Published:Updated:

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும்...

க.ராஜீவ் காந்தி படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும்...

க.ராஜீவ் காந்தி படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Published:Updated:
##~##

''இப்ப நினைச்சாலும், குலைநடுங்குது. பல ராத்திரிக்கு நான் தூங்கல''

- எட்டு ஆண்டுகள் உருண்ட பிறகும்கூட, மைதிலி சேஷாத்ரியின் உடல் நடுங்குகிறது... அந்த சம்பவத்தைப் பற்றி பேசும்போது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த 2004-ம் ஆண்டு, ஜனவரி 23 அன்று ஸ்ரீரங்கம், ரெங்க நகர் பத்மபிரியா திருமண மண்டபத்தில்... பெங்களூர் குருராஜ் - ஸ்ரீரங்கம் ஜெயஸ்ரீ ஆகியோரின் திருமண வைபவம். ஹோமத் தீ ஒரு பக்கம் எரிந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மண்டபமே திடீரென தீயில் எரிய ஆரம்பிக்க... மணமகன் குருராஜ் உட்பட 64 பேரின் உயிர் பறிபோனது

'வீடியோ கேபிள் வழியே ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத்தான் விபத்து' என்று குற்றம்சாட்டப்பட்டு, மண்டப உரிமையாளர், மேனேஜர், கேமராமேன், எலெக்ட்ரீஷியன் என்று ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 'இரண்டு ஆண்டு தண்டனை' என்று ஜூன் 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த மண்டபத்திலிருந்து, நான்கு வீடுகளே தள்ளியிருக்கிறது மைதிலி சேஷாத்ரியின் வீடு.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும்...
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும்...

''வேற கல்யாணத்துக்கு போயிட்டு, பத்மபிரியா கல்யாண மண்டபம் வழியா வந்துட்டிருந்தேன். அப்பத்தான் மண்டபத்தை சுத்தி வானமே தெரியாத அளவுக்கு கருகருனு ஒரே தீ... எங்க பார்த்தாலும் ஒரே அலறல்... ஒரு நிமிஷம் உயிரே நின்னு போச்சு. தெய்வ புண்ணியத்துல மணப்பெண்ணுக்கு ஏதும் ஆகல. அவங்க யாருமே இப்ப இங்க இல்ல. சென்னைக்கு போயிட்டாங்க. அந்தப் பொண்ணுக்கு வேற கல்யாணம்கூட ஆயிடுச்சு. இந்த விஷயத்தைப் பத்தி பேசினாலே... அவங்க யாருமே முகம் கொடுக்க மாட்டாங்க. அந்தப் பொண்ணே பல மாசத்துக்கு மனோரீதியா பாதிக்கப்பட்டுத்தான் மீண்டிருக்கு'' என்றார் மைதிலி.

திருச்சியில் டிராவல்ஸ் வைத்திருக்கும் கரீம்குட்டி, ''நிறைய பேரை, என்னோட கார்கள்ல ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம். ஆனா, அதுல பலரும் உயிர் பிழைக்கல. அதுவே இன்னிவரைக்கும் எனக்கு வேதனை தர்ற விஷயமாத்தான் இருக்கு. 'தண்டனை குறைவா கிடைச்சுருக்கு'னு ஊரெல்லாம் பேச்சா இருக்கு. அதுவா முக்கியம்? எங்கயுமே இனி இப்படியரு சம்பவமே நடக்காத அளவுக்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கோம்கிறதுதானே ரொம்ப ரொம்ப முக்கியம். அதைப் பத்தி யாருமே பேசறதா தெரியல...'' என்று நியாயமான வாதத்தை முன் வைத்தார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism