Published:Updated:

அன்பு காட்டும் ஓர் அறக்கட்டளை

நிவாரணம் மட்டுமல்ல நிம்மதியும் !படங்கள்: எம்.உசேன், ச.இரா.ஸ்ரீதர் ம.மோகன்

அன்பு காட்டும் ஓர் அறக்கட்டளை

நிவாரணம் மட்டுமல்ல நிம்மதியும் !படங்கள்: எம்.உசேன், ச.இரா.ஸ்ரீதர் ம.மோகன்

Published:Updated:
 ##~##

மார்பக மற்றும் கர்ப்பப்பை, கர்ப்பவாய் புற்றுநோயால் அவதிப்படும் பெண்கள் பலரும்... இன்று லட்சங்களை இறைத்து சிகிச்சை பெறுகிறார்கள். இருந்தபோதும் நோயுற்ற காலத்தில் அவர்கள் அனுபவிக்கும் வலி, வேதனை தாங்கிக்கொள்ள முடியாதது.

''பொறுத்துக் கொள்ள முடியாத அந்த கேன்சர் வலியை, நாங்கள் குறைக்கிறோம்!'' என்றபடி மருத்துவ சேவையாகவே அப்பணியைச் செய்து கொண்டிருக்கிறது சென்னை யில் உள்ள, 'லஷ்மி வலி மற்றும் ஆதரவுமருத்துவ அறக்கட்டளை' (Lakshmi Pain and Palliative Care Trust).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'காலணிகளை அணிந்தபடியே உள்ளே வரவும்!’ என்று கிளினிக் முகப்பில் எழுதப்பட்டிருக்கும் வாசகமே, அந்த மையம் காட்டும் அரவணைப்பின் ஆழத்தை நன்றாகவே புரிய வைக்கிறது.

''ஒருமுறை... முதுகுவலியால துடிச்சு போனாங்க அப்பா. பல இடங்கள்ல தொடர்ந்து ட்ரீட்மென்ட் கொடுத்தும், குணப்படுத்த முடியல. கேரள மாநிலம், கோழிக்கோடுல இருக்கற 'பெயின் அண்ட் பாலியேடிவ் சொஸைட்டி’யில் சிகிச்சை எடுக்க வெச்சு, வலியைக் குறைச்சு சரிப்படுத்தினோம்.

அன்பு காட்டும் ஓர் அறக்கட்டளை

மருத்துவம் படிச்ச ஒரு பெண்ணா, அப்பா கூடவே அங்கிருந்து கவனிச்சப்போ 'பாலியேடிவ்’ கேர் பற்றி நிறைய கற்றுக்கொள்ள முடிஞ்சுது. நம்ம ஊரில் பலர்  பல வலி தரும் நோய்களால, குறிப்பா புற்றுநோய் வலியால் அவதிப்படுறாங்க. 'நோயில் இருந்து முற்றிலும் இல்லைனாலும், வலியில இருந்து அவங்கள மீட்டு, வாழுற காலத்துல வலி நிவாரணமாவது பெறச் செய்ய    லாமே'னு தோணுச்சு. அந்த அக்கறையிலதான் இந்த       அறக்கட்டளையை உருவாக்கி, அதன் சார்பா கிளினிக்கை நடத்திட்டு வர்றோம்!''

- அழகாக ஆரம்பிக்கும் அறக்கட்டளையின் 'டிரஸ்டி', டாக்டர் மல்லிகா திருவதனன், கடந்த 2000-ல் தொடங்கிய மையம் இது. இதைத் தொடங்குவதற்கு முன், ஆஸ்திரேலியா சென்று முறையே 'டிப்ளமா இன் பாலியேடிவ் மெடிசின் கோர்ஸ்’ பயிற்சி பெற்றே தொடங்கியிருக்கிறார்.

அன்பு காட்டும் ஓர் அறக்கட்டளை

''நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் ஈரோடு. திருமணத்துக்குப் பிறகு... முழுக்க சென்னைவாசியானேன். கணவர் திருவதனனும் மருத்துவத்துறையில் பணியாற்றுகிறார். ரெண்டு பிள்ளைங்க. என்னோட மாமனார் டாக்டர் சுந்தரவதனன். அவரை பலரும் பரவலா தெரிஞ்சு வெச்சுருப்பாங்க. 'டாக்டர் சுந்தரவதனன் நர்சிங் ஹோம்’, அவர் சேவை உள்ளத்தோட நடத்தின மருத்துவமனை. அதுக்கு பக்கபலமா இருந்தவங்க, அவர் மனைவி லஷ்மி. அவங்களோட பெயர்லதான் இந்த கிளினிக் இயங்கிக்கிட்டிருக்கு. இந்த டிரஸ்ட்டை தொடங்கினதுல இருந்து முழு அர்ப்பணிப்போட கரங்கள் கோத்த டாக்டர் சுபத்ரா, டாக்டர் அசோக் மேத்யூ, டாக்டர் மிருணா ளினி, டாக்டர் தயாளன், டாக்டர் அம்ருதா.... இவங்க எல்லாரும் இதோட தூண்கள்!'' என்ற மல்லிகா,

''இன்னிக்கு இருக்கற நோய்கள்ல, 40 சதவிகித நோய்கள்... முறையான ஆதரவு இல்லாத காரணத்தினாலேயே அதிகரிச்சதுதான். நோயுற்றவங்களுக்கு கொடுக்கப்படும் மனரீதியான ஸ்பெஷாலிட்டி ரொம்பவே முக்கியம். கேன்சர் மாதிரியான நோய்கள்ல தொடர்ந்து இருக்குற வலியே... மிகப் பெரிய வியாதி. சர்ஜரி, மாத்திரை இதுங்களால மட்டும் அதுக்கான தீர்வைக் கண்டுட முடியாது. கனிவான அரவணைப்பு ரொம்ப அவசியம். அதனை மருத்துவர்கள்தான் கொடுக்க முடியும். அதைச் சரியா செய்றோம்கிற திருப்தி... எங்களுக்கு நிறையவே உண்டு!''

- அக்கறையோடு பகிர்ந்தார்.

டிரஸ்டிகளில் ஒருவரான டாக்டர் சுபத்ரா, ''நோய்கூட இருந்துட்டுப் போகட்டும். ஆனா... உயிர் நோக வைக்கிற இந்த வலியைக் குறைக்க முடியாதா..?னு வேதனையோடு புலம்புறவங்களுக்கு, நாங்க கொடுக்கற வலி நிவாரண சிகிச்சைதான் இந்த கிளினிக்கோட சிறப்பு. ட்ரீட் மென்ட்டுக்காக இங்க வர்றவங்கள முதல்ல மனம்விட்டு பேசச் செய்வோம். அந்த நேரம் அவர்களுக்கு வலி இருக்கும்பட்சத்தில்... குறிப்பிட்ட சில வலிநிவாரணிகளை கொடுத்து, ரிலீஃப் செய்றோம் (இந்த மாத்திரைகள், எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்காது). தொடர்ந்து வலி, வாந்தினு இருந்தா... பரிசோதனை செய்து, உரிய மருந்து, மாத்திரை களைக் கொடுப்போம்.

அன்பு காட்டும் ஓர் அறக்கட்டளை

அக்கறையான கவனிப்பை முடிச்ச பிறகு, 'மறுபடியும் ஏதாவது பிரச்னைனா... எப்ப வேணும்னாலும் தாராளமா நீங்க இங்க வரலாம்!’னு சொல்லி அனுப்பும்போது, ஒவ்வொருத்தரும் கண்ணீர் விட்டு கதறிடுவாங்க... நெகிழ்ச்சியில! சிகிச்சையோட... நம்ம அன்பும், ஆலோசனையும் கலந்து கிடைக்குறப்ப, உடலோட 'ஃபிட்னஸ்’ அதிகரிக்கும்.

கேன்சர்னு தெரிஞ்சதுமே மருந்து, மாத்திரை எடுத்துக்கறதுதான் நல்லது. ஆனா, நோய் முத்தின நிலையில வர்றவங்கதான் ஜாஸ்தி. வசதியற்ற ஏழைகளுக்கு இலவசமாவே சிகிச்சை தர்றோம். வசதியுள்ளவங்க, விருப்பப்பட்டு பணம் கொடுப்பாங்க. இதைத் தவிர... எங்களோட இந்தப் பணியைப் பாராட்டி சில டிரஸ்ட்கள், நெருக்கமான நண்பர்கள்னு பலரும் உதவுறாங்க. இப்பணியை இன்னும் விரிவுபடுத்தி, கிராமம் கிராமமா விழிப்பு உணர்வை உண்டாக்கவும், இது சார்ந்த எஜுகேஷன் புராஜெக்ட்ஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கோம். அதுக்கு... இன்னும் பல கரங்கள் இணையணும்னு விரும்புகிறோம்!''

- எதிர்பார்ப்போடு சொன்னார் சுபத்ரா.

இங்கே சிகிச்சை பெரும் பலரின் பாராட்டுதல்களும், இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றே தோன்றுகிறது. ''மூணு வருஷமா மார்பகப் புற்றுநோயால அவதிப்பட்டுக்கிட்டு இருக்கேன். வலி கதறி அழ வைக்கும். இந்த கிளினிக் பத்தி தெரியவந்தப்போ, 'பெரிய பெரிய ஹாஸ்பிட்டல்ல எல்லாம் பார்க்காததையா இங்க பார்த்துடப் போறாங்க’னு நினைச்சுதான் வந்தேன். ஆனா... இவங்க கொடுத்த மாத்திரையும், எம்மேல காட்டின அக்கறையும் ரெண்டே நாள்ல வலியை குறைய வெச்சுருக்கு. ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் நிம்மதியை உணர்றேன். எங்க குடும்ப நிலைமையைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, இலவசமா மருத்துவம் பார்க்கறாங்க. இப்போ பத்து நாட்களுக்கு ஒருமுறை இங்க வந்து போயிட்டு இருக்கேன். இவங்களுக்கு இந்த ஜென்மம் முழுக்க நான் நன்றி சொல்லணும்னு தோணுது!''

என்று உருகுகிறார்... சென்னையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism