மீனுக்கு புதுத் தண்ணி எதுக்கு?

வீட்டிலிருக்கும் மீன் தொட்டிக்கு தண்ணீர் மாற்றிக் கொண்டிருந்த என்னிடம், பக்கத்து வீட்டு மூன்று வயதுக் குழந்தை, ''ஆன்ட்டி... என்ன பண்றீங்க..?'' என்றாள். ''மீன் தொட்டியில புது தண்ணி ஊத்துறேன்...'' என்றேன். உடனே அவள், ''பழைய தண்ணியவே மீன் எல்லாம் இன்னும் காலி பண்ணல... அதுக்குள்ள எதுக்கு புதுத் தண்ணி ஊத்துறீங்க..? எங்க மம்மி எல்லாம் நான் வாட்டர் பாட்டில் ஃபுல்லா காலி பண்ணினாதான் மறுபடியும் வாட்டர் ஃபில் பண்ணிக் கொடுப்பாங்க!'' என்று சமர்த்தாகப் பேச, ரசித்துச் சிரித்து, பின் அவளுக்கு ஃபிஷ் டேங்க் தண்ணீர் மாற்றுவது குறித்து விரிவாக விளக்கம் அளித்தேன்!

ஸோ கியூட்ல?!

- பி.சுமித்ரா பிரேம்குமார், சென்னை-11

நான் வளர்கிறேனே பேத்தி!

அன்று என் அம்மா, சுவாமி படங்களுக்குப் பூ போட்டுக் கொண்டிருந்தார். அவர் உயரம் சற்று குறைவு என்பதால், சுவரில் கொஞ்ச உயரத்தில் மாட்டப்பட்டிருந்த படங்களுக்கு, எக்கி எக்கிப் பூ போடுவதைப் பார்த்த என் சுட்டிப் பெண், ''பாட்டி... காம்ப்ளான் குடிங்க... ஹைட் ஆயிடலாம்... அப்புறம் ஈஸியா பூ போடலாம்!'' என்று ஐடியா கொடுக்க, எங்கள் வீடே சிரிப்புச் சிதறல்களால் நிறைந்துவிட்டது!

'நான் வளர்கிறேனே பேத்தி!’யா?!

- அனுஜய், கோவை-18

ஃப்ரிட்ஜுக்குள் செல்போன்!

வீட்டுக்கு புதிதாக ஃப்ரிட்ஜ் வாங்கி வந்ததும்... ''ஃப்ரிட்ஜ் எதுக்கும்மா..?'' என்று கேட்டாள் என் ஆறு வயது மகள் கீர்த்தனா. ''ஃப்ரிட்ஜில் எது வெச்சாலும் கெட்டுப்போகாது... அதுக்குத்தான்!'' என்றேன். சில நாட்கள் கழித்து, என் செல்போனில் கேம்ஸ் விளையாடிய கீர்த்தனாவை, ''இப்படி விளையாடிட்டே இருந்தா என் செல்போன் கெட்டுப் போயிடும்'' என்று கண்டித்து மொபைலை வாங்கி வைத்தேன். ஆனால், சிறிது நேரத்தில் என் செல்போன் காணாமல் போக, வீடெல்லாம் தேடிக் களைத்துவிட்டு, எதேச்சையாக ஃபிரிட்ஜைத் திறந்தால், அதில் இருந்தது மொபைல். இது குட்டியின் சேட்டைதான் என்று புரிந்து அவளை நான் அடிக்க, ''நீதானேம்மா 'ஃபிரிட்ஜ்ல எதை வெச்சாலும் கெட்டுப்போகாது’னு சொன்ன... அதான் வெச்சேன்...'' என்றாள் அழுதுகொண்டே!

கோபம் பறந்து சிரித்துவிட்டேன்!

- பி.மகாலஷ்மி, கரூர்-2