Published:Updated:

உன்னால் முடியும் பெண்ணே !

காலை வாரிய தங்கம்...கை கொடுத்த பிஸ்கட் !எஸ்.ஷக்தி ,படங்கள்: வி.ராஜேஷ்

உன்னால் முடியும் பெண்ணே !

காலை வாரிய தங்கம்...கை கொடுத்த பிஸ்கட் !எஸ்.ஷக்தி ,படங்கள்: வி.ராஜேஷ்

Published:Updated:

 பிஸினஸ் வெற்றிக் கதைகள்

##~##

''நஷ்டத்துக்கும் லாபத்துக்கும் இடைப் பட்ட தூரம் ரொம்பவே சின்னதுதான். அதை புதுநம்பிக்கை ப்ளஸ் வெறித்தனமான முயற்சிகளால நிரப்பறவங்க ஜெயிக் கறாங்க. ஆனா, வெறும் கண்ணீராலேயும், பயத்தாலேயும் நிரப்பறவங்கதான் மேலேறி வரமுடியாம தவிக்கிறாங்க. நான் இதுல முதல் ரகம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சக்சஸ் சீக்ரெட்டை கொஞ்சம் சப்தமாகவே பகிர்ந்து கொள்கிறார் செல்வராணி. இவர், செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கான பால் பொருட்கள், ஸ்கின் கோட், பிராணிகளின் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரி யாக்கள், ஃபுட் சப்ளிமென்ட்ஸ் போன்ற பொருட்கள் தயாரிக்கும் அமெரிக்காவின் 'பெட்-ஏஜி’ (PetAg) நிறுவனத்தின் ஒரே இந்திய டீலர்!

கோவையில் இந்நிறுவனத்தை நடத்தி வரும் செல்வராணி... நிர்வாகப் பணிகள், வியாபார நிமித்தமாக வெளிநாடுகளுக்கு பறப்பது, விற்பனையைப் பெருக்குவது என்று பரபரவென இயங்கிக் கொண்டிருக்கிறார். இப்படி பிஸினஸின் ஒவ்வொரு நிமிடத்திலும் இன்று லாபக் கணக்குப் பார்க்கும் இவரின் முன் கதை... ஒரு பகீர் நஷ்ட கதை!

உன்னால் முடியும் பெண்ணே !

''எங்க வீட்டுக்காரர் கோபால கிருஷ்ணன், தங்க நகை செய்யுற தொழில் நடத்திட் டிருந்தார். வளையல் செய்யுறதுல செம எக்ஸ்பர்ட். பெரிய அளவில ஆர்டர்கள் பிடிச்சு, 30 பேர்களுக்கு வேலை கொடுத்துனு வளமா வாழ்ந்திட்டிருந்தோம். கேரளாவுல சினிமா ப்ளஸ் ஜுவல் பிஸினஸ் பண்ற ஒருத்தர், எங்களோட ரெகுலர் கஸ்டமர். அவரோட ஆர்டருக்காக லட்சக்கணக்கான மதிப்புல நகையை செஞ்சு கொடுத்தோம். எதிர்பாராதவிதமா அவரோட பிஸினஸ் நஷ்டப்பட்டதாலே... கையை விரிச்சுட் டாரு. வேற வழியே இல்லாம... வளையல் பிஸினஸை இழுத்து மூடிட்டோம். அடுத்து என்ன பண்றதுனே புரியாத கலக்கத்தோட ஏழெட்டு நாட்கள் ஓடிடுச்சு. ஆனா, 'இழந்ததை மீட்டேயாகணும்’னு ஒரு முடிவுக்கு வந்தோம். 'மறுபடியும் கோல்டு பிஸினஸ் வேண்டாம்’னு நான் மாத்தி யோசிக்க ஆரம்பிச்சேன்'' என்பவருக்கு, அந்தப் முட்டுப்பாதையில் இருந்து மீள சீக்கிரமே அடுத்த திசை தெரிந்திருக்கிறது.

''நாங்க நேசிச்சு வளர்க்கற எங்க செல்லங்கள்தான் (நாய்களைத்தான் இப்படிச் சொல்கிறார்), வாழ்க்கையே வெறுத்துப் போய் உட்கார்ந்திருந்த எங்களுக்கு அந்த நேரத்துல ஆறுதல். வருமானம் இல்லாத நேரத்துல யும் குவாலிட்டியான சாப்பாடு, மருந்துகள்னு பரா மரிக்க நாங்க தவறல. அப்போதான், 'சரி, இதையே பிஸினஸாக்கிட்டா என்ன?’னு யோசிச்சேன். விளைவு 'சஞ்சய் மார்க்கெட்டிங்’ங்கிற பெயர்ல 'பெட் ஃபுட்' பிஸினஸ்ல இறங்கினோம். ஆரம்பத்துல வடஇந்தியாவுல இருந்து தயாரிப்புகளை வாங்கி விற்பனை பண்ணினோம்.

உன்னால் முடியும் பெண்ணே !

உணவுகள் மட்டுமில்லாம செல்லப்பிராணிகள், கால்நடைகளுக்கான மருந்து விற்பனையிலயும் முறைப்படி இறங்கினோம். எதிர் பார்த்ததைவிட கொஞ்சம் தூக்கலான லாபம் கிடைச் சுது. ஆனாலும், இன்னும் தரமான பொருளா தேடினப்பதான், லாபத்துக்கு நிகரா தரத்தையும் கடைப்பிடிக்கற இந்த வெளிநாட்டு நிறுவனத்தைக் கண்டுபிடிச்சேன். இந்த அளவுக்கு உயர்ந்திருக்கேன். இந்த சாதனை சாத்தியமானதுக்கு முக்கிய காரணம், எங்க வீட்டுக்காரர்தான்!'' எனும்போது, இன்னும் மலர்கிறார் செல்வராணி. தொடர்ந்தவர், தொழில் விஷயங்களைப் பேசினார்.

''எங்களோட தயாரிப்பு கள்ல முக்கியமானது பால் பொருட்கள். இந்த அஞ்சு வருஷத்துல, பிரசவத்தின் போது தாயை இழந்த, பிரிந்த பல ஆயிரக் கணக்கான குட்டி களை இதைக் கொடுத்துக் காப்பாற்றியிருக் கோம். தரம் அதிகம்ங்கிறதாலே விலையும் அதிகம்தான். இந்த பொருட்களை வாங்கி திருப்தியடைஞ்ச நண்பர்களோட வாய்மொழி விளம்பரம் மூலமா எங்களோட தயாரிப்பு களுக்கு லோக்கல்ல தேவை ஏற்பட ஆரம் பிச்சது. அப்புறம், ஒரு 'டாக் ஷோ’ விடாம போய் ஸ்டால் போட்டு விளம்பரம் செஞ்சோம். இப்படி எங்க பிஸினஸ் பரவ ஆரம்பிச்சுது.

வன விலங்குகளோட உயிர்காக்கவும் எங்க தயாரிப்பு உதவுது. நீலகிரி, முதுமலை, வண்டலூர் மிருகக்காட்சி சாலை, வடநாட்டு வனங்கள், மிருகக்காட்சி சாலைகள்னு எங்க பொருட்கள் நாடு முழுக்க போகுது. ஸ்ரீலங்கா, பங்களாதேஷ்னு அக்கம் பக்கத்து நாடுகள்ல இருந்து எங்களுக்கு ஆர்டர்கள் வருது'' என்றபோது, அந்த உள்ளூர்ப் பெண் அடைந்திருக்கும் உயரத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

''அதீத உழைப்பை தந்தது மூலமா இன்னிக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கோம். கிடைக்கிற லாபத்துல கணிசமான பகுதியை எடுத்து, தெருவில் நிராதரவா திரியுற நாய் களின் பராமரிப்புல ஆரம்பிச்சு பல உதவிகள் செய்ற திட்டம் இருக்கு. எங்களை வாழ வெச்சவங்களுக்கு நாங்க செய்ற நன்றிக் கடன் இதுதானே!''

- ஆத்மார்த்தமாக முடித்தார் செல்வ ராணி!

பெட்ஸ் டிப்ஸ்!

செல்லப்பிராணி பிரியர்களுக்கு செல்வராணி தரும் யோசனைகள்...

உன்னால் முடியும் பெண்ணே !

நாம் சாப்பிடும் பிஸ்கட்களை நாய்களுக்கு கொடுக்கவே கூடாது. நாம் பல்லில் ஒட்டியிருக்கும் பிஸ்கட் துகளை பிரஷ் செய்து சுத்தம் செய்துவிடுவோம். ஆனால், நாய்கள் என்ன செய்யும்? அதன் பல்லில் இது ஒட்டியிருந்து ஈறு கேடுகளை உருவாக்கும்.

செல்லப்பிராணிகளுக்கென்று பியூட்டி பார்லர்கள், கிளினிக்குகள் நிறைய இருக்கின்றன. சீரான இடைவெளி யில் இங்கே அழைத்துச் சென்று பல்லை சுத்தம் செய்தல், நகம் மற்றும் ரோமங்களை வெட்டி விடுதல், ஷாம்பு குளியல் கொடுத்தல் போன்றவை பிராணிகளின் நலனுக்கு மட்டுமல்ல... நமக்கும் பாதுகாப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism