Published:Updated:

ஸ்ட்ரிக்ட் அம்மா இல்லை... ஸ்வீட் அம்மா !

ம.பிரியதர்ஷினி

##~##
மீ
டியாவுக்கு முக்கியமான செலிப்ரிட்டிகளாக இருந்தாலும், வீட்டில் தங்கள் பிள்ளைகளுக்குப் பொறுப்பான அம்மாக்களாக இருப்பதுதானே நம் பெண்களின் அழகு. அப்படிச் சில பெண்கள், தங்கள் குழந்தைகளின் படிப்பு விஷயத்தில் தாங்கள் காட்டும் அக்கறையைப் பகிர்ந்துகொள்கிறார்கள் இங்கு...

ரோஜா

''என் பொண்ணு அன்ஷூ மாலிகா... ஃபோர்த் ஸ்டாண்டர்ட் படிக்கறா. இதுவரைக்கும் அவதான் கிளாஸ் ஃபர்ஸ்ட். பையன் கிருஷ்ண கவுசிக்... ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட். அவனுக்குப் படிப்பைவிட சினிமா, ஸ்டன்ட், அனிமல்ஸ் மேலதான் ஆர்வம். நானும் செல்வாவும் குழந்தைகளுக்குப் படிப்பு விஷயத்துல ஓவர் பிரஷர் கொடுக்க மாட்டோம். ஆனா, தினமும் ஹோம் வொர்க் செய்றாங்களா, டெஸ்ட்ஸ் எப்போ நடக்குது, என்ன மார்க் வாங்குறாங்கனு தவறாம கவனிச்சுப்போம்.

ஸ்ட்ரிக்ட் அம்மா இல்லை... ஸ்வீட் அம்மா !

ஷூட், பொலிட்டிக்கல் மீட்டிங்னு என்ன காரணமா இருந்தாலும், குழந்தைகளை வெளிநபர்கள்கிட்ட விடமாட்டோம். நான் பிஸியாகும் நேரங்கள்ல அவரும், அவருக்கு வேலை இருக்கிற சமயங்கள்ல நானும் பார்த்துப்போம். எதிர்காலத்துல இந்தத் துறையைத்தான் அவங்க தேர்ந்தெடுக்கணும்னு எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. அவங்களுக்கு விருப்பமான துறையில், உயரத்துக்கு வரணும்ங்கறதுதான் எங்க விருப்பம்!''

சௌமியா அன்புமணி

''என் பொண்ணு சம்யுக்தாவும், சங்கமித்ராவும் காலேஜ்ல படிக்கிறாங்க. கடைசிப் பொண்ணு சஞ்ஜுத்ரா ஃபோர்த் படிக்கிறாங்க. படிப்பு விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் அவங்க ஹார்டு வொர்க் பண்றதைத்தான் நான் விரும்புவேன். படிக்கற நேரத்துல படிக்கலைனா, திட்டுவேன். என்ன மார்க் வாங்கினாலும் சரி. ஆனா, முடிஞ்சளவு முயற்சி எடுத்துப் படிக்கணும். எங்க வீட்டுல ஒரே ஒரு டி.வி-தான். அதனால, எந்த சேனல் நிகழ்ச்சியையும் எங்க கண்பார்வையில்தான் பார்ப்பாங்க. தனி லேப்டாப், டெஸ்க்டாப் இல்லை. என் கணவரோட லேப்டாப்லதான் தேவையானதை பிரவுஸ் பண்ணிக்கணும்.

ஸ்ட்ரிக்ட் அம்மா இல்லை... ஸ்வீட் அம்மா !

ஃபேஸ்புக், ஆர்குட், டிவிட்டர் மாதிரியான சமூக வலைதளங்கள்ல பசங்க அக்கவுன்ட் வச்சிக்கறது எனக்குப் பிடிக்காது. என் முதல் பொண்ணு மட்டும் இப்போ என் பெர்மிஷனோட ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஆரம்பிச்சுருக்கா. ஆனாலும், அதைத் தேவைக்காக மட்டும் பயன்படுத்தணுமே தவிர, ரெகுலரா ஆக்டிவா இருக்கக்கூடாதுங்கிறது ஆர்டர்!''  

குஷ்பு

ஸ்ட்ரிக்ட் அம்மா இல்லை... ஸ்வீட் அம்மா !

''என் பொண்ணுங்கதான் எனக்கு உலகமே. பெரிய பொண்ணு அவந்திகா செவன்த் படிக்கிறா. சின்னப் பொண்ணு அனந்திகா ஃபிஃப்த் படிக்கிறா. தினமும் ஸ்கூல் விட்டு வந்ததும், ஸ்கூல்ல என்ன நடந்தது, என்னென்ன ஹோம் வொர்க் கொடுத்திருக்காங்கனு பேசி அவங்ககூட உட்கார்ந்து நேரம் செலவழிப்பேன். ஹோம் வொர்க் பண்ண வைப்பேன். படிக்கிறதைப் புரிஞ்சு படிக்கணும்னு நினைப்பேன். அதுக்காக அவங்களை டார்ச்சர் செய்ய மாட்டேன். 'போதும்மா..!’னு அவங்க நினைக்கிற நொடியில, அவங்களை ஃபிரீயா விட்டுடுவேன். அவங்களோட பரீட்சை நேரத்துல எந்த கமிட்மென்ட்டும் வெச்சுக்க மாட்டேன். பெரிய பொண்ணுக்கு ஆட்டோமொபைல் சார்ந்த துறையில வேலைக்குப் போகணும்னு ஆசை. சீக்கிரமே 'டீன் ஏஜ்’-ஐ தொடப்போறா. அதனால அவளோட ரீசன்ட் போட்டோக்களை இப்போ நான் யாருக்கும் தர்றதில்லை!''

விஜி சந்திரசேகர்

''என் பெரிய பொண்ணு சுரக்ஷா எம்.பி.பி.எஸ் படிக்கிறா. சின்னப் பொண்ணு லவ்லின் லெவன்த் படிக்கிறா. டிஸிப்ளின் விஷயத்துல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் அம்மா. படிக்கிற நேரம் படிக்கணும், அன்னன்னைக்குப் பாடத்தை... அன்னன்னைக்கே முடிச்சுடணும், படிக்கிறப்போ கையில செல்போன் இருக்கக்கூடாது, கண்ட கண்ட சேனல் நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூடாது.

ஸ்ட்ரிக்ட் அம்மா இல்லை... ஸ்வீட் அம்மா !

படிப்புதான் வாழ்க்கையில பெரிய வரம்ங்கிறதை அவங்களுக்கு உணர்த்திட்டே இருப்பேன். இப்போ நான் கண்டிப்பான அம்மாவா இருந்தாலும், நாளைக்கு இந்த ஒழுக்கமும் படிப்பும் வாழ்க்கையில அவங்களுக்கு நல்லது செய்யும்போது, நான் ஸ்ட்ரிக்ட் அம்மா இல்லை... ஸ்வீட் அம்மானு என் பொண்ணுங்க கொண்டாடுவாங்க!''

அடுத்த கட்டுரைக்கு