Published:Updated:

ரொமான்ஸ் ரகசியங்கள் !

டாக்டர் ஷாலினி

ரொமான்ஸ் ரகசியங்கள் !

டாக்டர் ஷாலினி

Published:Updated:
##~##

ஆண் - பெண் ரொமான்ஸ் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று உங்களால் யூகிக்க முடியுமா? மனிதர்கள் யாரை அல்லது எதைப் பார்த்து ரொமான்ஸ் செய்யக் கற்றுக் கொள்கிறார்கள்? உடனே... கதை, சினிமா, ஊடகம் என்று அடுக்கத் தோன்றுகிறதா? யதார்த்தத்தில் அதுவே ரொமான் ஸுக்கு முக்கிய ஊக்குவிப்பாக இருந்தாலும்,   உண்மை என்ன தெரியுமா..? மனிதர்கள் ரொமான்ஸை கற்றுக்கொள்வது... அம்மாக்களிடம் இருந்துதான்!

'எந்த அம்மா உட்கார்ந்து குழந்தைக்கு ரொமான்ஸ் எல்லாம் சொல்லித் தருகிறார்களாம்?’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கவனமாக நினைவு கூர்ந்து பாருங்கள், உங்க ளுக்கு முதல் முதலில் அணைப்பின் கதகதப்பை, முத்தத்தின் ஈரத்தை, கொஞ்சுதலின் சுகத்தை, எல்லை இல்லா அன்பின் சந்தோஷத்தை அறிமுகப்படுத்தி யவர் உங்கள் அம்மாவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?! இந்தத் தாய் - சேய் உறவின் நெருக்கத்தில் இருந்துதான்... பிற்கால ரொமான்ஸ் தேவைகள் உருவாகின்றன.

இதுபற்றி மிகப்பிரபலமான ஓர் ஆராய்ச்சி, அமெரிக்காவில் செய்யப்பட்டது. ஹாரி ஹார்லோ என்கிற சைக்கியாட்ரிஸ்ட், குரங்குகளின் தாய் - சேய் வளர்ப்பு முறைகளைப் பற்றியும், அதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றியும் ஆராய்ச்சி மேற்கொண்டார். பிறந்த உடனே குட்டிக் குரங்கு ஒன்றை, தாயிடமிருந்து பிரித்து, புட்டிப் பால் கொடுத்து, தனியாக வளர்த்தார். முன் பின் தன் தாயையே பார்த்திராத இந்தக் குட்டியை, ஓர் அறைக்கு அழைத்துச் சென் றார். அங்கு இரண்டு அம்மா குரங்கு பொம்மைகள் இருந்தன. முதல் அம்மா பொம்மை, கம்பிகளால் செய்யப்பட்டது. ஆனால், அதன் நெஞ்சுப் பகுதியில் பால் புட்டி அட்டாச் செய்யப் பட்டிருந்தது. அதனால் அது பால் கொடுக்கும் அம்மா. அடுத்த அம்மா பொம்மை, மெத்து மெத்துத் துணியால் செய்யப்பட்டது. ஆனால்... பால் புட்டி இல்லை. இப்போது தாய் என்பவளையே பார்த்திராத இந்தக் குட்டி, எந்த அம்மா பொம்மையைத் தேர்ந்தெடுக்கும்? பால் அம்மாவையா... பஞ்சு அம்மாவையா?

ரொமான்ஸ் ரகசியங்கள் !

'இதில் சந்தேகம் என்ன, நிச்சயமாக பால் அம்மாவைத்தான்! ஏன் என்றால், உணவுதானே குழந்தைக்கு அத்தியாவசிய தேவை' என்று நீங்கள் யோசித்தால், அதுதான் இல்லை! அந்தக் குட்டிக் குரங்கு தேர்ந்தெடுத்தது, மெத்து மெத்து அம்மாவை! ஏன்      என்றால், அதற்குத் தாயின் கதகதப்பும், அரவணைப்பும்தான் முதல் தேவை. உணவுகூட இரண்டாம் பட்சம்தான். அதுவும் இந்தக் குட்டி குரங்கு ரொம்பவே கெட்டிக்காரச் சுட்டி குரங்கு என்பதால், அது என்ன செய்தது தெரியுமா? மெத்து மெத்து அம்மாவை கெட்டியாகக் கட்டிப் பிடித்துக் கொண்டு, எக்கி எக்கி கம்பி அம்மாவிடமிருந்து பாலையும் குடித்துக் கொண்டது. யூ டியூபில் (http://www.youtube.com/watch?v=OrNBEhzjg8I&Feature=endscreen&NR=1)இந்த வீடியோவை பார்த்தால்... நிச்சயம் அந்தக் குட்டியின் சேஷ்டையைக் கண்டு சிரிப்பீர்கள்.

ஆக, ஹாரி ஹார்லோவின் ஆராய்ச்சி நிரூபிக்கும் அன்பின் விதி: உணவைவிட அணைப்புதான் உறவுக்கு முக்கியம். இதைத்தான் குழந்தை தாயிடம் இருந்து எதிர் பார்க்கிறது. அந்த அணைப்பில் அது உணரும் கதகதப்பு, உஷ்ணம், பாதுகாப்பு உணர்வு... இவைதான் பாலைவிட அதற்கு மிகவும் முக்கியமான அடிப்படைத் தேவை.

ஹாரி ஹார்லோ இதோடு ஆராய்ச்சியை முடித்துவிட வில்லை. தாயிடம் இருந்து பிரிந்த சில குரங்குகளை தனித்தனியாக வளர்த்தார். இந்தக் குரங்குகளுக்கு வேளாவேளைக்கு உணவு கொடுக்கப்பட்டது. மற்றபடி, வேறு எந்தக் கொஞ்சல்... குலாவலும் இல்லை. இந்தக் குரங்குகள் எப்படி வளர்ந்து ஆளாகின்றன என்று தொடந்து  கண்காணித்தார்.

அந்தக் குரங்குகள்... தம்மைத் தாமே கடித்து, கீறிக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டுப் போனதை அவர் கவனித் தார். வயதுக்கு வந்த பிறகும், தேவையான துணையைத் தேட அவற்றுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆராய்ச்சியாளர் அறிமுகப்படுத்தி வைத்த குரங்கோடு இணைந்து இனப்பெருக்கமும் செய்யத் தெரியவில்லை. எல்லா வற்றையும் விட முக்கியமாக, நெருக்கத்தை விரும்பவே அவற்றுக்குத் தெரியவில்லை. ஆக, கூட்டிக் கழித்துப் பார்த் தால், அதற்கு சுத்தமாகவே ரொமான்ஸ் வரவில்லை.

இதுமாதிரி மனிதர்களையும் நாம் பார்க்கிறோம். எனக்குத் தெரிந்த ஒரு க்ளையன்ட், மெத்தப் படித்த மேதாவி. ஆனால்... அவர் மனைவிக்கோ, 'எதற்கடா இந்த வாழ்க்கை' என்று எப்போதுமே ஒரு சோகம். என்ன என்று விசாரித்தால், இந்த மனிதர் சம்பாதித்துப் போடும் மெஷின் மாதிரி வருவாராம், போவாராம்... மனைவியை வெளியே அழைத்துப் போவது, ரொமான்டிக்காக பேசிப் பழகுவது என்று எதுவுமே செய்யத் தெரியாதாம். அந்த மனிதரைக் கூப்பிட்டு விசாரித்தால், தனக்கு அதெல்லாம் செய்யவே வராது என்று ஒப்புக்கொண்டார்.

ரொமான்ஸ் ரகசியங்கள் !

ஏன் என்று மேலும் துருவியபோதுதான் உண்மை பிடிபட்டது. அதாவது... அவர் பிறந்த உடனேயே அம்மா இறந்துவிட்டாராம், அப்பா மறுமணம் செய்து கொண்டாராம். இந்த மகன் விடுதியில் தங்கிப் படித்தாராம். அதனால் தாயின் அணைப்பு, அன்பு, முத்தம், கொஞ்சல் என்று எதையுமே அனுபவிக்காமல்... கிட்டத்தட்ட ஹாரி ஹார்லோ வளர்த்த ஐசொலேட்டட் குரங்குகள் மாதிரியே இவரும் வளர்ந்திருக்கிறார். அதன் விளைவாக, அவருக்கு நிறைய சமூக கூச்சங்கள். அவர் மனைவிக்கு எக்கச்சக்க டிப்ரஷன்!

இதெல்லாம் எதனால் ஏற்பட்டது? அவருக்கு அம்மா இல்லை, அம்மா ஸ்தானத்தில் இருந்து கொஞ்சி விளை யாட யாரும் வாய்க்கவில்லை. அதனால், பிற்காலத்தில் ரொமான்ஸே செய்யத் தெரியவில்லை அவருக்கு.

ஆக, எல்லா ரொமான்ஸும் அம்மாவிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது. மனித மூளையின் முதல் இம்பிரின்டே இந்த அம்மா கேரக்டரும், அது நமக்குத் தரும் அன்பு பாதுகாப்பு சுயமரியாதையும்தான். சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்... தமிழ் சினிமா எக்கச்சக்கமாக கொச்சைப்படுத்தி இருக்கும், ஆண் - பெண்ணின் வாய் முத்தம்கூட... தாய் - சேய் உறவில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.

தாய்ப் பறவை, குஞ்சுகளுக்கு வாய் டு வாய் உணவைப் பரிமாறுவது போலதான், ஆதிகால அம்மாக்களும் மனிதக் குட்டிகளுக்கு உணவை வழங்கி இருக்கிறார்கள். காரணம், அக்காலத்தில் ஸ்பூன், டம்ப்ளர் மாதிரியான பாத்திரங்கள்  இல்லை. தாய், தான் சுவைத்த மிகருசியான உணவை, அப்படியே மென்று குழந்தையின் வாயில் புகட்டிவிடுவாள். இப்படி வாய் வழியாக உணவை வழங்கும்போது, அதை உணவாக மட்டும் குழந்தையின் மூளை பதிவு செய்யாதே. 'ஆஹா, என் மேல் அக்கறை செலுத்த, என் போஷாக்கில் கவனம் செலுத்த, என் மேல் பிரத்தியேக அன்பு செலுத்த, எனக்கே எனக்கு என்று ஒரு ஆள் இருக்கிறார்’ என்கிற நம்பிக்கையையும் அல்லவா மிக வலிமையாக ஏற்படுத்தும்!

இந்தக் குழந்தை வளர்ந்து பருவம் அடைந்த பிறகு, தன் துணைக்கு 'நான் இருக்கிறேன்... உனக்கு’ என்கிற சமிக்ஞையை மிகச் சுலபமாக எப்படித் தெரியப்படுத்தும்?

ரொம்ப சிம்பிள். வாயோடு வாய் சேர்ந்து, உணவு இல்லை என்றாலும், மற்ற உணர்வு ரீதியான முதலீடுகளைப் பகிர்ந்துகொண்டால், இணைக்கு உடனே புரிந்து போய்விடுமே, அது அன்பு என்று!

            - நெருக்கம் வளரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism