'இது, சினிமா கதையல்ல!’ என்கிற தலைப்பில், 13.3.2012 தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. பல்லாயிரக்கணக்கான வாசகிகள் மற்றும் வாசகர்களை உலுக்கிய அக்கட்டுரையில் இடம்பெற்றிருந்த 17 வயது பெஹரா, ஜூன் 22 அன்று பரிதாபமாக இறந்துபோனார்.

ஒடிசா மாநிலம், பீப்லி கிராமத்தில் 2008, செப்டம்பரில், பெஹராவின் தோழியான பிரபாதியை கயவர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போதே... கயவர்களின் நெருக்கடிக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார் பிரபாதி. இதையடுத்து, 'கயவர்களுக்கு தண்டனை தந்தே தீருவேன்' என்று உறுதியோடு சட்டநடவடிக்கைகளில் இறங்கினார்... முக்கிய சாட்சியான பெஹரா.

'மரியாதையாக ஒதுங்கிவிடு' என்று மிரட்டிய கயவர்கள், 2011 நவம்பரில் பெஹராவையும் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை இறுக்கி வயல்வெளியில் வீசினர். உயிருக்குப் போராடிய பெஹரா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஷயம் தேசிய அளவில் விஸ்வரூபமெடுக்க... குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதோடு... அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மாநில அமைச்சர் பிரதீப் மஹரதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக கோமா நிலையில் போராடி வந்த பெஹரா... தன் தோழி பிரபாதி சென்ற இடத்துக்கே தற்போது தானும் சென்றுவிட்டார்.

'நாங்கள், பெண்களை தெய்வத்துக்கு சமமாக கொண்டாடுகிறோம்' என்று பெருமை பேசும் இத்தேசத்தில்... இன்னும் எத்தனை கொடுமைகள் காத்திருக்கின்றனவோ?!