பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே !

அண்மையில் சென்னை புத்தக் காட்சி கனஜோராக நடந்து முடிந்தது. அந்த வளாகத்தில் வளைய வந்தபோது, கண்ணுக்கும் மனசுக்கும் நிறைவாக இருந்த முதல் விஷயம்... படையெடுத்த புத்தகப் பிரியர்களில் கிட்டத்தட்ட பாதிபேர் பெண்கள் என்பதுதான்!

##~##

டி-ஷர்ட், ஜீன்ஸில் வந்த நவநாகரிக யுவதிகளாகட்டும்... மடிப்பு கலையாமல் காட்டன் சாரியில் வந்த பாரம்பரிய ஸ்டைல்  பெண்களாகட்டும்... ஏதோ இனிப்புப் பெட்டியைத் திறந்து வகைவகையான வெரைட்டியில் தேடி எடுத்து சுவைப்பது போல, ஆசை ஆசையாக புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து முடிந்தவரை அள்ளிக் கொண்டார்கள்.

கணவரிடம் சண்டை போட்டு புத்தகம் வாங்கிய மனைவி... அப்பாவின் கை பிடித்து ஒவ்வொரு ஸ்டாலாக இழுத்துச் சென்று ஆசை தீர நூல்களை வாங்கி மார்போடு அணைத்துக் கொண்ட சிறுமி... இப்படி அறிவுலகத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டுபவர்களாக பெண்கள் போட்டிப் போட்டு முன்னேறுவது எத்தனை திருப்தியான விஷயம்!

தோழியரே... நமக்கான உலகம் எந்த அளவுக்கு ஓய்வு, ஒழிச்சல் இல்லாததோ... அந்த அளவுக்கு அற்புதமாக இளைப்பாறும் வாய்ப்புகளும் கொண்டது. அதிலும் புத்தகம் எனும் புது உலகத்துக்குள் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து புறப்பட்டால்... பசுமை படர்ந்த மலைவாசஸ்தலத்தில் புத்துணர்வு பெற்று திரும்பிய எனர்ஜி நிச்சயம்!

குழந்தைகளுக்கு முழுவருட பரீட்சை நெருங்குகிறது... அவர்களை படிக்க வைக்கவும், கூடவே விழித்திருந்து தலைகோதி விடவும் ஏகப்பட்ட எனர்ஜி தேவை இப்போது உங்களுக்கு! 'டூ இன் ஒன்'னாக அவர்களோடு சேர்ந்து கூடுதலாக நேரம் ஒதுக்குங்கள் உங்கள் படிப்புக்கும்!

தாய் பெறுகிற அறிவுச் செல்வம் அத்தனையுமே குழந்தைகளுக்கு அள்ளிக் கொடுக்கத்தானே!

உரிமையுடன்

நமக்குள்ளே !


ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு