ஸ்பெஷல் 1
Published:Updated:

கேபிள் கலாட்டா !

காமெடி குண்டர் பாலா !ரிமோட் ரீட்டா படங்கள்: கே.ராஜசேகரன், வீ.நாகமணி

##~##

ஜெயா டி.வி-யில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்  கிழமைகளில் ஒளிபரப்பாகுற 'தமிழகத்தின் சமையல் சாம்பியன்’ நிகழ்ச்சி, பல சுற்றுகளைக் கடந்து இப்போ ஃபைனலை நெருங்கிட்டு இருக்கு. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குற கிரித்திகாவுக்கு ஃபேர்வெல் ஃபீலிங்!

''போன வருஷம் ஆகஸ்ட் மாசம் 'சமையல் சாம்பியன்’ ஆடிஷன் ஸ்டார்ட் செய்து... திருச்சி, கோவை, சென்னைனு ஊர் ஊரா சுத்தினப்போ... குடும்பத் தலைவி, யூத் கேர்ள்ஸ், கேட்டரிங் ஸ்டூடன்ஸ்னு கலந்துகட்டி நிகழ்ச்சிக்கு 35 போட்டியாளர்கள் தேர்வானாங்க. சமையலுக்கு ஸ்பெல்லிங் மட்டுமே தெரிஞ்ச எனக்கு, இப்போ நூற்றுக்கணக்கான டிஷ்கள் மெமரி லாக்கர்ல இருக்கற அளவுக்கு நிறைய கத்துக்கிட்டேன். செஃப் சௌந்தர்ராஜன், கௌசிக், மனோகர் கூட்டணியும், போட்டியாளர்களும்தான் அதுக்குக் காரணம்.

தஞ்சாவூர் சமையல், செட்டிநாடு சமையல், கொங்கு சமையல், பஞ்சாபி சமையல்னு பல சுற்றுகளைக் கடந்து,  செமி ஃபைனல் முடிஞ்சு, 6 நபர்களோட நிகழ்ச்சி இப்போ ஃபைனலை நெருங்கிடுச்சு. ஹேப்பி ஃபேர்வெல் சொல்லு ரீட்டா!''னு சிரிக்கிற கிரித்திகா, பரதநாட்டியம், கவுன்சிலிங் சைக்காலஜினு ரெண்டு லயும் மாஸ்டர் டிகிரி படிச்சுட்டு இருக்காங்க!

கேபிள் கலாட்டா !

''ஜெயா டி.வி-யில ஒளிபரப்பாகிற 'காலை மலர்’ நிகழ்ச்சி மூலமா சேனல் என்ட்ரி கொடுத்த நான், அப்படியே 'லேடீஸ் ஸ்பெஷல்’, 'தகதிமிதா’, 'அதிரடி ஆட்டம்’, 'சமையல் சாம்பியன்’னு சேனலோட குத்தகை காம்பயராவே ஆயிட்டேன். இந்த வெற்றிக்குப் பின்னால இருந்து வழிகாட்டுறது, என்னோட

கேபிள் கலாட்டா !

அம்மா ராதிகா சுரஜித். அவங்கதான் 'தகதிமிதா’ நிகழ்ச்சியோட டைரக் டர்ங்கிறது, டெயில் பீஸ்!''னு கிரித்திகா நிறுத்த,

''ஃபைனல்ல புதுமையான டிஷ் செய்து ஜெயிக்கிறவங்களுக்குப் பரிசு மட்டுமில்ல... பெரிய ஸ்டார் ஹோட்டல்ல அந்த டிஷ் முக்கிய 'மெனு’வா ஆகப்போற பெருமையும் கிடைக்கப் போகுது!''னு தகவல் தந்தார் நிகழ்ச்சியோட இயக்குநர் சிவா!

'பிரிவோம் - சந்திப்போம்’ (விஜய் டி.வி), 'தங்கம்’ (சன் டி.வி), 'இருமலர்கள்’, 'கால பைரவர்’ (ஜெயா டி.வி)னு ரிமோட்ல எல்லா பட்டன்களையும் கலக்கிட்டிருக்குற ஸ்ரீதேவி, ரொம்ப பிஸி!

''ஆமாம் ரீட்டா... மாசத்துல 25 நாள் ஷூட். உனக்குத் தான் தெரியுமே... மீடியாவைப் பொறுத்தவரைக்கும் நம்ம பக்கம் காத்து அடிக்கும்போதே பறந்துக்கணும். அதான் இந்த நான்-ஸ்டாப் ஓட்டம்!''னு படபடக்கிற ஸ்ரீதேவி, ஓட ஆரம்பிச்சது, பெரிய திரையில.

''நாலு வருஷத்துக்கு முன்ன 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்துல தனுஷ§க்கு தங்கச்சியா ஒரு சின்ன ரோல்ல ஆரம்பிச்சது என் கேரியர். இடையில பி.எஸ்சி, ஹோம் சயின்ஸ் முடிக்க கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டேன். கோர்ஸ் முடிஞ்ச கையோட சேனல் பக்கம் வந்துட்டேன். தெலுங்கு, தமிழ்னு ரெண்டு ஏரியா சீரியல் ரசிகர்களுக்கும் ஸ்ரீதேவியைத் தெரியும். ஆரம்பத்துல, 'ஸ்ரீதேவியா... அழுகாச்சி பொண்ணு!’னு இருந்த முத்திரை மாறி... இப்போ காமெடி, நெகடிவ், சென்ஸிட்டிவ்னு பல கேரக்டர்கள்லயும் அசத்துறேன்ல''னு பூரிச்சாங்க ஸ்ரீதேவி.

விஜய் டி.வி-யின் 'கனா காணும் காலங்கள்’ தொடர்ல 'பப்ளி’ பாலா கேரக்டர்ல கலக்குறார் பாலசரவணன். ''குசும்பு செய்றது, வெட்டி வம்புக்குப் போறது, ஆட்டைய கலைக்கறதுனு காமெடி கவுன்ட்-டவுன் கொடுக்குற என்னைய, 'பேட் பாய்’ லிஸ்ட்ல சேர்க்காம... உன்னோட ஃப்ரெண்ட்ஸ் வட்டத்துல சேர்த்துக்கிட்டதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ரீட்டா!''னு கை கொடுத்தார் பாலசரவணன்.

கேபிள் கலாட்டா !

''மதுரைக்கு பக்கத்துல இருக்குற பரவைதான் என்னோட ஊரு. யெஸ்... நம்ம 'பரவை’ முனியம்மா பாட்டியோட ஊரேதான்! ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் 'ஹெல்ப்’ பண்ண, ப்ளஸ் டூ பாஸாகி, இன்ஜினீயரிங்

கேபிள் கலாட்டா !

காலேஜ்ல சேர்ந்தேன். 2009-லயே நான் பாஸ் அவுட் ஆகியிருக்கணும். ஆனா, இன்னும் அரியர்ஸ் தொடர்கதையா இருக்கு.

'கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்’ ஆடிஷனுக்காக விஜய் டி.வி. எங்க காலேஜுக்கு வந்தாங்க. அதுல செலக்ட் ஆகி, அப்பா, அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு சென்னைக்கு ரயிலேறிட்டேன். தொடர்ந்து விஜய் டி.வி. ரமணன், ரவிக்குமார், டைரக்டர்ஸ் ஜெரால்டு, குமாரராஜானு பலரும் ஆசீர்வதிக்க, 'கனா காணும் காலங்கள்’ வாய்ப்புக் கிடைச்சு, கலகலனு போயிட்டிருக்கு!''னு சொன்ன பாலாவோட அடுத்த கோல்..?

''அதுவா... 'பாலாவுக்குள் உறங்குகிறது ஒரு டைரக்டர் கனவு’னு ஒரு வரி எழுதிவிடேன் ப்ளீஸ்... உன் பேனா முகூர்த்தம் பலிக்கட்டும்!''னு கலகலனு முடிச்சாரு பாலா.

காமெடி குண்டர்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா !

150

குக்கிங் இனி ஈஸி!

''ஜெயா தொலைக்காட்சியில் செவ்வாய்க்கிழமைகளில் மாலைதோறும் 'மெனு ராணி' செல்லம் நடத்தும் சமையல் புரோகிராம்... அசத்தலாக இருக்கிறது. அவர் சமையலைக் கற்றுத் தரும் பாணியே சூப்பர்! ஒவ்வொன்றையும் அவர் செய்து காட்டுவதோடு, அவ்வப்போது கொடுக்கின்ற டிப்ஸுகளும் ஆழமாக மனதில் பதிந்து, சமையலில் நாம் கில்லியாகும் அளவுக்கு தயார்படுத்துகிறது என்பது உண்மை'' என்று புகழ்கிறார் சென்னையைச் சேர்ந்த ராஜி கணேசன்.

அட... இது புதுசு!

''சன் டி.வி-யின் 'தாமரை' தொடரில், வந்த ஒரு டயலாக், கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டது. 'சாமி பேருக்கு அர்ச்சனை செய்யுங்கள்' என்கிறாள் தாமரை. அர்ச்சகரோ, 'ஸ்வாமி நமக்கு நல்லது செய்கிறார். அதற்காக நன்றி சொன்னால் மட்டும் போதும்... அர்ச்சனை எல்லாம் பண்ணக் கூடாது' என்று பதில் தருகிறார். இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டிராத ஒரு பதில் இது. உண்மையிலேயே யோசிக்க வேண்டிய பதிலும்கூட என்பது என் கருத்து'' என்று ஆமோதிக்கிறார் கும்ப கோணத்தைச் சேர்ந்த ஜி.விஜயலட்சுமி.