Published:Updated:

வாம்மா... யுவினம்மா !

வாம்மா... யுவினம்மா !

பிரீமியம் ஸ்டோரி

கேபிள் கலாட்டா!
ரிமோட் ரீட்டா

வாம்மா... யுவினம்மா !

''கலைஞர் டி.வி-யின் 'உறவுக்கு கை கொடுப்போம்’ சீரியல்ல சுட்டித்தனமா தலை சாய்ச்சு, விரல் நீட்டிப் பேசுற அந்த பப்ளி பாப்பா, அவ்வளவு அழகு! நிமிஷத்துக்கு நிமிஷம் எக்ஸ்பிரஷன்ஸ் மாத்தி பின்னி எடுக்கறா. அந்தப் பட்டுக்குட்டி வந்ததுக்கு அப்புறம், சீரியலே ஸ்பீட் எடுத்துடுச்சு. மறந்துடாம நிறைய சாக்லேட் வாங்கிட்டுப் போய், நாங்க கொடுத்தோம்னு அவகிட்ட கொடுத்து, பேசிட்டு வா ரீட்டா..!'’

- வாசகிகளின் இந்த உத்தரவை ஏற்று ஏவி.எம். ஸ்டூடியோவுல ஸ்கூட்டியை நிறுத்தினேன். ஷூட்டிங் ஸ்பாட்ல சேர் போட்டு 'ஜம்’னு உட்கார்ந்திருந்தா அந்தச் சுட்டி. அவளோட அத்தை சுஜாதா, ரசம் சாதத்தை ஊட்டிவிட்டிட்டு இருந்தாங்க. டெக்னீஷியன்ஸ், கோ             ஆர்ட்டிஸ்ட்ஸ்னு டீம்ல எல்லாரும் அப்பப்போ வந்து அவளைக் கொஞ்சிட்டிருந்தாங்க.

''ஹாய் க்யூட்டீ... இது உனக்காக உன் ஃபேன்ஸ் வாங்கிக் கொடுத்தது’'னு சாக்லேட்களை நீட்ட, ''குட்மார்னிங் ரீட்டா ஆன்ட்டி!'’னு சுட்டி விஷ் பண்ண, ஸ்வீட் ஷாக் எனக்கு!

##~##

'' 'உன்னைப் பேட்டி எடுக்க வர்றாங்க’னு ஏற்கெனவே சொல்லி வெச்சிருந்தேன். அதான்'’னு விளக்கினாங்க அத்தை!

ஒரு குடும்பத்துல நாலு பிள்ளைங்க. அவங்களோட அம்மா தெய்வநாயகி இறந்துடறாங்

வாம்மா... யுவினம்மா !

க. 'நானே உங்க மகளா பிறப்பேன்’னு மூத்த மருமகளோட கனவுல வந்து சொல்லி, அப்படியே பிறக்கறாங்க. மாமியாரே மறுஜென்மம்எடுத்தது கணக்கா... அந்தக் குழந்தை, தன் பாட்டி மாதிரியே அதிகாரத் தோரணையோட, அன்பைக் கலந்துகட்டி குடும்பத்தை குதூகலமாக்கறதுதான் கதை. அந்தக் குட்டி(அ)ம்மாதான் இந்த யுவின் பார்த்தவி! ரெண்டரை வயசான யுவின் குட்டிக்கு, நான்-ஸ்டாப் பேச்சு.

''இங்க எல்லாரும் என்னை செல்லமா பார்த்துக்குவாங்க. நான் ஒழுங்கா நடிச்சா நிறையா சாக்லேட், ஐஸ்க்ரீம், முத்தம் எல்லாம் கிடைக்கும். எங்க அத்தைதான் தினமும் ஷூட்டிங்குக்கு கூட்டிட்டு வருவாங்க. டாடியும், மம்மியும் வர மாட்டாங்க. நான் நடிக்கறத டி.வி-யில பார்த்துட்டு, 'சூப்பர்டா!’னு கொஞ்சுவாங்க. ம்ம்ம்... அடுத்த வருஷம் நான் ஸ்கூலுக்குப் போகப் போறேனாம். எங்க மம்மி சொன்னாங்களே!''னு குண்டு கன்னங்கள் அசையச் சொன்ன ச்சோ ச்வீட் யுவின், சீரியலுக்கு வந்த கதை சொன்னாங்க அவளோட அத்தை!  

''யுவின் என் தம்பி ஸ்ரேயனோட பொண்ணு. அவர் மல்டி மீடியா கம்பெனியில வேலை பார்க்கறாரு. அம்மா தேவி, ஹவுஸ் வொய்ஃப். யுவின் பேச்சழகி. ஒரு வயசுலயே எங்க தாய் மொழியான தெலுங்கையும், தமிழையும் அவ்ளோ அழகா பேச ஆரம்பிச்சுட்டா.  'உறவுக்கு கை கொடுப்போம்’ சீரியல்ல நடிச்சிட்டுஇருக்கிற ஷோபனா, என் க்ளோஸ் ஃப்ரெண்ட். ஆறு மாசத்துக்கு முன்ன, இந்த சீரியல் டீம்கூட நானும் 'ஷிரடி’ போயிருந்தேன். யுவின் எனக்கு போன் பண்ணி, 'அத்தை... பத்திரமா இருக்கியா... 'சாப்ட்டியா?’, 'அது வாங்கிட்டு வா... இது வாங்கிட்டுவா’னு அடிக்கடி

வாம்மா... யுவினம்மா !

பேசுவா. ஒருமுறை அவ பேசினதை விளையாட்டா ஸ்பீக்கர்ல போட்டுவிட, அதைக் கேட்ட டைரக்டர், கேமராமேன் எல்லாரும் அசந்தே போயிட்டாங்க. 'எங்க சீரியல்ல நடிக்க ஒரு குழந்தை தேடிட்டு இருக்கோம்’னு சொல்லி, சென்னை திரும்பின கையோட யுவினோட கால்ஷீட்டை புக் பண்ணிட்டாங்க.

ஆரம்பத்துல ஷூட்  டிங் வர்றது அவளுக்குப் பிடிக்கல. ஆனா, அவ நடிச்சதை எல்லாம் போட்டுக் காட்டினப்போ, ரொம்ப குஷியாயிட்டா. இப்போவெல்லாம் தினமும் அவளே ஆர்வமா கிளம்பறா''னு சொன்னாங்க அத்தை!

''போட்டோ எடுக்கலாமா குட்டி?''னு கேமராமேன் தயாராக... 'பேக்’ல இருந்த பாவாடையை அவங்க அத்தை எடுக்க, ''ம்ஹூம்... இது அடுத்த ஷாட்டுக்கான டிரெஸ்... அப்பதான் போடணும்''னு யுவின் ஸ்ட்ரிக்ட்டா சொன்னதை பார்த்து சர்ப்ரைஸ் நமக்கு!

''இதுக்கே அசந்துட்டா எப்படி?!''னு வந்தாங்க சீரியல்ல அவளுக்கு அம்மாவா நடிக்கற புஷ்பலதா.

''ஷூட்டிங் நடந்திட்டுஇருக்கறப்பவே மானிட்டர்ல பார்த்துட்டு, 'ஜானகி (சீரியலில் கேரக்டர் பெயர்), இந்த ஸீனை இன்னொரு தடவை பண்ணலாமா?’னு கேட்கற அளவுக்கு பொண்ணு ஷார்ப்!''னு புகழ்ந்தாங்க புஷ்பலதா.

''ஸீனையெல்லாம் புரிஞ்சுகிட்டு நடிச்சிடுமா..?னு எனக்கே சந்தேகமா இருக்கும். ஆனா, 'என்னை யாருனு நினைச்சீங்க..?’ங்கற மாதிரி, 'கேமரா ஆன்'னு சொன்னதுமே அசத்திடுவா யுவின். எதிர்காலத்துல கலக்கப்போற ஒரு சூப்பர் ஸ்டாரினியை அறிமுகப்படுத்தின பெருமை எங்க டீமுக்கு!''னு சிரிச்சார் டைரக்டர் புவனேஷ்.

வாம்மா... யுவினம்மா!

 

வாம்மா... யுவினம்மா !

விஜய் டி.வி-யில் 'பிரிவோம் சந்திப்போம்’ங்கற புது தொடர் விரைவில் ஒளிபரப்பாக இருக்குது. கதை இதுதான்... ரேவதி, சிவப்பான பொண்ணு. ஜோதி, மாநிறம். ஒன்றுவிட்ட இந்த சகோதரிகளுக்குள்ள உருவாகற நிற பேதம், ஒற்றுமையா இருந்தவங்களைப் பிரிக்குது. ஜோதியோட நல்வாழ்வுக்காக ரேவதி எடுக்கற அதிரடி முடிவு, அதனால அவ வாழ்க்கையில ஏற்படற மாற்றங்கள்னு நகரவிருக்குது சீரியல். இதுக்கு மேல (!) கதையை சொல்லக்கூடாதுனு யூனிட்ல சொல்லிட்டாங்க. ரேவதியா கல்யாணியும், ஜோதியா ரீச்சாவும் கலக்கப் போறாங்க!

வாட்ச் இட்

வாசகிகள் விமர்சனம்

சபாஷ் வசந்த்!

''வசந்த் தொலைக்காட்சியின் 'வசந்த் ரெக்கார்ட்ஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மைக்கேல் என்ற இளைஞர் எல்லோரையும் அசத்திவிட்டார். காலியான பவுடர் டப்பா, மண்ணெண்ணெய் கேன், கடுகு டப்பா, தண்ணீர் கேன் போன்ற பொருட்களை வைத்துக் கொண்டு அவர் நடத்திய இசை கலாட்டா... சூப்பர்! சினிமா பாடல்கள் மட்டுமல்ல... 'தேசிய கீத'த்தையும் இசையோடு பாடி, நேயர்களை சபாஷ் போட வைத்துவிட்டார். இதுபோன்ற இளைஞர்களின் திறமைகளுக்கு ஒளியூட்டும் தொலைக்காட்சி நிறுவனத்தை தாராளமாகப் பாராட்டலாம்'' என்று தட்டிக் கொடுக்கிறார் சென்னையில் இருந்து ஜெயலட்சுமி மணிவண்ணன்.

மனதுக்கு இதம்!

''கேப்டன் டி.வி-யில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் 'தெய்வ வழிபாடு’ என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் பக்தி பாடல்கள் மனதுக்கு அமைதியையும் வீட்டுக்கு மங்களத்தையும் தருகின்றன. இனிமையான இரவு நெருங்கும் நேரத்தில் இப்பாடல்களைக் கேட்பதும்... கடவுளர்களின் உருவங்களை திரையில் தரிசிப்பதும் மனதுக்கு இதமாக இருக்கிறது!'' என்று உருகுகிறார் அரூரில் இருந்து ஜெயலட்சுமி வசந்தராசன்.

மேன்மக்கள்... மேன்மக்களே!

''தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40-ம் ஆண்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் சன் டி.வி-யில் ஒளிபரப்பானது. கிடார் இசைக் கலைஞரான மதன்பாப், 'அபூர்வ ராகம்' திரைப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தது பற்றி சிலாகித்துவிட்டு, அந்த அனுபவத்தைக் கேட்டார். அதற்கு, 'அந்த ராகத்தின் கர்த்தா... பாலமுரளி கிருஷ்ணாதான். அவருக்குத்தான் பெருமை சென்று சேரும்' என்று சொன்ன எம்.எஸ்.வி, 'ஒரு இசை அமைப்பாளனாக நான் பெற்ற வெற்றி, உடன் பணியாற்றிய இசைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியால் கிடைத்த வெற்றி' என்று தன்னடக்கத்தோடு கூறியது, அவர் மீதான மரியாதையைக் கூட்டியது'' என்று புகழ்கிறார் திருச்சியில் இருந்து பத்மா ஹரிகிருஷ்ணன்.

ஒவ்வொன்றுக்கும் பரிசு: 75

வாம்மா... யுவினம்மா !

சீரியல் ஹீரோ அபிஷேக், சூப்பர் சந்தோஷத்துல இருக்கார். சமீபத்துல சென்னையில நடந்த சர்வதேச திரைப்பட விழாவுல நாற்பது நாடுகளைச் சேர்ந்த நூத்து இருபது சிறந்த படங்கள் திரையிடப்பட்டது. அதுல, 'கதை’ங்கிற தமிழ்ப் படமும் ஒண்ணு. அதை இயக்கினது... அபிஷேக்தான்! அதுதான் சாரோட சந்தோஷத்துக்கு காரணம். ''தேர்வுக் குழுவுல இருந்த சாருஹாசன் சார், சிங்கிதம் சீனிவாசராவ் சார், அர்ச்சனா மேடம் எல்லாரும் என் படத்தை ரசிச்சு பாராட்டினாங்க. இன்னொரு குட் நியூஸ்... தமிழ், ஹிந்தினு இரண்டு மொழிகள்ளயும் நான் எடுக்கப்போற படத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டிருக்கேன் ரீட்டா!''னு உற்சாகமானார் அபிஷேக்!  

ஆக்டர்... டைரக்டர்!

படங்கள் : பொன். காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு