ஸ்பெஷல் 1
Published:Updated:

சிறுவாடுக்கு ஜே...

ஆடிப்போன அமெரிக்கா... கைகொடுத்த இந்தியாநாச்சியாள்

##~##

ஒரு குடும்பத்தின் நிம்மதியை நிர்ணயிப்பதில் அன் புக்கு அடுத்த இடம்... பணத் துக்குத்தான். பார்க், பீச், சினிமா, சுற்றுலா என சந்தோ ஷத்தை அனுபவிக்கும் எல்லை, நீண்டுகொண்டே போகிறது. அழகிய வீடு, சொகுசு கார் என வசதிகளின் திசை வளர்ந்து கொண்டே போகிறது.

'அட வாழ்க்கைனா இப்படித்தான் அனுபவிக்கணும்’ என்று அடுத்தவர் நினைக்கும்படி வாழும் வாழ்க்கை கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், யாருடைய வருமானத்துக்கும் இங்கு உத்தரவாதமில்லையே! ஒருவேளை சில எதிர்பாராத சூழல்களால் திடீரென பொருளா தார நெருக்கடி ஏற்படலாம், அந்த பாதிப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று பெரும் இடி விழுந்தால்..?

அப்படியான ஓர் அதிர்வலைகளை ஏற்படுத் திய, நிம்மதியைக் குலைத்த இடி... அமெரிக்காவில் 2008-09-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி (ஸிமீநீமீssவீஷீஸீ). அது இந்தியாவிலும் பிரதிபலித்தது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்த பலர் இந்தப் பொருளாதாரச் சரிவால் பாதிக்கப்பட்டனர். ஆனால், அதிலிருந்து அவர்களை மீட்டது நமது கலாசாரத்தோடு ஒன்றிய சேமிப்பு பழக்கம்தான். அவர்களே சொல்கிறார்கள் தங்கள் அனுபவத்தை...

''அந்த காலகட்டத்தை நினைத்தால் இப்போதும் பயமா இருக்கு. எப்படியோ ரொம்ப கஷ்டப்படாம தப்பிச்சோம்னா, அதுக்குக் காரணம் என் மனைவியும் அம்மாவும்தான்!'' என்று பெருமையோடு சொல்கிறார் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் கண்ணன்.

சிறுவாடுக்கு ஜே...

''நான் ஐ.டி துறைக்கு வந்து அஞ்சு வருஷம் கழிச்சு தான் கல்யாணம் செய்துகிட் டேன். பேச்சிலரா இருந்தப்பவும் வாங்குற சம்பளத்தை கன்னாபின்னானு செலவழிக்காம... அம்மா கிட்ட கொடுத்துடுவேன். அவங்க அதை உள்ளுர் பேங்க்ல பத்திரமா சேமிச்சு வெச்சுருந்தாங்க. கல்யாணத் துக்குப் பிறகு, அமெரிக்கா வந்துட்டேன். கொஞ்ச வருஷத்திலேயே உலகப் பொருளாதார நெருக்கடி நம்ம வீட்டு வரவேற்பறையில அனுமதி இல்லாமலேயே வந்து 'ஜம்’னு உட்கார்ந்துடுச்சு. அமெரிக்க வங்கிகள் திருப்பிக் கட்டுற தகுதி இருக்கவங்க, இல்லாதவங்கனு எல்லாருக்கும் லோன் கொடுக்க, கடன் வாங்கியவங்க அதை திருப்பி கட்ட முடியாததாலயும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தை சரிவுனு பல காரணங்களால யும் பொருளாதார நெருக்கடி.

கடும் பணச் சிக்கல் எனக்கும் உண்டாச்சு. எதிர்காலத்தைப் பத்தின பயம் விரட்டுச்சு. ஆனா, 'நாம பாதுகாப்பாதான் இருக் கோம்’னு எனக்கு ஆறுதல் சொன்னாங்க என் மனைவி யமுனா. புரியாம அவங்கள நான் பார்க்க... அமெரிக்காவுல இருந்தா லும் ஷாப்பிங், அவுட்டிங்னு பணத்தை விரயம் பண்ணாம, தங்கத் தமிழச்சியா என் சம்பளத்தை எல்லாம் பத்திரமா சேமிச்சுட்டு வந்ததை அப்போதான் என்கிட்ட சொன்னாங்க. தவிர, நகைகள், ஊர்ல ஒரு நிலம்னு எதிர்காலத்துக்கான முதலீடுகளையும் சாமர்த்தியமா செஞ்சுருந்தாங்க. நிரந்தரமா வேலை பறிபோயிருந்தாலும், அவங்களும், அம்மாவும்

சிறுவாடுக்கு ஜே...

சேர்த்திருந்த சேமிப்பு களை வெச்சே புதுசா ஒரு வாழ்க்கையை இந்தியாவுல தொடங்கி சமாளிச்சிசுருக்க முடியும்'' என்று உருகி உருகிச் சொன்ன கண்ணன்,

''அடுக்குப் பானையிலயும் அஞ்சறைப்பெட்டியிலயும் நம்ம பாட்டிகள் சிறுவாடுனு சேமிச்சு வெச்சாங்க. இப்ப இருக்குற தலைமுறை கோல்ட் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட்னு சேமிச்சு வைக்கிறாங்க. இந்த பரம்பரை பழக்கம்தான், உலக அளவுல நாம தலை நிமிர்ந்து நிக்கறதுக்கு காரணமா இருக்குது; இருக்கும்!'' என்று தன் அனுபவம் பகிர்ந்தார்.

சென்னையில் உள்ள ஓர் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் ரெங்கராஜின் அனுபவம், இதற்கு எதிர்மாறாக இருக்கிறது. அவரை ரொம்பவே படுத்தியிருக்கிறது பொருளாதார நெருக்கடி. அதைப் பற்றி பேசிய அவருடைய மனைவி சியாமளா,

''என் கணவர் ரெங்கராஜ், ஐ.டி ஃபீல்ட். நான் ஹோம்மேக்கர். அமெரிக்க ரெஸஷென் எங்களை ஆட்டிப் படைச்ச மனபயம் இருக்கே... அதை வார்த்தையால சொல்ல முடியாது. வீடு, கார்னு எல்லாம் லோன் போட்டு வாங்கி இருந்தோம். ஒருவேளை இவருக்கு வேலை போயிட்டா என்ன பண்றதுனு எப்பவும் பயமாவே இருக்கும். கையில சேமிப்புனு பெருசா எதுவும் கிடையாது. எங்களுக்கு வேலை போற மாதிரி எதுவும் நடக்கலனாலும்... எங்க மேலயும் கை வெச்சுது விதி. அவர் பார்த்துட்டு இருந்த புராஜக்ட் கேன்சல் ஆயிடுச்சு. வேற புராஜக்ட்டுக்கு மாறினார். கடன் கட்டணுமே? பெரும்பாடுபட்டு பல மாதங்களுக்கு நிலைமையைச் சமாளிச்சோம். அனுபவம் தந்த பாடம்... இப்போவெல்லாம் வாங்கற சம்பளத்துல சில ஆயிரங்களை சேமிப்புக்குனே இன்வெஸ்ட் பண்றோம். பிள்ளைகளின் எதிர்காலம் அம்மா, அப்பா சேமிப்புலதானே இருக்கு?'' என்றார் ஒரு படிப்பினையை உணர்ந்த பெருமிதத்தோடு!

கையில் சேமிப்பு... மனதில் நிம்மதி!