ஸ்பெஷல் 1
Published:Updated:

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

அன்புமிக்க வாசகப் பெருமக்களே...

##~##

'தானே’ புயல் நிவாரணத் திட்டத்துக்காக விகடன் குழுமம் விறுவிறுப்பாகக் களப் பணியாற்றிவருவதை, விகடன் குழும இதழ்கள் வாயிலாகவும் www.vikatan.com/thane வலைதளம் வாயிலாகவும் உங்களுக்குத் தொடர்ந்து தெரிவித்துவருகிறோம். விகடனோடு கைகோத்து இந்த நிவாரணப் பணிகளுக்கு வாசகர்களாகிய நீங்கள் உலகம் முழுவதிலும் இருந்து தொடர்ந்து நிதி உதவி அளித்துவருகிறீர்கள்.

மார்ச் 14-ம் தேதி நிலவரப்படி உங்களிடம் இருந்து எங்களுக்கு வந்திருக்கும் மொத்த நிதி

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

1,09,25,315.

இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆன்லைன்/ஆர்.டி.ஜி.எஸ். மூலம் வங்கிக் கணக்கில் நிதியை அனுப்பிய வாசகர்களில் இன்னும் பலர் தங்கள் விவரங்களை அளிக்கவில்லை. அவ்வாறு விவரம் பெறப்படாத வாசகர்கள் அனுப்பியுள்ள தொகை

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

19,96,005.

மேற்கண்ட வாசகர்கள், உடனடியாகத் தங்கள் தொடர்பான விவரங்களைக் கீழே அளித்துள்ள படிவத்தில் நிரப்பி தபால் மூலமோ அல்லது thane@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்க வேண்டுகிறோம். இதற்கான ரசீதை எங்களிடம் இருந்து பெற்று, 2011-12ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிவிலக்கையும் இதன் மூலம் தாங்கள் பெற முடியும் என்பதை நினைவூட்டுகிறோம்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

இந்த வாசகர்களில் சிலர், www.vikatan.com/thane இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தங்கள் பெயர், விவரங்கள் இன்னும் இடம் பெறாதது குறித்து மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் விசாரித்துவருகிறார்கள். வங்கியில் இருந்து விவரம் பெற்றதும் - அல்லது நிதி அனுப்பிய வாசகர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்ததும் - அவர்களுடைய பெயர் மற்றும் ஊர் விவரங்களும் குறிப்பிட்ட அந்த இணையதள முகவரியில் உள்ள பட்டியலில் இடம்பெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அது வரை, நிர்வாகரீதியிலான - தவிர்க்க இயலாத இந்தத் தாமதத்தைப் பொறுத்தருள வேண்டுகிறோம்.