக்கு வண்ணங்களை அடையாளப்படுத்துவது. டேக்டைல் என்பது குழந்தைகளின் உடலை நன்கு மசாஜ் செய்து விடுவது. ஆடிடிவ் என்பது குழந்தைகளின் காது கேட்கும் திறனை பலப்படுத்துவதற்காக கை தட்டுவது, கொலுசு போட்டுவிடுவது, கிளுகிளுப்பை என பல இசைகளை அதைக் கேட்கச் செய்வது. இந்தத் தெரபிகள் எல்லாவற்றையும் ஆறு மாதத்துக்குள் செய்துவிட வேண்டும்.

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களும் வாஷபிளாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசி தவணைகளை எக்காரணம் கொண்டும் தவற விடக்கூடாது!''

- அக்கறையுடன் முடித்தார் டாக்டர்.