மனம் வருந்த வைத்த மாஹி!

ஹரியானாவில் 70 அடி ஆழ போர்வெல் குழியில் விழுந்து, நான்கு வயதுச் சிறுமி மாஹி உயிரிழந்த நிகழ்வு, இணையத்தையும் மிகவும் உலுக்கிவிட்டது. ஒருபுறம் மாஹியை மீட்க நான்கு நாட்களாக ராணுவத்தினர் போராட, மறுபுறம் ட்விட்டரில் தொடர் பிரார்த்தனைகள் பதிவாகின. ஐந்து நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்த மாஹி பற்றி நொடிக்கு 20 ட்வீட்டுகள் பகிரப்பட்டன. இந்தியாவில் மூடப்படாத போர்வெல் குழிகளுக்குள் குழந்தைகள் விழுந்து மடியும் அவலம் தொடர்வது, கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதிகாரிகள், அரசு ஊழியர்களின் அலட்சியத்தைக் கண்டிக்கும் அதேவேளையில், பெற்றோர்களும் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. ராணுவத்தினரின் 85 மணி நேரப் போராட்டத்தில் பலன் இல்லை என்ற தகவல் வெளியானதும், கண்ணீர் மழையால் நனைந்தது 'ட்விட்டர்'. ஆயிரக்கணக்கான இணையவாசிகள் ஸிமிறி இட்டு இரங்கலைப் பதிவு செய்தனர். கூடவே, 'இனியாவது பாடம் கற்போம்’ என்ற அறிவுறுத்தலையும் பதிய தவறவில்லை.

மாஹி... மீண்டும் ஓர் பாடம்!

இந்தியாவுக்குப் பெருமையா?!

வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் சாதனை செய்துவிட்டால்... உடனே இணையத்தில் ஓர் விவாதப் போர் மூண்டுவிடும். 'இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்’ என்று ஒரு குரூப்பும், 'இந்தியர்கள் சொந்தம் கொண்டாடுவது தவறு’ என்று மற்றொரு குரூப்பும் கிளம்பிவிடும். சுனிதா வில்லியம்ஸ் விஷயத்திலும் இதுதான் நடந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளிப் பயணம் மேற்கொள்கிறார் என 'நாஸா’ அறிவிப்பு வெளியிட்ட மறுநிமிடமே... ட்விட்டரில் சுனிதாவுக்கு வாழ்த்துகள் குவியத்தொடங்கின. அதேவேளையில், 'சுனிதா வில்லியம்ஸின் திறமையைக் கண்டுகொண்டது, அமெரிக்காவின் 'நாஸா’ தான் என்பதால், சுனிதாவின் இந்திய பூர்விகத்தை வைத்து ஆட்டம் போட வேண்டாம்' என்று சிலர் பதிவுகளைத் தட்டிவிட்டனர். 'சுனிதா இந்தியாவில் இருந்திருந்தால், இருக்கும் இடம் தெரியாமல் போய் இருக்கும்’ என்கிற ரீதியிலும் கருத்துகள் பதியப்பட்டன. அவற்றையும் மீறி, சுனிதாவை இந்தியாவுடன் தொடர்புபடுத்தி இடப்பட்ட ட்விட்டர் வாழ்த்துரைகள்தான் முன்னிலை வகித்தன!

உரிமை, பெருமையையெல்லாம் மீறி... அந்த உண்மை உழைப்பாளிக்கு வாழ்த்துக்கள்!

'யூடியூப்’ தந்த இசையரசி!

தொழில்நுட்ப யுகத்தில் திறமைக்குக் களம் அமைப்பதில் இணையத்துக்கு இணை ஏதுமில்லை என்பதற்கு வேலன்டினா லிஸிட்ஸா என்ற உக்ரைன் நாட்டு பெண்ணும் ஓர் உதாரணம். பியானோ இசையை முறைப்படி கற்ற இவர், தன் இசைத் திறனை நிரூபிப்பதற்கான களமாக 'யூடியூப்’-ஐ பயன்படுத்தினார். வீட்டில் இருந்தபடியே இசைக் கச்சேரியை தனது 'யூடியூப்’ பக்கத்தில் பதிவேற்றினார். இவரது இசையில் மயங்கிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள், இவரின் இணையப் பக்கத்தை நண்பர்களுக்குப் பகிர்ந்தார்கள். விளைவு... உலகம் முழு வதும் பல லட்ச ரசிகர்களை வசீகரித்தார். இதன் உச்சமாக, லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் தனியாக பியானோ இசைக் கச்சேரியை அரங்கேற்றும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டரை மணி நேர இசை நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான ரசிகர்களைச் சொக்க வைத்திருக்கிறார். வேலன்டினாவுக்கு புதியபாதை காட்டிய அவரது 'யூடியூப்’ பக்கம் இதுதான் -http://www.youtube.com/ValentinaLisitsa

திறமைக்கு 'யூடியூப்’ துணை!

வலைப்பூ வரசி !

கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து எழுதி வருபவர், ஹுஸைனம்மா. 'அன்றாட வாழ்வின் அனுபவங்களைப் பகிர்தல்’ என்ற வலைப்பதிவின் அடிப்படையை அப்படியே பின்பற்றிவரும் பதிவர்களில் ஒருவர். குடும்பம், சமூக அமைப்புகள் பற்றியே மிகுதியாக இருந்தாலும்கூட, எழுத்தில் வெரைட்டி காட்டிவரும் இவர், இந்த இதழின் வலைப்பூவரசி! இவரது வலைப்பூ - http://hussainamma.blogspot.in/

ஸ்ரேயா கோஷல் தினம்!

ஜூன் 25, 26... இந்த இரு நாட்களும் ட்விட்டர் பக்கம் வந்தவர்களுக்கு இந்திய ட்ரெண்டிங்கைப் பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சி. #ShreyaGhoshalDayஎன்ற டேக், நாள் முழுக்க ட்ரெண்டிங்கில் இருந்தது! பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஒரு தினமா?! இதன் பின்னணி என்ன என்று தெரியாமல் பலரும் மண்டையைப் பிய்த்துக் கொள்ள, ஸ்ரேயா ரசிகர்களோ அவர் புகழ்பாடத் தொடங்கினர். லட்சக்கணக்கான வாழ்த்து ட்வீட்களால் ஸ்தம்பித்துப் போன ஸ்ரேயா கோஷல், தனது https://twitter.com/shreyaghoshalட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டார். ட்விட்டரில் அவர் 11 லட்சம் பேரை வசப்படுத்தி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

கொஞ்சம் மெனக்கெட்டு துழாவிப் பார்த்ததில் ஸ்ரேயா கோஷல் தினம் உருவான சரித்திரம் தெரியவந்தது. கடந்த 2010-ல் அமெரிக்காவின் ஓஹியோ நகருக்குச் சென்று இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார், ஸ்ரேயா. அப்போது அவரது இசைச் சேவையை பாராட்டும் விதமாக, ஜூன் 26-ம் தேதியை 'ஓஹியோவின் ஸ்ரேயா கோஷல் தினம்’ என அந்த மாகாணத்தின் ஆளுநர் அறிவித்திருக்கிறார்!

ஹேப்பி ஸ்ரேயா கோஷல் டே!