விஜய் டி.வி-யில் புதுசா ஒளிபரப்பாகற 'ஆஹா’ சீரியல் மூலமா, சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்காங்க பானுப்ரியா. 'ஹாய்’ சொல்ல வீட்டுக்குப் போனா.... ''ஹாய் ரீட்டா! நீ வர்றேன்னதும் சீக்கிரம் சீக்கிரமா சமையல் வேலைகளை முடிச்சுட்டு ரெடி ஆனேன். இது

பவர் கட் நேரம்... வராண்டால உட்கார்ந்து பேசலாமா?''னு வெகு இயல்பா பேசின பானு, ஆச்சர்ய ஸ்டார்தான்!

''ஏற்கெனவே... 'சக்தி’, 'பெண்’, 'வாழ்க்கை’னு மெகா சீரியல்களில் நடிச்ச அனுபவம் இருக்கறதால, இப்போ மறுபடியும் சேனல் சூழலுக்கு ஈஸியா பழகிட்டேன். சுரேஷ்கிருஷ்ணாவோட 'ஆஹா’ திரைப்படம் எனக்கு வாங்கிக் கொடுத்த நல்ல பெயர்... ரொம்ப ரொம்ப பெருசு. 15 வருஷம் கழிச்சு, அதே சுரேஷ்கிருஷ்ணா இயக்கம், அதே 'ஆஹா’ டைட்டில், அதே 'ராஜி மாமி’ கேரக்டர்னு இதில் பல ஸ்பெஷல்கள் இருக்கு. இதுவும் கூட்டுக்குடும்ப பின்னணியில் சுழல்ற... மனசுக்குப் பிடிச்ச கதை. ஒண்ணு, ரெண்டு ஷெட்யூல்தான் ஷூட் போயிருக்கோம். அதுக்குள்ள டீம்ல எல்லாருக்கும் ஃபேமிலி ஃபீல் வந்துடுச்சு!''னு இதழ்களோடு, கண்களும் பேச புன்னகைச்சாங்க பானு.

''வீட்ல எப்படி பொழுது போகுது?''

''கணவர் ஆதர்ஷ் கௌஷல், கலிஃபோர்னியாவில் வேலை பார்க்கிறார். பொண்ணு அபிநயா கௌஷல், ஃபிஃப்த் ஸ்டாண்டர்ட் போகப் போறாங்க. இப்போ சம்மர் ஹாலிடேஸ் கொண்டாட ஊருக்குப் போயிருக்காங்க. அதனால இப்போதைக்கு வீட்டுல நான் சிங்கிள். சொன்னா நம்புவியா ரீட்டா... வீட்ல சமையல், கிளீனிங் எல்லாமே நான்தான் செய்வேன். வேலை ஆட்கள் யாரையும் வைக்கல. புக்ஸ்... அப்புறம் இதோ இந்த பூச்செடிகள்தான் என் பொழுதுபோக்கு. சோற்றுக்கற்றாழை, துளசி, சங்குப் பூக்கள்னு என் தோட்டம் சூப்பரா இருக்குல்ல?!''னு சின்னக் குழந்தையா கேட்கிறாங்க பானுப்ரியா!

ராஜி மாமி ராக்ஸ்!

'ஆஹா’ சீரியல் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா, சின்னத்திரைக்குப் புது வரவு. ''என்னோட சினிமா கேரியருக்கு 'பாட்ஷா’, 'ஆஹா’ ரெண்டு படங்களும் ரொம்பவே பலம்னு சொல்லலாம். என்னை நலம் விசாரிக்கிற ஒவ்வொருத்தரும் இந்தப் படங்களைக் குறிப்பிட்டு, 'திரும்பவும் அப்படி ஒரு ஸ்கிரிப்ட் கொடுங்க’னு சொல்லாம விட்டதில்லை. அதனாலதான் 'ஆஹா’ திரைப்பட சாயல்ல, ஆக்ஷன், ஹீரோயிஸம்னு எதுவும் இல்லாம... குடும்ப வேல்யூவை மையமா வெச்சு ஒரு கதை ரெடி பண்ணினேன். அப்போதான் அதை இரண்டரை மணி நேரத்துக்குள்ள அடக்கணுமானு ஒரு யோசனையும் வந்துச்சு. விஜய் டி.வி. சீரியலா இயக்க முன்வர... 'ஆஹா’ மெகா தொடரா உருமாறிடுச்சு. அதனால ஒரு சினிமா பார்க்கிற ஃபீலிங்கைத்தான் இந்த சீரியல் தரும். சென்னை, கும்பகோணம், துபாய் பேக்ட்ராப்ல கதை நகரும். மற்றவை ஸ்கிரீனில்!''னு முடிச்சார் சுரேஷ்கிருஷ்ணா!

ஆஹாஹா!

பேபி மகா எப்போ?

'இந்தப் பாட்டை யாருக்கு டெடிகேட் செய்றீங்க..?’னு சில வருஷங்களுக்கு முன்னால கேட்டுட்டு இருந்த மகாலஷ்மி கையில... இப்போ ஐந்து சீரியல்கள்! சன் டி.வி-யில 'இளவரசி’, 'செல்லமே’, 'உதிரிப்பூக்கள்’... விஜய் டி.வி-யில 'அவள்’, ஜெயா டி.வி-யில 'இரு மலர்கள்’னு பொண்ணு செம பிஸி!

''உண்மைதான். அதிகாலை வீட்டை விட்டுக் கிளம்பினா, லேட் நைட்தான் திரும்புறேன். என் ஹஸ்பண்ட் அனில்தான் என்னை ரொம்ப மிஸ் பண்றதா சொல்றார். அதனால் ஒவ்வொரு வாரமும் சண்டே மட்டும் ஷூட்-க்கு 'நோ’ சொல்லிட்டு பீச், ரிசார்ட்னு சுத்திட்டு இருக்கோம்''னு சொன்னவங்ககிட்ட,

''கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆயிடுச்சு... பேபி மகாலஷ்மி எப்போ..?'’னு கேட்டா,

''ஷூட் பிஸியா ஓடிட்டு இருக்கிறதால, இன்னும் ஒரு வருஷத்துக்கு அந்த ஐடியாவே இல்ல!''னு பப்ளி கன்னம் குழியச் சிரிக்கிறாங்க மகா!

தொழில் பக்தி!

கிளிசரின் தாமரை!

சன் டி.வி. 'வெள்ளைத் தாமரை’ தொடர்ல, 'தாமரை’யா வர்ற புஷ்பலதாவைப் பார்த்தாலே... எல்லாருக்கும் அழுகாச்சி அழுகாச்சியா வரும். 'மகராசி’, 'ருத்ரம்’, 'வெள்ளைத் தாமரை’னு ஒரே அழுகாச்சி கேரக்டர்தான். ஆனா, நிஜத்துல... ஏக கலகல பார்ட்டிதான்!

அப்பா, அண்ணன்கள் எல்லாரும் பெரிய பிஸினஸ் மேக்னட்ஸ். பெங்களூருல பல இடங்கள்ல 'இமேஜ் 4 குரூப்’ங்கற பேர்ல எழும்பியிருக்குற அடுக்குமாடிக் குடியிருப்புகள் எல்லாம் அக்காவோட குடும்ப கன்ஸ்ட்ரக்ஷன் புண்ணியம்தானாம்! ஷூட் இல்லாத நாட்கள்ல... இந்த கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ஸ்ல... அக்காவை பார்க்கலாமாம்!

'பிஸி'னஸ் குடும்பப் பொண்ணு!

வாசகிகள் விமர்சனம்

வெகுஜன கோபம் வேண்டாமே!

''விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'சரவணன் - மீனாட்சி’ தொடர், பலருக்கும் விருப்பமான நிகழ்ச்சி. இருந்தாலும், சரவணனின் அப்பாவை (ராஜசேகர்) காமெடி பீஸ் ரேஞ்சுக்கு காட்டுவது, அந்த கதாபாத்திரத் தின் தன்மைக்கு பொருத்தமாகவே இல்லை. மேலும், மீனாட்சியின் பெரியம்மா, சரவணனின் அப்பாவுக்கு உறவுமுறையில் 'சகோதரி’ ஆவார். அவர்கள் இருவரையும் இணைத்து 'நகைச்சுவை’ என்கிற பெயரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அருவருப்பு ரகம். இதுதவிர, குலதெய்வக் கோயிலில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாக திணித்து, ஆன்மிகத்தை மதிப்பவர்கள் மனதையும் புண்படுத்துகிறார்கள். இதெல்லாம் வெகுஜன நேயர் களின் கோபத்தைக் கிளறிவிடக்கூடும்'' என்று எச்சரிக் கிறார் எண்ணூரைச் சேர்ந்த 'நெல்லை' சுந்தரி.

மென்மையாக புரியவைக்கலாமே?

''தங்க நகை விலை விஷயத்தில், ஒவ்வொரு கடையும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றி மக்களிடம் நகைகளை விற்று வருகின்றன. இதில் பலவிதங்களில் மக்கள் ஏமாற்றப்படுவதாக குற்றம்சாட்டியபடி, ஒரு நகைக்கடையின் விளம்பரம் தூள் பரத்துகிறது. பிரபல நடிகர் ஒருவர், வாடிக்கையாளர்களை எச்சரிப்பதற்காக உரிமை, புரட்சி, போராட்டம் என்றெல்லாம் பெருங் குரலில் பேசுகிறார். நல்ல விஷயம்தான். ஆனால், இதற்காக இத்தனை கடுமையான வார்த்தை பிரயோகங்கள் எல்லாம் தேவையா...? மென்மையாகவே பேசி இதுபோன்ற விஷயங்களை புரியவைக்கும்போதுதானே... அது மேலும் பலரிடத்திலும் சென்று சேரும்!'' என்று அறிவுறுத்துகிறார் மதுரையைச் சேர்ந்த பி.எஸ்.லஷ்மி.

யாருக்கும் சளைத்தவள் அல்ல..!

''சன் டி.வி. அரட்டை அரங்கம் நிகழ்ச்சியில்.. பெண் என்பதால் சமூகம் பாரபட்சம் காட்டுகிறது எனும் தலைப்பிலான விவாதத்தின்போது, தேவிகா என்ற பெண் பேசியது... கண்ணீரை வரவழைத்தது. தந்தை படிக்க வைக்க மறுத்துவிடவே, தானாக முயன்றுதான் படித்தாளாம் அப்பெண். வேலை செய்துகொண்டே படித்து, ப்ளஸ் டூ-வில் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்திருக்கிறாள். அதேசமயம், இவருடைய அண்ணனை மட்டும் நிறைய பணம் செலவழித்து படிக்க வைத்தாராம் தந்தை. இதையெல்லாம் சொல்லி, வருத்தப்பட்டபோதும்... 'நான் உழைத்து என் தந்தையை காப்பாற்றுவேன்' என்று கூறி, பெண் என்பவள் ஆணுக்கு சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்துவிட்டார்'' என்று பெருமிதம் கொள்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஜி.இந்திரா.