'எக்ஸ்’ வெள்ளித்திரை ஹீரோயின்ஸ் சின்னத்திரைக்கு சேவை செய்ய வர்ற லிஸ்ட்ல லேட்டஸ்ட் என்ட்ரி... ரோ ரோ ரோஜா! ஒரு காலத்துல தமிழ்நாட்டைக் கலக்கின கனவுக் கன்னி, இப்போ 'ஜீ தமிழ்’ சேனலோட 'லக்கா கிக்கா’ கேம் ஷோ ஆங்கர்! ஏவி.எம். செட்ல ஷூட்டிங்ல இருந்தவங்ககிட்ட 'வெல்கம் மேம்!’ சொன்னேன்.

''ஹாய் ரீட்டா!''னு கலகலனு பேச உட்கார்ந்தாங்க ரோஜா!

''நல்லா ஸ்லிம் ஆகிட்டீங்களே!''னு ஆச்சர்யமாக் கேட்டா, சந்தோஷமாச் சிரிக்கிறாங்க ரோஸ்.

''என் பொண்ணு அன்ஷ§ மாளிகாவுக்கு ஒன்பது வயசு. பையன் கிருஷ்ண கௌசிக், யு.கே.ஜி படிக்கிறார். முன்னெல்லாம் அவங்க கூடவே, அவங்களுக்காகவே நிறைய நேரம் செலவழிப்பேன். அதனால என் மேல கவனம் செலுத்த முடியாம போச்சு. இப்போ அவங்க படிப்பு, ஸ்போர்ட்ஸ், என்டர்டெயின்ட்மென்ட்னு என்னைவிட பிஸியாயிட்டாங்க. அதனால அப்பப்ப கிடைக்கிற டைம்ல சின்னச் சின்ன எக்ஸர்சைஸ், டயட்னு கேர் எடுத்துக்குறேன். அதனால உடம்பை மறுபடியும் ஃபிட்டா கொண்டு வர முடியுது!''னு மறுபடியும் தன்னோட அக்மார்க் சிரிப்பைக் கொடுத்தாங்க.

''குடும்பம், அரசியல், மீடியானு மூணு குதிரை சவாரி பண்றது சிரமமா இல்லையா..?''

''சின்ன வயசுல இருந்தே, ஒரு இலக்கை தீர்மானிச்சுட்டா... அதுக்காக களத்துல இறங்கி முடிஞ்சவரை முயற்சிக்கிற நல்ல பழக்கம் எனக்கிருக்கு ரீட்டா. 'இது நம்மால முடியும்’னு நம்பிக்கை வெச்சா, எதையும் முடிச்சுடலாம். 'முடியுமா..?’னு யோசிச்சா, கஷ்டமாயிடும். குடும்பம், அரசியல், மீடியா... ஒண்ணை ஒண்ணு டிஸ்டர்ப் செய்யாம என்னால் கொண்டு செலுத்த முடியும்னு நான் நம்புறேன்!''னு கான்ஃபிடன்ட்டா சொன்ன ரோஜாகிட்ட,

''இது கேம் ஷோ சீஸன். உங்க ஷோ பத்தி சொல்லுங்க...''னு கேட்டா, பிரகாசமாகறாங்க.

''இதுக்கு முன்ன தெலுங்கு சேனல்ல 'மாடர்ன் மகாலட்சுமி’னு ஒரு ஷோ நடத்தியிருக்கேன்.

தமிழ்லயும் அப்படி ஒரு சுவாரஸ்யமான ஷோ நடத்துற வாய்ப்பு, 'ஜீ தமிழ்’ சேனல் மூலமா கிடைச்சுருக்கு. இந்த நிகழ்ச்சியில கலந்துக்குற ஒவ்வொரு போட்டியாளருமே வெற்றியாளர்தான். ஷோவில் இருந்து வெளியேறினாகூட கையில் ஒரு நல்ல தொகையோடதான் போவாங்க!''னு புரோகிராம் புரமோட் பண்ணினவங்ககிட்ட,

''சீரியல் ஹீரோயின் அவதாரம் சீக்கிரமேவா மேம்..?''னு கேட்டா, சிரிக்கறாங்க.

''இப்படி ஒரு கேம் ஷோவுக்கு ஆங்கரா வொர்க் பண்ணும்போது, ரொம்ப ஜாலியா இருக்கு. ஆனா, சென்டிமென்ட், கண்ணீர்னு பழைய ஃபார்முலாவுல பிழியப் பிழிய அழுதுட்டு சீரியல்ல நடிக்க முடியுமானு எனக்குத் தெரியல''னு கமா போட்டவங்க,

''போன ஷெட்யூல் ஷூட் போய்க்கிட்டிருந்தப்போ, பக்கத்து ஃப்ளோருக்கு குஷ்பு அவங்களோட ஷூட்டிங்க்கு வந்திருக்காங்க. இங்க நான் இருக்கேன்னு தெரிஞ்சவொடன, நேரா வந்துட்டாங்க. என்னோட திக் ஃப்ரெண்ட் அவங்க. நான் நிகழ்ச்சி நடத்துறதப் பார்த்துட்டு, 'சூப்பர்டா!’ பாராட்டினாங்க. கால ஓட்டத்துல இப்படியான சந்தர்ப்பங்கள், சந்திப்புகள் அப்பப்போ கிடைக்கிறது சந்தோஷமான விஷயம் ரீட்டா. ஐ’ம் ரொம்ப ஹேப்பி!''

- அந்த ஹிட் உதடு விரிச்சு சிரிச்சாங்க ரோஜா!

எவர் ஃப்ரெஷ் ரோஜா!

'சாராவுக்காக!’

'பாசம்’, 'நான் அவள் இல்லை’னு தமிழ்க் குடும்பங்களுக்கு அறிமுகமான இந்திரஜாவை, ரொம்ப நாளா சேனல் ஏரியா பக்கம் காணோம். இப்போ மறுபடியும் 'ஆண்பாவம்’ சீரியல் மூலமா ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறவங்ககிட்ட, 'இவ்ளோ நாளா எங்க போனீங்க..?’னு கேட்டா, தன்னோட மூன்றரை வயசு சாரா பாப்பாவைக் காட்டுறாங்க.

''இவங்களுக்காகத்தான் இந்த பிரேக். இப்போ மறுபடியும் களத்துல இறங்கிட்டேன். இனிமே நாம் அடிக்கடி சந்திக்கலாம் ரீட்டா!''னு உற்சாகமாச் சொன்னாங்க இந்திரஜா.

'ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியா இந்த இந்திரஜா நடிச்சது ஞாபகம் இருக்குதானே?!

கத்தரிக்கோலை கையில் எடுங்கள்!

''சமீபகாலமாக வரும் டி.வி. சீரியல்கள், பெரும்பாலும் பெண்மைக்கு பெருமை சேர்ப்பதாகவே இல்லை. பெண்களின் குணாதிசயங்களுக்கு மாசு கற்பித்து... பார்ப்போரது உள்ளங்களை நொந்து போகவே செய்கின்றன. இத்தகைய சீர்கேடுகளை உடனே தடுத்து நிறுத்திட, சீரியல்களுக்கு தணிக்கை முறையை கொண்டு வர வேண்டும்'' என்று ஆவேசமாகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த என்.ராஜலட்சுமி.

சமூகம் எங்கே செல்கிறது?

''அது செல்போன் விளம்பரம்... வயதான ஒருவர், கனமான பொருளுடன் மாடிப்படியில் ஏற முயற்சிப்பார். அப்போது அவரை வழிமறிக்கும் நாய் ஒன்று அவரை மேற்கொண்டு நகர விடாமல் தடுக்கும். அவர் மேலும் கீழுமாக பார்த்துக்கொண்டு நிற்க, மாடிப்படியின் உச்சியில் விடலைப் பையனும், ஒரு சிறுமியும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது 'தடையில்லாத பேச்சுகள்’ என்கிற டைட்டில் வரும். சமூகம் எங்கே செல்கிறது? ஏற்கெனவே பெரியவர்களுக்கான மரியாதை குறைந்து கொண்டிருக்கும் சூழலில்... இதுபோன்ற விளம்பரங்கள்... சிறுவர் - சிறுமிகளின் மனதை மேலும் மேலும் கெடுக்கத்தானே செய்யும். விளம்பரம் செய்வோர் இதை எல் லாம் உணரமாட்டார்களா?'' என்று சாடுகிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த உமாதேவி பலராமன்