Published:Updated:

ராசி பலன்கள்

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை

பிரீமியம் ஸ்டோரி

 உங்களுக்கு நிகர் நீங்களே!

ராசி பலன்கள்

##~##

மேஷம்: சீர்திருத்த சிந்தனை அதிகம் உள்ளவர்களே! சுக்கிரன் 3-ல் தொடர்வதால், இங்கிதமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். உறவினர், தோழிகள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். சூரியன் 4-ல் நிற்பதால் முன்கோபம், வேலைச்சுமை அதிகரிக்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வரவு உயரும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டுவார்கள்.

அறிவுத் திறன் அரங்கேறும்!

ராசி பலன்கள்

ரிஷபம்: இலவசங்களை விரும்பாதவர்களே! சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். கணவர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். ராசிக்குள் குருவும், கேதுவும் நிற்பதால்... உடல்நலக் கோளாறு, அசதி, தூக்கமின்மை வந்து செல்லும். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் உடனடியாக கிடைக்கும்.    

போட்டது முளைக்கும்... நினைத்தது நடக்கும்!

ராசி பலன்கள்

மிதுனம்: வளைந்து கொடுத்து சாதிப்பவர்களே! ராசிநாதன் புதன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், அழகு, இளமை கூடும். வீட்டை மாற்றுவது, விரிவு படுத்திக் கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். பிள்ளைகளை எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர்ப்பீர்கள். 4-ல் செவ்வாயும், சனியும் நிற்பதால் திடீர் செலவு, வாகனப் பழுது வந்து செல்லும். 1-ம் தேதி முதல் 3-ம் தேதி காலை 10.30 மணி வரை வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோ கத்தில் சூழ்ச்சி களை முறியடித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

பாசமழை உள்ளம் நனைக்கும்!

ராசி பலன்கள்

கடகம்: நல்லவற்றை மிகைப்படுத்தி பேசுபவர்களே! ராசிக்குள் நிற்கும் சூரியன் உங்களை அவ்வப்போது டென்ஷனாக்கி னாலும், சனி வலுவடைந்திருப்ப தால்... புது முயற்சிகள் வெற்றி யடையும். சொத்துப் பிரச்னை தீரும். கணவரின் பாசத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டு உபயோக சாதனங்கள் வாங்குவீர்கள். 3-ம் தேதி காலை 10.30 மணி முதல்  5-ம் தேதி மாலை      6 மணி வரை சிக்கனத்தை  கடைப்பிடியுங்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங் களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள்.

வெற்றிக்கு வழிவகுக்கும் புதன்!  

ராசி பலன்கள்

சிம்மம்: விவாதம் என வந்துவிட்டால் வெளுத்து வாங்கு பவர்களே!  புதன் வலுவாக இருப்பதால், சவா லான விஷயங் களைக்கூட சாதுர் யமாக முடிப்பீர்கள். பூர்விக சொத்தை சீர்செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். சனி 2-ல் நிற்பதால், சேமிப்புகள் கரையும். 5-ம் தேதி மாலை 6 மணி முதல் 7-ம் தேதி வரை பயணங்களின் போது கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். உத்யோகத்தில் 'நேர்மையாக  உழைத்தும் பலன் இல்லையே’ என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

செல்வம் வந்து சேரும்!

ராசி பலன்கள்

கன்னி: அனைத்தையும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்களே! ராசிநாதன் புதனும், சூரியனும் சாதகமாக இருப்பதால், உங்கள் கை ஓங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சனியும், செவ்வாயும் ராசிக்குள் நிற்பதால், தேவையற்ற விஷயங்களை நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். 8-ம் தேதி முதல் 10-ம் தேதி மாலை 3 மணி வரை எதிலும் அவசரப்பட வேண்டாம். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும்.

பணவரவு சுமார்!  

ராசி பலன்கள்

துலாம்: பழி பாவத் துக்கு அஞ்சுபவர் களே! குரு எட்டில் மறைந்தாலும், 2-ம் வீட்டைப் பார்த்துக் கொண்டிருப்பதால்... ஓரளவு பணம் வரும். வீட்டு  வேலைகளை கணவர் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். 10-ம் தேதி மாலை 3 மணி முதல்    12-ம் தேதி வரை  அலைச்சல் அதிகமாக இருக்கும். சனியும், செவ்வாயும் 12-ல் மறைந் திருப்பதால்... வீண் செலவு, வருங்காலம் பற்றிய பயம் வந்து போகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் கூடுதலாகலாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல  பெயர் எடுக்க கொஞ்சம் போராட வேண்டி வரும்.

புத்தம் புதிய வீடு!

ராசி பலன்கள்

விருச்சிகம்: 'தான் உண்டு, தன் வேலை உண்டு’ என்றிருப்ப வர்களே! லாப வீட்டில் ராசிநாதன் செவ்வாய் நிற்பதால், ராஜதந்திரத்தால் சில விஷயங்களை சாதித்துக் காட்டு வீர்கள். புது     வீடு கட்டத் தொடங்குவீர்கள். ராகு, கேது சரியில்லாததால், மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மிகவும் முன்னெச்சரிக்கை யுடன் செயல்படப் பாருங்கள். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மற்றவர்கள் செய்யும்  தவறுகளை பொறுமையுடன் சுட்டிக் காட்டுவீர்கள்.

உற்சாக வேளை!

ராசி பலன்கள்

தனுசு: தன்னம்பிக்கையால் எதையும் சாதிப்பவர் களே! சுக்கிரன் உங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால், தளர்ந்திருந்த நீங்கள், உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டு. பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். எட்டியிருந்த  உறவினர், தோழிகள் வலிய வந்து உங்களிடம் பேசுவார்கள். 8-ல் சூரியனும், 6-ல் குருவும் நிற்பதால், அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில், கடையை விரிவு படுத்தும் முயற்சியில் இறங்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம்... பகையும் வேண்டாம்.  

முன்னெச்சரிக்கை முக்கியம்!

ராசி பலன்கள்

மகரம்: கொள்கை, கோட்பாடுகளை விட்டுக் கொடுக்காதவர்களே! குரு 5-ல் நிற்பதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். திடீர் பணவரவு ஏற்படும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். பிரபல யோகாதிபதிகள் 6-ல் நிற்பதால், புதியவர்களை  நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனம் பழுதாகலாம். உறவினர், தோழிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.  

உறவுகள்... உள்ளம் நிறைக்கும்!

ராசி பலன்கள்

கும்பம்: கொடுத்து உதவும் குணத்தால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பவர் களே! சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், அடிப்படை வசதிகள் பெருகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். தோழி களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செவ்வாயும், சனியும் 8-ல் நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரலாம். வியாபாரத் தில் அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

சுயரூபம் அறியும் நேரம்!

ராசி பலன்கள்

மீனம்: எதிரும், புதிருமாக யோசிப்பவர்களே! கேது வலுவாக இருப்பதால், உள்ளத்தில் உற்சாகம் பிறக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். 3-ல் குரு மறைந்திருப்பதால், சில விஷயங்களை மூன்றாவது முயற்சியில் முடிக்க வேண்டி வரும். செவ்வாயும், சனியும் 7-ல் நிற்பதால்... வீண் விரயம், ஏமாற்றம் வந்து செல்லும். வியாபாரத்தில், புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு