Published:Updated:

கேபிள் கலாட்டா ! - ஆசை... 'அமுதா’வாக ஆசை!

படம்: சொ.பால சுப்ரமணியன்

கேபிள் கலாட்டா ! - ஆசை... 'அமுதா’வாக ஆசை!

படம்: சொ.பால சுப்ரமணியன்

Published:Updated:

ரிமோட் ரீட்டா

 நீபா சினிமா!

கேபிள் கலாட்டா ! - ஆசை... 'அமுதா’வாக ஆசை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

சன் டி.வி. 'உறவுகள்’ தொடர் கொஞ்ச மும் விறுவிறுப்பு குறையாம 750 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிட்டுஇருக்கு. ''எப்போ 'சுபம்’?''னு கேட்டா...

''அதுக்குள்ளயா..?''னு அலும்பா சிரிக்கிறாங்க சீரியல்ல 'சுவேதா’வா கலக்குற நீபா.

''தொடர்ல இன்னும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைய இருக்கு. ஆயிரமாவது எபிசோடுல நீ நிச்சயம் மறுபடியும் என்னைப் பார்க்க வருவே!''னு கண்ணடிச்சவங்க, 'காவலன்’ படத்துல வடிவேலுக்கு ஜோடியா காமெடியில் கலக்கினதைத் தொடர்ந்து, விக்ரமோட 'கரிகாலன்’ படத்துலயும் ஒரு சூப்பர் ரோல்ல நம்மைச் சந்திக்க வர்றாங்க!  

கலக்குங்க!

கேபிள் கலாட்டா ! - ஆசை... 'அமுதா’வாக ஆசை!

வீட்டுல விசேஷங்க!

சன் டி.வி-யில் ஒளிபரப்பாகற 'பாட்டு தர்பார்’ங்கற நிகழ்ச்சிக்கான கான்செப்ட், டிசைன், டயலாக், மார்க்கெட்டிங், புரொடக்ஷன்னு அத்தனை வேலைகளையும் பார்க்கறதோட... நிகழ்ச்சியை முன்ன நின்னு நடத்தி அசத்திக்கிட்டிருக்கார் மதன்பாப். ''இளம் பாடகர்கள், செலக்டட் செலிப்ரிட்டினு கூட்டிட்டு வந்து... கஃபே சிஸ்டம் செட்ல ஆடியன்ஸ உட்கார வெச்சு, செம கலகலப்பா வித்தியாசப்படுத்தியிருக்கீங்க!''னு வாழ்த்தினா, 'தேங்க்ஸ்’ சொன்னவர்,

''என்னோட பொண்ணும்... பாடகியுமான ஜனனிக்கு ஆகஸ்ட் 23 கல்யாணம் ரீட்டா. நிச்சயமா வந்துடணும்!''னு பத்திரிகை கொடுத்தார்!

சுபமங்கள பிராப்திரஸ்து!

 'அமுதா ஒரு ஆச்சரியக்குறி!’

- கலைஞர் டி.வி-யில் ஒளிபரப்பாகற புதுவரவு சீரியல்ல, 'அமுதா'வா ரீ-என்ட்ரி கொடுத்திருக்காங்க ரேணுகா!

''நீங்க வாயைத் திறந்தாலே... சும்மா வெங்கல பானையை உருட்டிவிட்டா மாதிரி கலகலனு வார்த்தை மழை பொழியும். இதுக்காவே உங்கள ரசிக்கறதுக்கு ஒரு கூட்டமே இருக்கு. ஆனா, நீங்க என்ன டான்னா... தலைமறைவாயிட்டீங்களே...'' அந்த  ரசிக கூட்டத்தில் நானும் ஒருத்தியா ரேணுகாவை 'ஆன்' பண்ணினேன்!

'லகலக கலகல லகலக கலகல...'னு சூப்பரா சிரிச்சவங்க...

கேபிள் கலாட்டா ! - ஆசை... 'அமுதா’வாக ஆசை!

''ஆமாம்... பாலசந்தர் சாரோட 'சஹானா’ தொடருக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஏழு வருஷங்களா எந்தத் தொடர்லயும் கமிட் ஆகல ரீட்டா. இப்போ அதே பாலசந்தர் சாரோட டைரக்ஷன். அவர் கதை சொல்றப்போ கேட்க செவிகள் ரெண்டும் போதுமா என்ன! மிஸ் பண்ணிடாம சீரியலுக்குள்ள வந்துட்டேன். முதல் வார எபிசோடைப் பார்த்துட்டு, 'இப்படியோர் அமுதா கேரக்டராதான் நாங்களும் மாறணும்ங்கிற அளவுக்கு உன் கேரக்டர் தூள்’னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் போன் பண்ணிட்டாங்க!''னு பரவசமான ரேணுகா,

''சினிமா ஆசையில ஸ்ரீரங்கத்துல இருந்து கிளம்பி வந்து, ஆரம்பத்துல நிறைய விளம்பர படங்கள்ல நடிச்சு, டி.ராஜேந்தர் சாரோட 'சம்சார சங்கீதம்’ படத்துல பெரியதிரையில அறிமுகமாகி, 80-க்கும் மேல மலையாளப் படங்கள்லயும் நடிச்சுனு, கிட்டத்தட்ட இருபது வருஷத்துக்கும் மேல ஓடிட்டிருக்கு என் மீடியா கேரியர். நல்ல நடிகைனு பேர் எடுத்த திருப்தி இருக்கு ரீட்டா!''னு சந்தோஷப்பட்டாங்க.

பேச்சை பர்சனல் லைஃப் பத்தி நான் லேசா திருப்பவும்....

''வீட்ல நானும் என் கணவர் குமரனும்தான். சென்னை, கடற்கரை சாலையில் 'ஜி.டி.அலோகா வித்யா மந்திர்’ங்கிற பேர்ல சி.பி.எஸ்.இ. ஸ்கூல் நடத்துறோம். அது முழுக்க முழுக்க என் கணவரோட நிர்வாகம். சைதாப்பேட்டையில் குழந்தைகளுக்காக அபாகஸ் கத்துக்கொடுக்கிற சைனீஸ் ஸ்கூலும் நடத்துறோம். சினிமாவோட நின்னுடாம கல்வி சம்பந்தப்பட்ட வேலைகள்ல ஈடுபடுறது... மனசுக்கு நிறைவா இருக்குப்பா!''னு புன்னகை தந்தாங்க ரேணுகா!

வெல்கம் பேக்!

 ஆயிரம் முத்தங்களுடன் சரண்யா!

'புதிய தலைமுறை' சேனல்ல நியூஸ் ரீடர் அண்ட் ரிப்போர்ட்டரா பரிணமிக்கிற சரண்யாவோட வாய்ஸ்... அவ்ளோ அழகு. 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’ படத்துல நாயகியா கலக்கியிருக்கிற சரண்யாகிட்ட,

கேபிள் கலாட்டா ! - ஆசை... 'அமுதா’வாக ஆசை!

''சேனல்ல மதியம் 2 மணி நியூஸ், மாவட்டச் செய்திகள், ஈவ்னிங் ஸ்போர்ட்ஸ், 'ஏழு வரை இன்று’ நியூஸ்னு கலக்குறீங்களே..?''னு கேட்டா, பிரகாசமாகறாங்க.

''நான் படிச்சது பிராட்காஸ்ட் கம்யூனிகேஷன் கோர்ஸ் ரீட்டா. இந்த மீடியா ஃபீல்ட் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. ஆனா... சினிமாவைவிட சேனல்ல வர்றதைத்தான் எங்க வீட்டுல விரும்புறாங்க. அதனால, சினிமாவுக்கு ஃபுல்ஸ்டாப் வெச்சுட்டேன். டப்பிங், சீரியல் மற்ற வாய்ப்புகளும் வந்துக்கிட்டிருக்கு. இப்போதைக்கு நியூஸ் செஷனுக்கே ஷெட்யூல் சரியா இருக்கு. அப்புறமா பார்த்துக்கலாம்!''னு பை சொன்னாங்க சரண்யா!

செய்திகள் வாசித்தது சரண்யா!

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா ! - ஆசை... 'அமுதா’வாக ஆசை!

150

அநியாயமாக இருக்கிறது!

''சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'தங்கம்’ தொடர், சில நாட்களாக அபத்தமாகவே சென்று கொண்டிருக்கிறது. குழந்தை இல்லாத இளவஞ்சி, எங்கிருந்தோ ஒரு குழந்தையைத் திருடி வந்து வீட்டில் வைத்து வளர்க்கிறார். யாராவது வருகிறார்கள் என்றால்... ஒரு தலையணையைக் கொண்டு குழந்தையை மறைக்கிறார். தலையணையை வைத்து மறைத்துவிட்டால், வீட்டில் ஒரு குழந்தை இருப்பது மற்றவர்களுக்கு தெரியாமலா போய்விடும்? இப்படிப்பட்ட பற்பல அபத்தங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். தொடரை இழுப்பதற்காக இப்படியெல்லாம் செய்வதை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று அட்வைஸ் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த ரேவதி

அதிர்ச்சி டயலாக்ஸ்!

''விஜய் தொலைக்காட்சியில், 'கனா காணும் காலங்கள்' என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. கல்லூரியை அடிப்படையாகக் கொண்ட இத்தொடரில், சமீப நாட்களாக கல்லூரி பையன்களுக்கு நண்பனாக ஒரு சிறுவன் வந்து கொண்டிருக்கிறான். கல்லூரி ஏரியாவிலேயே எப்போதும் உட்கார்ந்திருக்கும் அவனிடம்... 'என் கேர்ள் ஃப்ரெண்ட் எப்படி இருக்கிறா?’ என்று மாணவன் ஒருவன் கேட்க, 'ரொம்ப சப்பை ஃபிகரா இருக்கு’ என்று பதில் சொல்கிறான் சிறுவன். இளம் சிறுவனின் வாயிலிருந்து இப்படிப்பட்ட டயலாக்ஸ் வருவதைக் கேட்கக் கேட்க அதிர்ச்சியாக இருக்கிறது. ஏற்கெனவே இளம் தலைமுறை பலவாறாக கெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படிப்பட்ட காட்சிகள், வசனங்கள் எல்லாம் மேற்கொண்டும் அவர்களை கெடுக்கவே செய்யும். எனவே இனியும் இத்தகைய செயலை தொடராதீர்கள்'' என்று வேண்டுகோள் வைக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஆர்.பிருந்தா

சண்டையை மூட்டும் சண்டே காமெடி!

சன் டி.வி-யில் ஞாயிறுதோறும் காலை 11 மணிக்கு 'சண்டே காமெடி கலாட்டா' என்றொரு நிகழ்ச்சி வருகிறது. அதை ஆன் செய்தால், சண்டேவும் அதுவுமாக எங்கள் வீட்டில் சண்டைதான் வருகிறது. உடனே 'அந்த சேனலை மாற்று’ என்று ஆளாளுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள. அந்த அளவுக்கு படுதிராபையாக இருக்கிறது நிகழ்ச்சி. தேவர்தர்ஷினியும், மதுரை முத்துவும் ஜோக் என்கிற பெயரில் எதையாவது சொல்லிவிட்டு, தாங்களே குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறார்கள்... பார்க்கும் நாங்களோ... குலுங்கிக் குலுங்கி அழுகிறோம்'' என்று கண்ணீர் வடிக்கிறார் கோவில்பட்டியைச் சேர்ந்த லட்சுமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism