ஸ்பெஷல் 1
Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

வாசகிகள் பக்கம் ஓவியங்கள்: ஹரன்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு !

150

'ஐயே.. பேபி பிரஷ்ஷா?’

குட்டீஸ் குறும்பு !
##~##

அன்று என் மகன் கையால் பல் துலக்கிக் கொண்டிருந்தான். ''ஏம்ப்பா கையால துலக்குற... பிரஷ் என்னாச்சு?'' என்று கேட்டதற்கு, ''தொலைஞ்சுடுச்சும்மா'' என்றான். உடனே, ''குட்டிக்கு, பேபி பிரஷ் வாங்கிக் கொடுத்துருங்க'' என்றேன் கணவரிடம். பாத்ரூமில் இருந்து வேகமாக வந்த என் குட்டி, ''ச்சீ சீ... நான் பேபி பிரஷ்ல துலக்க மாட்டேன். நான் எதுக்கு பேபி யூஸ் பண்ணின பிரஷை யூஸ் பண்ணணும்?'' என்றான் கோபமாக. பக்கத்து வீட்டுப் பாப்பாவின் பெயர் பேபி என்பதுதான், குட்டி சாரின் கோபத்துக்குக் காரணம். அவனின் கோபம் கலந்த அழுகை, காலை டென்ஷனிலும் வீட்டைச் சிரிப்பால் நனைத்தது!

- எஸ்.லோகநாயகி, அவ்வையார்பாளையம்

கௌபாய்... டாக்பாய்!

குட்டீஸ் குறும்பு !

ஒருநாள் என் மகள், தன் தாத்தாவுடன் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு சுட்டி ஒவ்வொரு சேனலாகத் தாவிக்கொண்டே இருக்க, ''பாப்பு... அந்த கௌபாய் படத்தையே போடும்மா. சூப்பரா இருக்கும்...'’ என்றார் தாத்தா. உடனே. ''அதென்ன தாத்தா கௌபாய்..?'' என்று ஆர்வமாகக் கேட்டாள் பேத்தி. ''ஃபாரின்ல மாடு மேய்க்குற வேலை பார்ப்பவர்களை அப்படிச் சொல்லுவாங்க'' என்று விளக்கமளித்தார் அவர். உடனே இவள், ''தாத்தா... பக்கத்து வீட்டு அங்கிள் தினமும் காலையில 'டாக்’-ஐ கூட்டிப் போராரே... அப்ப அவர் டாக் பாயா..?'' என்று கேட்க, எப்போதும் கொஞ்சம் இறுக்கமாகவே இருக்கும் தாத்தாவே சிரிக்க... வீடே சிரித்தது. பிறகு, 'அப்படியெல்லாம் சொல்லக் கூடாது’ என்று குட்டியிடம் அறிவுறுத்தவும் தவறவில்லை!

- சுமித்ரா பிரேம்குமார், சென்னை-11

'இருபது விரலுக்கு எங்க போறது?!’

குட்டீஸ் குறும்பு !

என் டியூஷனில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு வாண்டு, ''மிஸ், கணக்குப் போட்டுக் கொடுங்க...'' என்றான். அப்போது நான் உயர் வகுப்பு மாணவர்களுக்கு பிஸியாக பாடம் நடத்திக் கொண்டிருந்ததால், ''தாத்தாகிட்ட போய் சிலேட்டைக் கொடு, அவர் போட்டுக் கொடுப்பார்'' என்று என் அப்பாவிடம் அனுப்பினேன். அவரும் சிலேட்டை வாங்கி '20 40 = ?’ என்று கணக்குப் போட்டுக் கொடுத்துள்ளார். வாங்கிப் பார்த்தவன், ஒரு மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டான். மொத்த டியூஷனும் பதறி, ''என்னடா ஆச்சு..?'' என்று அவனிடம் ஓட, ''மிஸ்... என் கையில இருக்கிறதே 10 விரல்தான். ஆனா, தாத்தா 20 விரல் வெச்சு கூட்டல் கணக்குப் போடச் சொல்லி இருக்காரே... 20 விரலுக்கு நான் என்ன பண்ணுவேன்..?'' என்று சோகமாகக் கேட்க, டியூஷனே சிரிப்பால் குலுங்கியது. அவனது ஸ்லேட்டை வாங்கி, சிங்கிள் டிஜிட் கணக்குப் போட்டுக் கொடுத்த பின்தான் அவன் சிரித்தான்!

- விஜயலட்சுமி, திருக்கழுக்குன்றம்