Published:Updated:

ஆர்ட் டூ ஆர்க்கிடெக்சர்...

அசத்தும் ஷீலா! ம.மோகன், படம்:சொ.பாலசுப்ரமணியன்

ஆர்ட் டூ ஆர்க்கிடெக்சர்...

அசத்தும் ஷீலா! ம.மோகன், படம்:சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
 ##~##

''பரத நாட்டியம், வீணை, குச்சிப்புடி... இப்படி என்னிடம் இருந்த விஷ§வல் ஆர்ட் ஆர்வத்தை, ஆர்க்கிடெக்ட் துறையில் ஃபேஷனாக்கி பார்ப்போமேனு ஒரு ஆசை. கூடவே, இதில் ஒரு கிரியேட்டரா விளையாட நிறைய இடம் இருக்குனு ஆரம்பத்துலயே உள்ளுக்குள் ஒரு மார்க் விழுந்தது. 'ப்ளே வித் ஸ்பேஸஸ்’னு கேமை ஸ்டார்ட் செய்துட்டேன்!''

- அழகாகச் சிரிக்கிறார் 'ஆர்க்கிடெக்ட்' ஷீலா ஸ்ரீபிரகாஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி மெட்ராஸ் ஆர்ட் ஹவுஸ், பரனூர் ரயில்வே ஸ்டேஷன், குச்சிப்புடி ஆர்ட் அகாடமி, எல் அண்ட் டி டவர், எஸ்.பி.ஐ. டவர் என்று இவரின் ஆர்க்கிடெக்ட் மூளையில் உருவான சிறப்பான கட்டடங்கள் மற்றும் கேலரி புராஜெக்ட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்!

இந்தியாவிலேயே முதன் முறையாக தனியே ஆர்க்கிடெக்ட் கம்பெனியைத் தொடங்கிய முதல் பெண்... வேர்ல்ட் எகனாமிக் ஃபோரம்ஸின் டிசைன் இன்னோவேஷன் குறித்த குளோபல் அஜெண்டா உறுப்பினர்களாக இருக்கும் 16 நபர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்... என பெருமிதம் கொள்ளச் செய்கிறார் சென்னையைச் சேர்ந்தவரான இந்த ஷீலா!

ஆர்ட் டூ ஆர்க்கிடெக்சர்...

''அண்ணா பல்கலைக்கழகம், என்னோட கல்லூரி நாட்களில் 'அழகப்பா செட்டியார் காலேஜ்' என்ற பெயர்ல இருந்துச்சு. 1972-ல் 'ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் பிளானிங்’ங்கிற தனித்துறையில் ஆர்க்கிடெக்ட் கோர்ஸைத் தேர்ந்தெடுத்தேன். நம்ம மாநிலத்துல அப்போ ஆர்க்கிடெக்ட் படிக்கிறதுக்கான ஒரே கல்லூரி அதுதான். அதுல மூன்றே மாணவிகள். அதில் ஒருத்தியாக நான்!

ஆர்மியில வேலை பார்த்த அப்பா, ஆர்க்கிடெக்ட் ஃபீல்டு பத்தி நிறையப் புரிதல்களோட இருந்தது, என்னை வளர்த்துக்க சப்போர்ட்டிவ்வா இருந்துச்சு. மூணாவது வருஷம் படிக்கும்போதே திருமணம் முடிஞ்சுடுச்சு. கணவர் ஸ்ரீபிரகாஷ், என்னோட காலேஜ் சீனியர். ஆமா... லவ் மேரேஜ்தான். பார்கவ், பவித்ரானு ரெண்டு பிள்ளைங்க. பார்கவ் யு.எஸ்-ல வேலை பார்க்கிறார். பவித்ராவும் ஒரு ஆர்க்கிடெக்ட். அர்பன் டிசைனிங் ஸ்பெஷலிஸ்ட்!'' என்ற ஷீலா, தன் நிறுவனம் பற்றிப் பேசினார்.

ஆர்ட் டூ ஆர்க்கிடெக்சர்...

''தனி ஆளா 79-ல் 'ஷில்பா ஆர்க்கிடெக்ட் கம்பெனி’யை ஆரம்பிச்சேன். 'ஒரு பெண்ணால் இதெல்லாம் சாத்தியமாகுமா?’ங்கற கேள்வியையோ, அது பற்றிய யோசனையையோ என் கிட்ட நெருங்கவிடல. அந்த தைரியத்தை எனக்கு விதைச்சது - ஆறு வயசுல இருந்து பரதநாட்டியம், குச்சிப்புடி ரெண்டுக்காகவும் நான் ஏறின மேடைகளும் கிடைச்ச பாராட்டுகளும்தான். ஒவ்வொரு பில்டிங் புராஜெக்ட்லயும் இந்தக் கலைகளைத்தான் படிமமா இறைச்சுருப்பேன். ஒரு டிசைனை வடிவமைக்கத் தொடங்கும்போதே... கிளாஸிக்கல் டான்ஸ், ரிதம், ஹார்மனி, இந்திய கோயில்கள்ல இருக்கற ஆர்க்கிடெக்ட் சாராம்சம்னு பலதையும் மனசுல நிறுத்தி வடிவமைக்கிறேன். அதனால்தான், என்னோட படைப்புகள் எல்லாமே தனிப்பட்ட கவனத்தை ஈர்க்குதுனு நான் நம்பறேன்'' என்றவர்,

ஆர்ட் டூ ஆர்க்கிடெக்சர்...

''இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, நம்மை ரொம்பவே மாத்திட்டு இருக்கு. குறிப்பா, நாம் வசிக்கிற, இளைப்பாறுகிற, பணியாற்றுகிற.... இப்படி எல்லா நேரங்களிலும் நம்மைச் சுற்றி இருக்கும் கட்டடங்களை ஆத்மார்த்தமா அணுகாம, கடமைக்குதான் உபயோகிக்கிறோம். இதை மாற்ற முனைஞ்சதோட வெளிப்பாடுதான்.... என்னுடைய கட்டட வடிவமைப்பு. பழமை குறைவில்லாம... அதே சமயம், நவீனம் ததும்ப உருவாகும் இடத்தில் வாழ்ந்து பாருங்க... அவ்ளோ சந்தோஷம் இருக்கும்! வராண்டா, முற்றம்னு பல பயன்பாட்டுக்கும் இடம் விட்டு வீட்டை எழுப்புற பாரம்பரியம் இப்போ இறந்துடுச்சு. அவரவர்களுக்குனு தனித்தனி அறைகள் அமைச்சு, அதுக்குள்ள சுருங்கற லைஃப் ஸ்டைலைத்தான் இப்ப விரும்புறாங்க.

இதுக்கு இடப்பற்றாக்குறையை காரணமா சொல்றாங்க. ஒருவிதத்துல அதை சரினு ஏத்துக்கிட்டாலும், அதுக்கான தீர்வை யாரும் யோசிக்கிறதில்லை. சென்னையையே எடுத்துப்போம். நகரம் கொள்ள முடியாத அளவுக்கு இங்கே கட்டடங்கள் வளர்ந்தாச்சு. அடுத்து, வேறொரு நகரத்தைத் தேர்ந்தெடுத்து முன்னேற்றாம, இடங்களை குறுக்கி மேலும் மேலும் நெருக்கத்தை உண்டாக்கவே செய்கிறோம். இந்த நெருக்கடி, நம்மை இயற்கையிடம் இருந்து முழுசா பிரிக்குது. வளர்ச்சியா நினைக்கிற இந்த விஷயம்... நாளுக்கு நாள் மக்களை எரிச்ச லடையவே செய்யும்...''

- கவலையும், தொலைநோக்கும் ஒருசேரப் பேசுகிறார்.

கிரியேட்டிவிட்டிக்காக மாடர்ன் கலாசாரங்கள் மிதந்து கொண்டிருக்கும் பல நாடுகளுக்குச் சென்று, அவர்களின் கட்டட நுணுக்கங்களைக் கற்று வந்தாலும், ஷீலாவின் அடிப்படை எப்போதும்... நம் பாரம்பரியம், பண்பாடு, இயற்கையோட ஒன்றிணைந்த கலைநயம் கலந்துதான் இருக்கிறது. இதைக் குறிப்பிட்டுப் பாராட்டினால்,

''உண்மை! நன்றி!'' என்று கை குலுக்குகிறார் ஷீலா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism