தமிழக ஓவியக் கண்காட்சிகள் வரலாற்றில், நிச்சயம் அது ஒரு மைல்கல்!

'தானே புயல் பாதிப்பின் துயர் துடைக்கும் வகையில், ஓவியக் கண்காட்சியை நடத்துகிறது விகடன். உங்களின் ஓவியம் ஒன்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடையாகக் கொடுங்கள்’ என விகடன் வேண்டுகோள் வைக்க, சர்வதேச புகழ் பெற்ற முன்னணி ஓவியர்கள் தொடங்கி, ஓவியக் கல்லூரி மாணவர்கள் வரை, ஓவியங்களை உற்சாகமாக வழங்கினார்கள். மொத்தம் 275 ஓவியர்கள், 357 ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள். சென்னை, லலித்கலா அகாடமி நெகிழ்ச்சியால் நிறைந்திருந்தது மார்ச் 5 அன்று. ஆளுநர் ரோசையா கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.

''தமிழ்ச் சமூகம் எப்போதெல்லாம் பெரும் இடர்களை எதிர்கொள்கிறதோ, அப்போதெல்லாம் மக்களோடு கைகோத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் உறுதியாக இருக்கிறது விகடன். 2003-ல் வானம் பொய்த்து, தமிழகம் பெரும் வறட்சியைச் சந்தித்த நேரத்தில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் துயர் துடைக்கும் நோக்கத்தில் 'தத்தெடுப்போம் கிராமத்தை’ என்ற திட்டத்தை முன்னெடுத் தோம். 2004-ல் சுனாமிப் பேரழிவின்போது நிதி திரட்டி முதல்வரின் பொது நிவாரண நிதியில் சேர்ப்பித்தோம். இப்போது 'தானே’ புயல் ஏற்படுத்தி இருக்கும் இழப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் தலையெடுக்க இன்னும் பல தலைமுறைகள் ஆகும் என்ற சூழலில், எங்களுடைய பொறுப்பு இன்னும் பெரிதாகிறது'' என்று நிகழ்ச்சியில் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் பேசியதைக் கூர்ந்து கவனித்தார் ரோசய்யா.

''நாங்கள், ஓவியங்களைக் கொடுத்து உதவி இருக்கிறோம். இதேபோல் ஒவ்வொருவரும் தத்தமது துறை சார்ந்து பங்களித்து உதவ வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார் ஓவியர் அனிதா தாஸ்.

''ஓவிய ரசிகர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள், கிராமத்து மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என எல்லா தரப்பினரும் கண்காட்சிக்கு வந்து பார்வையிட் டதும், ஓவியங்களை வாங்கிச் சென்றதும் வேறு எங்கும் காணக் கிடைக்காதது!'' என்று பரவசப்பட்டார் ஓவியர் அச்சுதன் கூடலூர்.

''பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடக்கும் இந்தக் கண்காட்சியில் என் ஓவியமும் பங்கேற்றது, எனக்குக் கிடைத்த வாய்ப்பு!'' என்று உருகினார் ஓவியர் மருது.

''ஒவ்வொரு ஓவியமும் ஒரு எண்ணத்தைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், எல்லா ஓவியங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சொல்லும் செய்தி... 'கவலைப்படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம்’ என்பதுதான். விகடனுக்கு என் நன்றிகள்!'' என்றார் ஓவியர் ஹுசைனி.

கண்காட்சியின் எதிர்பாராத ஆச்சர்யம்... பாதிக்கப்பட்ட மக்களின் வருகை! ''எங்களுக்காக இவ்வளவு பெரிய காரியம் செய்றீங்க, நாங்க யாராவது வர வேணாமா?'' என்று உரிமையோடு வந்து நின்றார்கள் கடலூர் மாவட்டம், தியாகவல்லி கிராம மக்கள். ''சாவு தான் பெரிய கொடுமைனு நெனைச்சுக்கிட்டு இருந் தோம். ஆனா, இப்படி எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறப்ப உசுரோட இருக்கிறதுதான் பெரிய கொடுமையா இருக்கு!''

- கண்காட்சி முடிந்த பின்னரும் எதிரொலித்துக் கொண்டே இருந்தன அவர்களின் குரல்கள்.

வாசகர்களே வாருங்கள்... கை கொடுப்போம்... 'தானே’ துயர் துடைப்போம்!