Published:Updated:

காலேஜ் லைஃபை நினைச்சாலே... ஒரே ஃபீலிங்குதான் !

ம.மோகன் படம்: ஜெ.வேங்கடராஜ்

காலேஜ் லைஃபை நினைச்சாலே... ஒரே ஃபீலிங்குதான் !

ம.மோகன் படம்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
##~##

எவ்வளவோ நண்பர்கள் கிடைத்தாலும்.... பள்ளி, கல்லூரி நாட்களில் துளிர்க்கும் நட்பின் எடைக்கு வேல்யூ அதிகம். பாசம், வலி, பகிர்வு, படிப்பு என்று பரவசத்தோடு பரிமாறிக் கொண்டு, லைஃப் முழுக்க அழைத்துச் செல்லும் பலம், பாலம் இரண்டுமே அந்தப் பருவ காலங்களில் பூக்கும் நட்புக்கு உண்டு!

இதோ..... ஜூன், ஜூலைப் பூக்களைப் போல புன்னகையோடு..... பிள்ளைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'அதெல்லாம் ஒரு கனாக் காலம்!’னு சில செலிப்ரட்டிஸ்கள்.... தாங்கள் பள்ளி, கல்லூரி நாட்களில் செய்த சேட்டைகளில் தொடங்கி சென்டிமென்ட்ஸ் வரைக்கும் பகிர்கிறார்கள், இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரசாந்தினி

''12 பி படத்துல வர்ற 'ஒரு புன்னகைப்பூவே....’ பாட்டுதான் என்னோட முதல் பாட்டு. அப்போ சென்னை டபிள்யூ.சி.சி காலேஜ்ல படிச்சுட்டிருந்தேன். படம் ரிலீஸன்னிக்கு முதல்முறையா 'கட்’ அடிச்சிட்டு ஃப்ரெண்ட்ஸை அழைச்சுட்டு தியேட்டருக்கு போனேன். அதையும் அம்மாகிட்ட மறக்காம சொல்லிட்டே செய்தேன். ரொம்பவே சுவாரஸ்யமான அந்த நாள்... என்னோட காலேஜ் டேஸ்ல நிகழ்ந்ததுனு நினைக்கிறதே சந்தோஷமா இருக்கும்.

காலேஜ் லைஃபை நினைச்சாலே... ஒரே ஃபீலிங்குதான் !

அப்பாகிட்ட (மலேசியா வாசுதேவன்) இருந்து பாட்டு பாடுறதையும்... சுதந்திரம், ரிலாக்ஸ், வொர்க்னு மத்த எல்லா அனுபவங்களை அம்மாகிட்ட இருந்தும் கத்துக்கிட்டேன். அதேபோல படிப்புல நாட்டம், ஃப்ரெண்ட்ஸ், பேஸ்கட் பால், அத்லெடிக்ஸ்னு மற்ற எல்லாத்தையும் கத்துக் கொடுத்தது... ஸ்கூல், காலேஜ் இது ரெண்டும்தான்.

எல்லாத்தையும் கடந்து இப்போ... மகன் ரித்விக் செகண்ட் ஸ்டாண்டர்டு போறார். படிக்கற காலத்துல என்னோட பேரண்ட்ஸ் ஏத்துக்கிட்ட பொறுப்புகள் எல்லாம்... பையன் மூலமா எனக்கு. லைஃப் ரொம்ப ஹேப்பி... அதுக்கு முதல் காரணம் படிக்கற நாட்கள்னு சொல்வேன்!  

இனியா

''சின்ன வயசுலிருந்தே படிப்பு, நடிப்புனு ரெண்டையும் பேலன்ஸ் செய்ற சூழல். ஆனாலும் ஸ்கூல் லைஃப் எனக்கு மிஸ் ஆகல. அதேசமயம், காலேஜ் 'மிஸ்’ ஆயிடுச்சு. கரஸ்லதான் படிக்கிறேன். வீட்ல, 'பைக் ஓட்ட கத்துக்கக் கூடாது!’னு திட்டும்போது... ஃப்ரெண்ட்ஸ்கூட போய் தெரியாம ஸ்கூட்டி ஓட்டக் கத்துக்கிட்டது... 'இந்த ஸ்போர்ட்ஸ் வேணாம்'னு சொல்றப்போ.... பேரண்ட்ஸ்கிட்ட அதை மறைச்சு... அதே ஸ்போர்ட்ஸ பழகினதுனு ஏகப்பட்ட 'த்ரில்’!

காலேஜ் லைஃபை நினைச்சாலே... ஒரே ஃபீலிங்குதான் !

படிப்பு மட்டும்னு இல்லாம... ஆர்வத்துல கத்துக்கிட்டதுதான் டான்ஸும். அந்த நடன ஆர்வம்தான்... இன்னிக்கு ஒரு நடிகையா என்னை ஆக்கியிருக்கு. இதுக்கான மெச்சூரிட்டி கிடைக்கச் செய்த என்னோட அந்த 'ஸ்கூல் டேஸ்’ நாட்களை... பொக்கிஷம்னே சொல்லலாம். ஊக்கப்படுத்தின 'டென்த்’ வகுப்பு தோழிகளைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்!''

பாவனா  

''திரிஷ்னா, லெட்சுமி, இந்த பாவனா... மூணு பேருக்கும் 'ஜாலி பேர் வழி!’னு சென்னையில சிலையே வைக்கலாம். அவ்ளோ கொண்டாட்டமா காலேஜ் நாட்கள்ல அசத்துவோம். 'நீங்க கிளாஸுக்கு வராம இருப்பதே.... சுகம்’னு போர்டுல எழுதிப்போடாத குறையா லெக்ஸர்ஸுங்க கண்டிப்பாங்க. அதுக்காக படிப்புல கோட்டைனு நெனைச்சுடாதீங்க. எல்லோருமே கோல்ட் மெடலிஸ்ட்தான். அந்த பெர்ஃபெக்ஷன்தான் யார்கிட்டயும் அவ்ளோ ஈஸியா மாட்டிக்காம எங்களை காப்பாத்துச்சு.

காலேஜ் லைஃபை நினைச்சாலே... ஒரே ஃபீலிங்குதான் !

காலேஜ்ல எப்பவும் பசங்களுக்கும், எங்களுக்கும் நடக்குற ஜாலி யுத்தம் இருக்கே.... 'அய்யோடா..!’னு இருக்கும். கேர்ள்ஸ் முன் வரிசையிலும், பாய்ஸ் பின் வரிசையிலும் உட்கார்ந்திருப்போம். வகுப்பு ஆரம்பிச்சதும் பின்பக்கத்துல அமர்ந்திருக்குற பாய்ஸ்... எங்களோட துப்பட்டாவை பின்பக்க டெஸ்க்ல கட்டி விட்டுடுவாங்க. அந்த சமயத்துல எதார்த்தமா லெக்சரர்... கேள்விய கேட்க... அப்போ எழுந்தா... அவ்ளோதான், கழுத்தை இறுக்கி கீழே விழுந்துடுவோம். பதிலுக்கு சும்மாவா விடுவோம்... பாய்ஸ் கேங்க் வெளியில போய்ட்டு வரும்போது உட்கார்ற பெஞ்ச் நடுவுல தண்ணிய கொட்டி வெச்சுடுவோம். அவசர அவசரமா அவங்க வந்து உக்கார்ந்த பிறகு... என்ன நடக்கும்னு புரிஞ்சுருக்குமே!''

திவ்யதர்ஷினி

''இன்னிக்கு நான் குட் கேர்ளா என் கேரியரை வளர்த்திருக்கேன்னா, அதுக்குக் காரணம் என்னோட டீச்சர்ஸ்தான். குறிப்பா... கீதா, சித்ரானு என்னோட ஸ்கூல் டீச்சர்ஸ். இப்பவும் அவங்க என் கான்டாக்ல இருக்கறாங்க. காலேஜ் லைஃப்ல நாங்க ஆறு பேர் 'சிக்ஸ் ஸ்டார்ஸ்’ கேங். மாஸ் கட் அடிக்கிறது, திடீர்னு ஒரு நாள் 'பர்த் டே’னு சொல்லி ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கிஃப்ட் கலெக்ட் பண்றது, கல்ச்சுரல்ஸ்ல ஆட்டம் போடுறதுனு கலக்கோ கலக்குனு கலக்கினோம். ஆனாலும் இன்னொரு பக்கம் என் மேல அக்கறை வெச்சு, எனக்கு வெல்விஷர்களா இருந்தாங்க என் லெக்சரர்ஸ். என் ஃப்ரெண்ட்ஸ் மட்டுமில்ல... என் லெக்சரர்ஸும் என் ஃப்ரெண்ட்ஸ்தான்.

காலேஜ் லைஃபை நினைச்சாலே... ஒரே ஃபீலிங்குதான் !

ச்சே... இப்படித்தான்... இந்த காலேஜ் லைஃப் ஞாபகம் வந்தாலே ஃபீல் ஆயிடுது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism