Published:Updated:

யாதுமாகி நின்றாள் ! - கமலை அறிமுகப்படுத்திய சாரா!

ம.மோகன் படங்கள்: வீ.நாகமணி

யாதுமாகி நின்றாள் ! - கமலை அறிமுகப்படுத்திய சாரா!

ம.மோகன் படங்கள்: வீ.நாகமணி

Published:Updated:
##~##

''ராத்திரியெல்லாம் ஒரு பயத்தோடயே தூங்காமத் தவிச்சு... காலையில ஓடி வந்து என்னை வாங்கி இடுப்பில் கட்டிக்கொண்ட அந்த அம்மாவின் தவிப்பை, நல்லாவே உணர முடியுது. வயித்துல சுமந்து பெற்ற தாயைவிட, என் முதல் தாயா நான் நினைக்கிறது அவங்களதான். என் வாழ்வை துவங்கி வைத்த, என் வாழ்க்கையின் முக்கியமான பெண் அவங்க!''

யாதுமாகி நின்றாள் ! - கமலை அறிமுகப்படுத்திய சாரா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- 'நட்சத்திர இயக்குநருக்கு உயிர் கொடுத்த பெண்!’ என்ற தலைப்பில், கடந்த 5.06.2012 தேதியிட்ட அவள் விகடன் இதழில்... தான் பிறப்பெடுத்து உயிர் பெறக் காரணமாக இருந்த டாக்டர் சாராவைப் பற்றி இயக்குநர் மகேந்திரன் பதிவு செய்திருந்தார்.

இந்த உண்மைக் கதை இதழில் வெளிவந்த பிறகு... நடிகர் சாருஹாசன், அபிராமி ராமநாதன் இருவரும் டாக்டர் சாராவின் கைச்சூட்டிலேயே பிரசவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும், கமல்ஹாசனின் அம்மா

யாதுமாகி நின்றாள் ! - கமலை அறிமுகப்படுத்திய சாரா!

ராஜலட்சுமியின் நெருங்கிய தோழி டாக்டர் சாரா என்பதும், ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் அழைத்துச் சென்று கமல்ஹாசனுக்கு 'களத்தூர் கண்ணம்மா’ படவாய்ப்பை பெற்றுத் தந்ததும் சாராதான் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

டாக்டர் சாராவின் வளர்ப்பு மகள் ஜோதி, மகன் பெஞ்சமின் இருவரையும் சந்திந்தோம். ''அம்மாவுக்கு வேலை கிடைத்து முதல்ல பணியாற்ற சென்ற இடம், சிவகங்கை. அதைச் சுற்றி இருக்குற சோழபுரம், திருப்பாச்சேத்தி, இளையாங்குடி, பரமக்குடினு எல்லா ஊருக்கும் போய் பிரசவம் பார்த்துட்டு வருவாங்க அம்மா. அவங்களோட அந்த மனசுக்கு நட்பானவங்க நிறைய பேர். ராஜலட்சுமி மேடம் (கமல்ஹாசனின் அம்மா), மீனாட்சி மேடம் (அபிராமி ராமநாதனின் அம்மா), சாருஹாசன் சார்னு... நிறைய பேரை சொல்லலாம்.

சாரா அம்மா சென்னைக்கு டிரான்ஸ்ஃபராகி வந்த பிறகு, அந்த நட்பு வட்டம், இன்னும் விரிவடைஞ்சுடுச்சு. ஏவி.எம்.ராஜேஸ்வரி மேடம், சௌகார் ஜானகி மேடம்னு பலரோட உறவும் அவங்களுக்குக் கிடைச்சது. இப்போ வரைக்கும் இந்தக் குடும்பத்தினரை சந்திக்குறப்போ எல்லாம், சாரா அம்மாவோட நினைவுகளைப் பகிர்ந்துக்கிறதை அவங்களால தவிர்க்க முடியாது!'' என்று சொல்லும்போதே... அக்காவும், தம்பியும் நெகிழ்ச்சியானார்கள்.

யாதுமாகி நின்றாள் ! - கமலை அறிமுகப்படுத்திய சாரா!
யாதுமாகி நின்றாள் ! - கமலை அறிமுகப்படுத்திய சாரா!

இதைப் பற்றிக் கேட்டதுமே, பரவசம் பற்றிக் கொள்கிறது ஏவி.எம். சரவணனுக்கு... ''நல்லா நினைவிருக்கு. அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. அப்பா, அவரோட ரூம்ல ஏதோ வேலையா இருந்தார். 5, 6 வயசு மதிக்கத்தக்க ஒரு சின்னப் பையனைத் தன்னோட கரங்கள்ல கோத்துக்கிட்டு, சாரா மேடம் வீட்டுக்கு வந்திருந்தாங்க. 'இந்த பையன் நல்லா டான்ஸ் ஆடுறான், பாட்டு எல்லாம் பாடுறான். என் தோழி ராஜலட்சுமியோட பையன். நீங்கதான் சினிமா எடுக்குறீங்களே... ஏதாவது வேஷம் இருந்தா கொடுங்களேன்!’னு அப்பாகிட்ட கேட்டாங்க. அவனை அழைத்த அப்பா, 'ஸ்டாண்ட் லேம்ப்’பை ஆன் செய்துட்டு, நடிச்சுக் காட்டச் சொன்னார். ஒரு ஹிந்தி பாடலை பாடிக்கிட்டே நடிச்சுக் காட்டின அந்தப் பையனை அப்பாவுக்கு ரொம்பப் பிடிச்சுப் போக, 'களத்தூர் கண்ணம்மா’வுல 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...’னு பாட வெச்சார். கமல்கிட்ட இப்பவும் அதை நினைவுகூர்வேன். 'சாரா அம்மாவுக்குதான் தேங்க்ஸ் சொல்லணும்!’னு சிரிப்பார் கமல்!'' என்றார் தானும் சிரித்தபடி சரவணன்.

அதே நெகிழ்ச்சிதான்... 'அபிராமி' ராமநாதனுக்கும், ''சிவகங்கை பக்கத்துல பூலாங்குறிச்சிதான் என்னோட சொந்த ஊர். நான் பிரசவிக்கப்பட்டதும் சாரா அம்மாவாலதான். அந்த நட்புல சாரா மேடமோட வீட்டு விசேஷம், ஊர்த் திருவிழானு எல்லாத்துக்கும் போற வாய்ப்பு கிடைக்கும். அவங்க பசங்களும் நானும் விளையாட்டுத் தோழர்கள். எட்டு வயசுக்குப் பிறகு... குடும்பத்தோட சென்னைக்கு வந்துட்டோம். கொஞ்ச நாள்ல சாரா மேடமும் சென்னையில இருக்காங்கனு அம்மாவுக்குத் தெரிய வந்துச்சு. பழைய அன்பும், பழக்கமும் துளிர்த்துடுச்சு. அவங்க கைரேகை பதிந்த உடல் என்பதாலவோ என்னவோ... நான் மட்டுமில்லாம அவர் பிரசவித்த பலரும் பிரகாசமா இருக்காங்க. எங்கேயாச்சும் 'நல்ல குணம், நல்ல சேவை’னு யார் பேசினாலும், சாரா மேடத்தோட ஞாபகம்தான் எனக்கு வரும்!'' என்று உருகினார் ராமநாதன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism