பிஸினஸ் வெற்றிக் கதைகள்

உன்னால் முடியும் பெண்ணே!

தொழில் தொடங்க வேண்டும் என்றால்... பெரிதாக ஒரு முதலீடு, வேலை செய்ய ஆட்கள், அலுவலகம், உருவாகும் பொருளை விற்பனை செய்ய வாகனங்கள்... இப்படி நிறைய விஷயங்கள் தேவைப்படும். இவையெல்லாம் கிடைத்துவிட்டாலும்... நஷ்டம் வராமல் தொழில் செய்வது என்பது மிகப்பெரிய சாதனை!

இதோ... முதலீடு, ஆட்கள், அலுவலகம் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், 'கையிருப்பே கடவுள்' என்று தைரியத்தோடு களமிறங்கிய சித்ரா, மிகமிகக் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கி, ''நஷ்டமே வராத தொழில் செய்கிறேன்!'' என்று சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால், பூவம் கிராமத்தைச் சேர்ந்தவரான இந்த சித்ரா, செய்துவரும் தொழில்... பனை ஓலைப் பொருட்கள் தயாரிப்பு! மணி, வளையல், காது வளையம், பெல்ட், மாலை, காலணி என்று பெண்களின் அத்தனைவிதமான அணிகலன்களையும் பனை ஓலையில் செய்து அசத்துகிறார். இவை மட்டுமல்லாமல்... ஜாடி, தொப்பி, அர்ச்சனைத் தட்டு, பூக்கூடை, ட்ரே, பூத்தொட்டி, சிறு கூடைகள், பேபி பை, வெங்காயக் கூடை என்று பலவிதமான பொருட்களையும் ஓலையிலேயே தயார் செய்து, வண்ணம் தீட்டி வைத்திருப்பதைப் பார்த்தால்... ஏதாவது ஒரு பொருளை வாங்காமல் நீங்கள் நகர முடியாது! அந்த அளவுக்கு ஈர்க்கிறது அவருடைய கைவண்ணம்!

தன்னைப் பற்றி... தன் தொழிலைப் பற்றி இனி சித்ராவே பேசட்டும்...

''பிறந்து, வளர்ந்தது நாகப்பட்டினம். பத்தாம் வகுப்பு வரைதான் படிப்பு. அதற்கு மேல் படிக்க வைக்க வீட்டில் வசதியில்லை. அதனால் ஏதாவது வேலை செய்து குடும்பத்துக்கு உதவியாக இருக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். அப்போதுதான் மகளிர் குழு ஒன்றில் சேர்ந்தேன். பல்வேறு தொழில் பயிற்சிகளைக் கொடுத்தார்கள்.

ஆர்வத்தைவிட, அந்தப் பயிற்சிக்குச் சென்றால் மாதம் 750 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும் என்பதால், பனை ஓலைத் தொழில் பயிற்சிக்குச் சென்றேன். அங்கு சேர்ந்த பின்னர், 'வெறும் ஓலையை இப்படியெல்லாம் மாற்ற முடியுமா?' என்ற வியப்பில் என்னையும் அறியாமல் பயிற்சியில் ஆர்வமாக இறங்கினேன். ஆறுமாத முடிவில் அவர்கள் என்னவெல்லாம் கற்றுக் கொடுத்தார்களோ, அதைவிட அதிகமான பொருட்களை செய்து காட்டி சபாஷ் வாங்கினேன். அதற்காகக் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?'' என்று நிறுத்தி நம்மை ஆர்வமாக்கித் தொடர்கிறார்...

''இனி மற்றவர்களுக்கு நீயே பயிற்சி அளிக்கலாம் என்று, எனக்குக் கற்றுக் கொடுத்த மாயாவதி மாஸ்டர் ஒப்புதல் அளித்து, அரசின் அனுமதியும் வாங்கித் தந்தார். ஆறு மாதம் ஒருவருக்குப் பயிற்சி அளிக்க 500 ரூபாய் சம்பளமாகக் கிடைத்தது. அதுதான் என் வாழ்வில் வசந்தத்தை தோற்றுவித்தது. பயிற்சி கொடுத்துக் கொண்டே, சொந்தமாக தொழில் தொடங்கத் தேவையான உபகரணங்களை 5,000 ரூபாய் முதலீட்டில் வாங்கினேன். பயிற்சி முடித்து வீடு திரும்பியதும்... அழகுப் பொருட்களையும் அத்தியாவசியப் பொருட்களையும் செய்யத் தொடங்கினேன். தயாரித்த பொருட்களை... நாகூரில் உள்ள ஒரு கடையில் விற்று, பணம் தரும்போது வாங்கிக்கொள்வேன்.

ஆரம்பத்தில் என் கைவண்ணத்தில் உருவான பொருட்களின் மதிப்பு பற்றி எனக்குத் தெரியவில்லை. ஏதோ கைக்கு காசு கிடைக்கிறது என்றிருந்தேன். காரைக்காலில் நடந்த அரசுக் கண்காட்சியில், என் பொருட்களைக் கொண்டு முதல் முறையாக ஸ்டால் போட்டேன். அங்கே நான் கண்ட வரவேற்பும், விற்பனையும்தான் என் தொழில் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் என்று கண்காட்சிகளுக்குப் போய் வந்த பிறகு, பயிற்சி கொடுப்பதை நிறுத்திவிட்டு முழுநேரமும் தொழிலில் இறங்கிவிட்டேன்.

அதுவரை வறுமையோடு போராடிக் கொண்டிருந்த என் குடும்பம்... மெள்ள அதிலிருந்து மீண்டது. நல்ல உணவு, நல்ல துணிமணி என்று கிடைத்தது. ஊரில் சொந்தமாக வீடு கட்டவும் முடிந்தது. இதற்கெல்லாம் காரணம் அரசு கண்காட்சிகள் என்பதால்தான் இன்றுவரை கண்காட்சிகளில் ஸ்டால் அமைப்பதை விடாமல் செய்து வருகிறேன்!'' என்று சொல்லும்போது நெகிழ்கிறார் சித்ரா.

சாதாரணமாக மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்ப்பவர், ஒரு கண்காட்சிக்குப் போக வேண்டும் என்றால்... ஒரு மாதம் ஓய்வில்லாமல் பொருட்களைத் தயார் செய்து எடுத்துப் போகிறார். அதில் 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விற்பனை செய்து விடுகிறார்.

''பத்தாவது வரைக்குமே படிச்சிருக்கிற நமக்கு என்ன வேலை கிடைக்கும்னு சோர்ந்து போகாம யோசித்ததுதான் இப்படி என்னை வளர்த்திருக்கு. நம்மால் என்ன செய்துவிட முடியும்னு நினைக்காம, எல்லாம் செய்ய முடியும்னு யோசிக்கறதுதான் வெற்றிக்கு வழி. ஆர்வம் இருந்தா எதையும் செய்துட முடியும், எப்படியும் வெற்றி பெற்றுவிட முடியும்!'' என்று சொல்பவர், தன் தொழிலைப் பற்றியும் விரிவாக விளக்கினார்.

''பனை ஓலையைக் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. மரம் ஏறும் ஆளுக்கு கூலி கொடுத்தால் கிராமங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும். அதை எடுத்துப்போய் தையல் மெஷின் போலுள்ள கட்டிங் மெஷினில் தேவையான அளவு வைத்து அழகாக நறுக்க வேண்டும். பிறகு, வெந்நீர் பானைகளில் சாயத்தை ஊற்றி, ஓலைகளை அமுக்கி வைத்திருந்தால் சாயம் ஏறிவிடும். நமக்கு என்ன பொருள் தேவையோ அதை ஓலையைக் கொண்டு செய்ய வேண்டியதுதான். எப்படிப் பின்ன வேண்டும் என்பதற்குத்தான் பயிற்சி வேண்டும். அது தெரிந்துவிட்டால் அழகழகான கலைப்பொருட்களை செய்துகொண்டே போகலாம்.

இப்போது வெரைட்டிக்கும் அழகுக்கும்தான் மக்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது இரண்டுமே இந்த பொருட்களில் கிடைத்து விடுவதால்... மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. 50 ரூபாய் விலைக்குள் வளையல், மணி, கம்மல் கொடுத்து விட முடியும். இப்படி விலையும் குறைவு, அழகும் அதிகம் என்பதால் இதை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது'' என்ற சித்ரா,

''நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. அண்ணன், அண்ணி, அவர்களுடைய இரண்டு குழந்தைகள், அம்மா என்று குடும்பத்தோடு வசித்து வருகிறேன். என் குடும்பக் கடமைகள், தொழிலை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. எனவே, இல்லத்தரசிகளாக இருக்கும் யார் வேண்டுமானாலும்... குடும்பத்தை பார்த்துக் கொண்டே இந்தத் தொழிலில் வருமானமும் பார்ப்பது எளிது!'' என்று வழிகாட்டினார்!