Published:Updated:

கலாய்ச்சுட்டாங்களாமாம்... சமாளிச்சுட்டாங்களாமாம் !

தொகுப்பு: நாச்சியாள், வே.கிருஷ்ணவேணி, ம.மோகன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
கலாய்ச்சுட்டாங்களாமாம்... சமாளிச்சுட்டாங்களாமாம் !

ஜனனி ஐயர், நடிகை

கலாய்ச்சுட்டாங்களாமாம்... சமாளிச்சுட்டாங்களாமாம் !

''இன்ஜினீயரிங் படிச்சுட்டு இருந்தப்போ... கேம்பஸ் இன்டர்வியூல கலந்துக்கிட்டேன். அங்க இருந்த ஹெச். ஆர்., 'உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’னு சொல்ல, நான் மாடலிங் பண்ணிட்டு இருக்கிறதைச் சொன்னேன். உடனே அவர் சட்டுனு ஸ்ட்ரிக்ட் ஆகி, 'ஒரு வேளை இந்த வேலை கிடைச்சா, மாடலிங்கை விடுவீங் களா? இல்லை, மாடலிங்காக வேலையை விட்டிருவீங் களா?’னு கேட்டார். என்னைத் தடுமாற வைக்கறதும், கோபப்படுத்துறதும்தான் அவரோட எண்ணமா இருந்தது. ஆனாலும் நான் நெர்வஸா ரியாக்ட் பண்ணாம, 'இட்ஸ் ஸோ சிம்பிள் சார்... வேலை பாதிக்காம மாடலிங் பண்ணுவேன்!’னு சொல்லிட்டு வந்துட்டேன். மனசுக்குள்ள 'இந்த மனுஷன் நம்மள செலக்ட் பண்ண மாட்டார்’னு 100% நம்பினேன். ஆனா 208 ஸ்டூடன்ட்ஸ் கலந்துகிட்ட இன்டர்வியூல செலக்ட் ஆன 8 பேருல, நானும் ஒருத்தி! ஸோ கூல்ல?!''

சுசித்ரா, பாடகி

கலாய்ச்சுட்டாங்களாமாம்... சமாளிச்சுட்டாங்களாமாம் !

''ஃபைனல் இயர் படிக்கும்போது கேம்பஸ் இன்டர்வியூல செலக்ட் ஆகி சிங்கப்பூர்ல இருக்குற பெரிய விளம்பர நிறுவனத் துல வேலை கிடைச்ச சந்தோஷத்துல இருந்த நேரம். விசா வேலைகள்ல கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன். விசா கைக்கு வர தாமதமாகி, அதனால அந்த வேலையும் கைவிட்டுப் போச்சு. வீட்ல உள்ளவங்க செம கோபத்தோட என்னைத் திட்ட, 'இது என்ன பெரிய வேலை... சுசி, இதைவிட சூப்பர் வேலைக்குப் போவா பாருங்க’னு அவங்களை கூல் பண்றதுக்காக நான் சொன்னாலும், என் மைண்ட் வாய்ஸும் எனக்கு ஏதோ பெரிய ஃப்யூச்சர் இருக்கிறதாதான் சொல்லிச்சு. இதோ... அது இன்னிக்கு நடந்துருச்சு. அன்னிக்கு விசா கிடைக்காததுக்கு நான் மூட் அவுட் ஆகி மூலையில் உட்கார்ந்திருந்தா, இன்னிக்கு இந்த சிங்கர் சுசித்ராவை என்னாலயே பார்த்திருக்க முடியுமா..?!''

சந்தானம், நடிகர்

கலாய்ச்சுட்டாங்களாமாம்... சமாளிச்சுட்டாங்களாமாம் !

''2004-ல 'மன்மதன்’ படம் நடிக்க ஆரம்பிச்ச பிறகு, விஜய் டி.வி-யில 'லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் நடிக்கறதை நிறுத்திட்டேன். அப்போ ஒரு பொண்ணு, 'ஏன் சார் இப்போ எல்லாம் லொள்ளு சபாவுல நீங்க வர்றது இல்ல?’னு கேட்டுச்சு. 'இப்போவெல்லாம் எட்டு மணிக்கே நான் தூங்கிடறேன்... அதனாலதான் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகற அந்த நிகழ்ச்சிக்கு வரமுடியலம்மா’னு சொன்னேன். 'சார்... இது கி.மு மொக்கை சார்... வேறு ஏதாச்சும் புதுசா டிரை பண்ணுங்க’னு சொன்னதோட, தொடர்ந்து அந்தப் பொண்ணு எனக்கு பல பல்ப்ஸ் கொடுத்துட்டே இருந்துச்சு. 'எனக்கேவா..?’னு நினைச்சுக்கிட்டு, 'இவங்க என்னைக் கலாய்ச்சுட்டாங்களாமாம்!’னு அதுக்கு ஒரு பூமராங் பல்பு கொடுக்க... பொண்ணு அதோட ஆஃப் ஆயிடுச்சு.

அந்த இடத்துல நான் கூல், அந்தப் பொண்ணு வெரி ஹாட். இருந்தாலும், 'கலாய்ச்சுட்டாங்களாமாம்’ங்கிற வார்த்தையை அந்த சந்தர்ப்பத்துலதான் நான் புடிச்சேன். ஸோ, அந்தப் பொண்ணுக்கு தேங்க்ஸ்!''

சமிதா, சின்னத்திரை நடிகை

கலாய்ச்சுட்டாங்களாமாம்... சமாளிச்சுட்டாங்களாமாம் !

''காதல் விஷயத்தை பேரன்ட்ஸ்கிட்ட சொல்றதைவிட, உலகத்துல கிரிட்டிக்கலான சூழல் என்ன இருக்கப் போகுது? நானும் ஸ்ரீயும் ரொம்ப ரொமான்டிக்கா காதலிச்சுட்டு இருந்த சமயத்துல, எங்க வீட்டுல எனக்கு ரொம்ப சின்ஸியரா மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தாங்க. 'ஃப்ரெண்ட்ஸ் மூலமா சொல்லலாமா... நேரடியா சொல்லலாமா?’னு மேட்டரை வீட்டுல ஓபன் பண்றது பத்தி நிறைய திரைக்கதைகளை பிளான் செய்து பார்த்தும், ஒண்ணும் செட் ஆகல. திடீர்னு ஒருநாள் ஸ்ரீயை நேரா வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டேன். 'நீங்க பார்த்துட்டு இருக்குற மாப்பிள்ளை போட்டோஸ்ல இவரோட போட்டோ இருக்கா?’னு நான் ரொம்பக் கூலா கேட்க, வீட்டுல எல்லாருக்கும் அதிர்ச்சி. அப்புறம் எல்லாரையும் கூல் பண்ணி டும் டும் டும் கொட்டிட்டோம்ல?!'

ஞானசம்பந்தன், பட்டிமன்றப் பேச்சாளர்

கலாய்ச்சுட்டாங்களாமாம்... சமாளிச்சுட்டாங்களாமாம் !

''நான் பட்டிமன்றப் பேச்சாளராகறதுக்கு முன்ன, நிறைய மேடை நாடகங்கள் எழுதி, இயக்கி, நடிச்சுருக்கேன். 'ஒரு பெண்ணைப் பார்த்து’ங்கற தலைப்புல ஒரு நாடகம் போட்டோம். கதைப்படி ஒரு நடிகையோட நாய், திடீர்னு ஒருநாள் காணாம போய்டும். அந்த நடிகை, 'நாயைத் தேடிக் கொடுத்தாதான் நடிப்பேன்'னு சொல்லிடுவாங்க. தமிழ்நாடு முழுக்க இருக்கிற நடிகையோட ரசிகர்கள், ஊர்ல இருக்கற ஒவ்வொரு நாயா கொண்டு வந்து, 'இது உங்க நாயா பாருங்க’னு நடிகைகிட்ட கேட்கிற ஸீன். ஊர்க்காரங்களை குஷிப்படுத்த, 'இந்த நாடகத்துல நீங்களும் நடிக்கிறீங்க, உங்க நாயும் நடிக்குது. நீங்க இந்த ஸீன்ல மேடைக்கு வந்து ஹீரோயின்கிட்ட இது உங்க நாயா..?னு கேட்கணும்’னு அறிவிச்சி, ஸீனை சொல்லிக் கொடுத்தோம்.

நைட் நாடகம் ஆரம்பிக்க... ஸ்டேஜுக்குப் பின்னாடி சொறிநாய், வெறிநாய்னு வெரைட்டியா கையில பிடிச்சுட்டு ஒரு பெரிய க்யூவே நிக்குது. அந்த வரிசையை அப்படியே மேடையில ஏத்த, நாய்ங்க எல்லாம் ஒண்ணை ஒண்ணு பார்த்து குரைச்சு, கடிச்சுக்க ஆரம்பிக்க, மேடையே கலவரமாயிடுச்சு. உயிர் பயத்துல உறைஞ்சு போயிருந்த ஹீரோ யினையும் கோ-ஆர் டிஸ்ட்டுகளையும் ஏதேதோ டயலாக் பேசி, அந்த ஸீனை முடிக்க சொல்லிட்டு, நாய் களையும் நாய் ஓனர் களையும் அரும்பாடுபட்டு மேடையைவிட்டு இறங்க வெச்சுட்டு... அடிச்சேன் பாருங்க ஒரு கோலி சோடா கூலா! ஆனாலும் அந்த நாடகத்துல ஓவர் 'நாய்’ஸ்!’

மிர்ச்சி செந்தில், நடிகர்

கலாய்ச்சுட்டாங்களாமாம்... சமாளிச்சுட்டாங்களாமாம் !

''அப்ப... நான், கோயம்புத்தூர் மிர்ச்சி எஃப்.எம்-மில் ஒரு நிகழ்ச்சியோட புரோகிராம் ஹெட். என்னோட டீம்ல இருந்த ஜோட்ஷன், பெனி ரெண்டு பேருக்கும் டிரெய்னிங் முடிச்சு, முதன் முதலா ஒரு பெரிய ஹீரோவோட பேட்டிக்கு அனுப்பி வெச்சோம். ஆர்வமா போனவங்க மூணு மணி நேரத்துக்கும் மேல பேட்டி எடுத்துட்டு வந்த டேப்பை 'எடிட்டிங்’க்கு அனுப்ப... செக் பண்ணினா, அதுல எதுவுமே ரெக்கார்ட் ஆகல. மைக் லைனை தவறா ஜாயின்ட் பண்ணி சொதப்பியிருந்தாங்க பசங்க.

மொத்த டீமும் அப்செட் ஆகி நிக்க... எல்லாரையும் சமாதானப்படுத்தி, அரண்டு போயிருந்த அந்தப் பசங்களுக்கு ஆறுதல் சொன்னேன். 'அந்த ஹீரோகிட்டயே இன்னொரு சான்ஸ் கேட்டுப் பார்க்குறேன்’னு போன் பண்ணினா, நல்லவேளையா அவரும் சிரிச்சுக்கிட்டே மறுபடியும் பேட்டிக்கு ஒப்புக்கிட்டு முடிச்சுக் கொடுத்தார். அவர், நம்ம பிரபு சார்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு