''மல்லிகையை மல்லிகையாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனிடம் ரோஜாவின் அழகை எதிர்பார்ப்பது தவறு. சிறப்புக் குழந்தைகளை, அவர்களின் இயல்புடன் ஏற்றுக்கொள்ளும், ரசிக்கும் மனப்பக்குவம் நம் சமூகத்துக்கு வர வேண்டும்!''

- பொறுப்புடனும், வலியுறுத்தலுடனும் ஆரம்பிக்கிறார் சென்னை, சைதன்யா சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சி மைய சிறப்புக் கல்வியாளர் வனிதா ஆனந்த்.

சிறப்புக் குழந்தைகளைக் கண்டறிவது, அவர்களுக்கான பயிற்சிகள், அவர்களின் சமூக முன்னேற்றம் என்று பல கூறுகள் பற்றியும் வனிதா பகிர்ந்த வார்த்தைகள், மிக முக்கியமானவை.

''ஆட்டிஸம், மூளை முடக்குவாதம், மன வளர்ச்சி குறைவு, கற்றலில் குறைபாடு, காது கேளாமை, வாய் பேசாமை, தசைப் பிறழ்வு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ள குழந்தைகள், சிறப்புக் குழந்தைகள். பொதுவாக, குழந்தையின் ஒரு வயதுக்குள்ளாக அவர்களின் பிரச்னைகள் கண்டுபிடிக்கப்பட்டு விடும். குறிப்பாக, அவர்கள் கண்கள் நமக்கு நல்ல ஜன்னல். கண்ணுக்கு கண் பார்ப்பது, ஒலி, ஒளி வரும் திசையில் பார்ப்பது என இவை எல்லாம் நான்கு மாதங்களுக்குள் நிகழ வேண்டும். மாறாக, பார்வை நிலையாக இல்லாமல் இருப்பது, நான்கு மாதங்களுக்குப் பிறகும் கழுத்து நிற்காமல் இருப்பது, ஐந்து மாதங்களுக்குப் பிறகும் குப்புற விழாமல் இருப்பது, ஆறு மாதங்களுக்குப் பிறகும் தவழாமல் இருப்பது, எட்டு மாதங்களுக்குப் பிறகும் உட்காராமல் இருப்பது, ஒரு வயதுக்குப் பிறகும் நிற்காமல் இருப்பது... இப்படி அந்தந்த காலகட்டங்களில் நடைபெற வேண்டிய இயக்கங்கள் தாமதப்பட்டாலோ, தடைபட்டாலோ... அவர்களை சிறப்பாக நாம் கவனிக்க வேண்டும்.

இத்தகைய அதீத காலதாமதம் மட்டுமல்ல... அதீத துறுதுறுப்பு, அதீத கோபம் (ரத்தம் வரும் அளவுக்கு சுவரில் முட்டிக்கொள்ளும் அளவிலான கோபம்), கவனச் சிதறல், பேச்சுத்திறன் பாதிப்பு, சமூகத்துடன் - பிற குழந்தைகளுடன் ஒட்டாமல் தனி உலகில் மூழ்கி இருப்பது, நடத்தைப் பிறழ்வு, தன் சுத்தம் பற்றிய கவனமின்மை போன்றவையும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்தான். இயல்பான குழந்தைகளுக்கும் இந்த இயக்கங்களில் தாமதமும், கவனமின்மையும், பேச்சுத்திறன் குறைபாடும் நிகழலாம். ஆனால், அது மூன்று வயது... ஐந்து வயது... எனக் கடந்த பிறகும் நீடித் தால்... அது நிச்சயமாக பிரச்னைக்கு உரியதே'' என்ற வனிதா,

''சிலர்... 'ஈ, எறும்பைக்கூட ஆச்சர்யமா பார்த்துக்கிட்டே இருக்கான் என் பையன்’, 'உன் பேரு என்னனு எம்பொண்ணுகிட்ட கேட்டா, அதே கேள்வியை திருப்பி என்கிட்ட கேக்குறா’, 'ஃபேன் ஓடினாகூட பார்த்து அலறி அழுவுது என் குழந்தை’ என்றெல்லாம் குறைபட்டுக் கொள்வார்கள். இப்படி நடத்தையில் வித்தியாசம் தெரிந்தால், ஒருவேளை அவர்கள் சிறப்புக் குழந்தைகளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்காக ஏதோ ஒன்றிரண்டு முறை இதை குழந்தைகள் விளையாட்டாகச் செய்தால், 'ஐயோ, நம் குழந்தை சிறப்புக் குழந்தையாக இருக்குமோ..?’ என்று பதற வேண்டாம்'' என்றவர்,

''பொதுவாக, ஒன்று முதல் மூன்று வயதுக்குள்ளாகவே சிறப்புக் குழந்தைகள் பெற்றோர்களால் அடையாளம் காணப்பட்டுவிடுவர். அடுத்த படியாக, அவர்களை குழந்தைகள் மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். தவிர, பெற்றோர் களும் சிறப்புக் குழந்தைகளைப் பராமரிக்க அதிக கவனமும், அக்கறையும் கொண்டிருக்க வேண்டும். சாதாரண குழந்தைகள் கற்றுக்கொள்ளும் சின்ன சின்ன விஷயங்களைக்கூட இவர்கள் கற்றுக்கொள்ள நீண்ட நாட்களாகும். எனவே அன்பு, பொறுமை, குழந்தையின் குறைபாட்டைப் பற்றிய தெளிவான அறிவு கொண்டு அவர்களை வளர்க்க வேண்டும். சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருடைய புரிதலும், நமது சமூகமும் இவ்வகை குழந்தைகளிடம் காட்ட வேண்டிய பரிவும் முக்கியமானது, அவசியமானது'' என்றவர், இவ்வகை குழந்தைகளுக்கு மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் பயிற்சியளிக்கும் முறைகளைப் பகிர்ந்தார்.

''கற்றலில் குறைபாடு, சரிவர எழுதத் தெரியாமை மற்றும் மேலே சொன்ன குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவர் தன் மேற்பார்வையில் முறையான பயிற்சிகள் மற்றும் அவர்களுக்கான சரியான கல்விமுறை மூலம் அவர்களின் இயக்கங்களை மேம்படுத்துவார். இவர்களுக்கான சிறப்புப் பயிற்சியாளர்கள், கையெழுத்துப் பயிற்சி, விளையாட்டு முறைக் கல்வி, கவன ஒருங்கிணைப்புப் பயிற்சிகள், பட விளக்கம், நடத்தை மேம்பாட்டுப் பயிற்சிகள் போன்ற பிரத்யேகப் பயிற்சிகளின் மூலம் இவர்களின் திறன் மேம்பட உதவுவார்கள். பல் துலக்குவது, தன் ஆடைகளை தானே அணிந்துகொள்வது, தன் வேலைகளை, தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்வது என அன்றாட வாழ்க்கைக்கான செயல்பாடுகள் குறித்த பயிற்சியும் வழங்கப்படும்'' என்றவர், இந்தப் பயிற்சிகளால் இவர்களுக்குக் கிடைக்கப்பெறும் வேலைவாய்ப்புகள் பற்றியும் கூறினார்.

''காகிதப்பை, ஃபேஷன் ஜுவல்லரி மேக்கிங், கை வேலைப்பாடுகள், அச்சு வேலைப்பாடுகள் போன்றவற்றை இவர்களுக்குக் கற்றுத் தரலாம். அது அவர்களின் பொருளாதார பிடிமானத்துக்கு உதவும். எங்களின் 'சைதன்யா’ பயிற்சி மையத்தில் உள்ள குழந்தைகளால் உருவாக்கப்பட்ட பிரேஸ்லெட், கழுத்துமணி போன்றவை கண்காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்படும். அதில் வரும் வருமானம் அந்தக் குழந்தைகளுக்கான நலனுக்காக பயன்படுத்தப்படும். 'உன்னால் உழைக்க முடியும், சம்பாதிக்க முடியும்’ என்கிற ஊக்கம் அவர்களை இன்னும் தன்னம்பிக்கைப்படுத்தும்!'' என்ற வனிதா,

''ஒரு கல்... சிலையாவது, சிற்பியின் கையில். அதுபோல்தான் சரியான பயிற்சிகளும், முறையான வழிகாட்டுதல்களும், சிறப்புக் குழந்தைகளின் திறன்களை மெருகேற்றும். அது அவர்களது எதிர்கால நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும்!'' என்றார்.

ஊனத்தை வென்றவர்கள்!

சிறப்புக் குழந்தைகளைப் போல மாற்றுத் திறனாளி குழந்தைகளிடமும் தனித்திறமை ஒளிந்திருக்கும். அவற்றை வளர்த்தெடுப்பது பற்றிய நம்பிக்கை கிடைக்கிறது, சென்னை, அண்ணா நகர், 'கில்டு ஆஃப் சர்வீஸ்’-ல் உள்ள குழந்தைகளைச் சந்தித்தபோது.

''நாங்க குடும்பத்தோட டிரெயின்ல போயிட்டு இருந்தப்போ ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு. அம்மாவும், தங்கச்சியும் இறந்துட்டாங்க. எனக்கு இடது கையும், வலது கையில் மூன்று விரல்களும் போச்சு. இப்போ ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். பேண்ட் வாசிக்கறதுல போன வருஷம் நான் நேஷனல் லெவல்ல சாம்பியன். ஓவியமும் நல்லா வரைவேன்!'' என்கிறான் மகேந்திரவர்மன்.

தனலட்சுமிக்கு பிறவியிலேயே கால்கள் நடக்க முடியாத துயரம்... ''என்னோட மூணு வயசுலயே இங்க வந்துட்டேன். இப்போ மூணாவது படிக்கிறேன். நான்தான் கிளாஸ் ஃபர்ஸ்ட்'' என்றாள் சிரித்த முகத்துடன்.

கௌசல்யாவுக்கு இடது கையில் இயக்கம் இல்லை. ''ஆனாலும், என்னோட எந்த வேலைகளையும் யாரையும் எதிர்பார்க்காம செய்ய நான் கத்துக்கிட்டேன். ஓவியம் வரையறதுல நான்தான் இங்க கில்லி!'' என்கிறாள் அந்த நான்காம் வகுப்பு மாணவி.

இந்தக் காப்பகத்திலிருக்கும் 'சோஷியல் வொர்க்கர்' மீனாட்சி பேசும்போது, ''குழந்தைகளுக்கு நாங்க தர்ற முதல் ட்ரீட்மென்ட்... தன்னம்பிக்கைதான். அடுத்ததா, கைகளில் இயக்கம் இல்லாத குழந்தைகளுக்கு கால்களைப் பயன்படுத்தப் பயிற்சி தருவோம். கால்களிலும் இயக்கம் இல்லாத குழந்தைகளுக்கு அவங்களோட முயற்சிகளையே ஊன்றுகோலாக்குவோம். புள்ளிகள், கோடுகள், கட்டங்கள், எழுத்துக்கள், வாக்கியங்கள், பத்திகள்னு படிப்படியா கல்வி கற்றுத் தருவோம். தன் சட்டை பட்டனை தானே போட முடியாத நிலையில் இங்க வந்த குழந்தைகள் எல்லாம்... இப்போ இயல்பான குழந்தைகளைவிட, பழக்க வழக்கத்தில் ஒழுக்கம், சுத்தம், நேர்த்தி உள்ளவங்களா இருக்காங்க. இங்க இருக்கற குழந்தைகள் எல்லாம் ஊனத்தை வென்றவர்கள்!'' என்றார் பெருமையுடன்!