தன் மகன்கள் மூன்று பேரின் திறமையை எடை போட நினைத்த ஒரு அப்பா, 'உங்கள் மூன்று பேருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் தருகிறேன். இதை வைத்து நம் வீட்டை நிறைக்கும் அளவுக்கான பொருளை நீங்கள் வாங்கி வரவேண்டும்' என்றார். கூடவே, 'அந்தப் பொருள், மிகவும் குறைவான விலையில் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும்' என்கிற நிபந்தனையையும் விதித்தார்.

முதல் மகன் ஓடோடிப் போய்... வண்டி வண்டியாக வைக்கோல் கட்டுகளை வாங்கிவந்து வீட்டை நிரப்பிக் காட்டினான். இரண்டாவது மகன்... மூட்டை மூட்டையாக பஞ்சு வாங்கி வந்து வீட்டை நிறைத்தான். கடைக்குட்டியோ... வீட்டின் நடுவே சின்னதாக ஒரு பெட்டியைக் கொண்டு வந்து வைத்துவிட்டு... கைகட்டி நின்றான்.

'இதென்ன கூத்து?' என்று மூத்தவர் இருவரும் சிரித்தபடியே நிற்க, அர்த்தம் பொதிந்த புன்னகையுடன் காத்திருந்தார் அப்பா.

அந்தக் கடைக்குட்டி, பெட்டியைத் திறந்து, அதிலிருந்து விளக்கு ஒன்றை எடுத்தான். மேஜையின் மீது வைத்து, எண்ணெய் ஊற்றி, திரி போட்டு, விளக்கை ஏற்றினான். வீடு முழுக்க ஒளிவெள்ளத்தால் நிறைந்தது! ஓடி வந்து மகனைக் கட்டிக் கொண்டார் அப்பா!

விளக்கு, ஒளியால் வீட்டை நிறைக்கிறது! பெண்ணோ... தன் உணர்வால், உழைப்பால், அன்பால்... என பல ரூபங்களில் ஒவ்வொரு வீட்டையும் நிறைத்துக் கொண்டிருக்கிறாள். அதனால்தானே, பெண்களை 'குடும்ப விளக்கு' என்று பெருமையோடு கொண்டாடு கிறோம். அப்படிப்பட்ட பெண் இல்லாமல் போனால், எந்த வீடுமே ஒளியிழந்துதானே போகும்!

ஆம், வீடு என்பது வெறுமனே... செங்கற்களாலும், மற்றமற்ற பொருட்களாலும் நிரம்பியது அல்ல. அந்த சொல்லுக்கு... உயிரோட்டம் கொடுப்பதே பெண்கள்தான் என்பதை நிரூபித்திருக்கிறது, கல்லையும் கரையச் செய்யும் விதத்தில் மதுரையில் அரங்கேறியிருக்கும் அந்த சோக சம்பவம். 'பெண்கள் இல்லாத வீடு' என்ன கதிக்கு ஆளாகும் என்பதை நிரூபிக்கும் அந்த சம்பவம், 'பொம்பளைங்க அரும பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா...' என்ற தலைப்பில், இந்த இதழில் இடம்பிடித்திருக்கிறது.

சம்பவத்துக்கு சாட்சியாக நிற்கும் எண்பது வயது பெரியவர் அழகர், 'பொம்பளைங்க இல்லாத வீடு... சுடுகாட்டுக்கு சமம்' என்று கதறுவது எத்தனை சத்தியமான வார்த்தைகள் தோழிகளே!

உரிமையுடன்
ஆசிரியர்