'விகடன் டெலிவிஸ்டாஸ்’ தயாரிப்பில் சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'திருமதி செல்வம்’, 'தென்றல்’ சூப்பர் ஹிட் தொடர்களின் இயக்குநர் குமரனுக்கு... ஜூலை 5-ம் தேதி டும்... டும்... டும்!

''கடந்த ஐந்து வருஷங்கள்ல... 8 பெண் பார்க்கும் படலங்கள், 10 நிச்சயதார்த்தங்கள், 14 திருமண வைபவங்கள்னு சின்னத்திரையில நடத்தின அனுபவம் இருக்கு. இப்போ... எனக்குத் திருமணம்னு நினைக்கும்போது மனசுக்குள் கொஞ்சம் த்ரில் பத்தவே செய்யுது!''

- கலகலப்பாகப் பேசினார், புதுமாப்பிள்ளை குமரன்!

''திருமதி செல்வம் சீரியலோட ஷூட் ஆரம்பிக்கத் தொடங்கியதுமே... எங்க டீம்ல ஒவ்வொருத்தருக்கா திருமணம் நிச்சயமாச்சு. 'நல்ல ராசிதான். உங்களுக்கு எப்போ..?’னு எல்லோரும் என்னைக் கிண்டலடிப்பாங்க. இப்ப திருமணம் நிச்சயமானதும், என் சந்தோஷம் என் நண்பர்களுக்கும் இருக்கு. வீட்ல நான் ஒரே பையன். பெண் பார்க்குற பொறுப்பை அம்மா, அப்பாகிட்ட விட்டுட்டேன். அவங்களோட செலக்ஷன்தான் ப்ரியா!''

- வெட்கம் படர்கிறது குமரன் முகத்தில்.

''ப்ரியா இன்ஜினீயரிங் முடிச்சிருக்காங்க. வீட்ல பேசி முடிவானதுக்கு அப்புறம், பத்து நாள் முன்னதான் சந்திச்சோம். 'ஒன்பது வருடங்களா வேலைக்கு போய்க்கிட்டிருக்கேன்... வேலையை விட்டுடட்டுமா!’னு கேட்டாங்க. 'தாராளமா!’னு தலையாட்டினேன். என்னை சந்திச்ச பிறகுதான் என்னோட சீரியல்களைப் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. நிறைய பேசல. இனிமேதான் பேசணும். எங்களோட வேவ் லெங்த் ரொம்பப் பொருத்தம். இன்விடேஷனை ரெண்டு பேரும் வெவ்வேறு இடத்துல செலக்ட் செய்தோம். ஆனா... ரெண்டுமே ஒரே நிறம்! மேரேஜ் கிஃப்ட்கூட ப்ரியாவுக்கு ரெடி. ஆனா, அது என்னனு கேட்காதீங்க. அது அவங் களுக்கான சர்ப்ரைஸ். அவங்களோட போட் டோவை இப்ப நான் தரப்போறதில்ல. அது உங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸ்'' என்று மீண்டும் வெட்கத்தை படரவிட்டார்.

தொடர்ந்தவர், ''படிப்பை எல்லாம் முடிச்சுட்டு, பொறுப்புள்ள பையனா ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிற மாதிரிதான் 'திருமதி செல்வம்’ சீரியல். அந்த பொறுப்புள்ள வேலையை அடையறதுக்கு கடுமையா போராடி படிக்கிற கல்லூரி கோர்ஸ் போல 'தென்றல்’ சீரியல்னு நண்பர்கள்கிட்ட அடிக்கடி சொல்லுவேன். அதாவது, ரெண்டுலயுமே முழு டெடிகேஷனோட வொர்க் பண்ணினாதான் ரிசல்ட் திருப்தியா இருக்கும். அதனாலதான் 'பிரைம் டைம்ல இப்படி ஒரு சீரியல் வந்தா... ஹிட் கொடுக்கலாம்’னு குறுகி யோசிக்காம, 'நம்ம ஸ்கிரிப்ட்ல வேல்யூ இருக்கும்போது எந்த டைம்ல டெலிகாஸ்ட் ஆனா என்ன... கதையும், கதாபாத்திரங்களும் நிச்சயமா பேச வைக்கும்!’னு நம்பி களமிறங்கினேன். இப்ப ரெண்டு சீரியலுமே பிரைம் டைம்.

இப்படி என் உழைப்பு எனக்குத் தந்திருக்கிற தன்னம்பிக்கை நிறைய. என்னோட திருமண வாழ்க்கை... என்னை இன்னும் கடுமையான உழைப்பாளியாக்கும்னு நம்புறேன். அதுல வருங்கால மனைவி ப்ரியாவுக்கும் நிறைய பங்கு இருக்கும்''

- 'தென்றல்' போல புன்னகைக்கிறார், 'திருமதி குமரன்'-க்கும் இப்போதே பெருமை சேர்த்த படி!