Published:Updated:

காஞ்சி பட்டுடுத்தி...கஸ்தூரி பொட்டு வைத்து..!

வே.கிருஷ்ணவேணி படங்கள்: எம்.உசேன்

காஞ்சி பட்டுடுத்தி...கஸ்தூரி பொட்டு வைத்து..!

வே.கிருஷ்ணவேணி படங்கள்: எம்.உசேன்

Published:Updated:
##~##

திருமண மேடையில் மாப்பிள்ளை யும், பெண்ணும் மிடுக்காகத் தெரிய, சில கவனிப்புகள் கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, முகப்பொலிவு, ஆடை, ஆபரணம்... இவை மூன்றும் நன்றாக அமைந்தால்தான், ஊர், உறவு, நட்பு என அனைவரும் கூடியிருக்கும் அந்த வைப வத்தில் மணமக்கள் 'பளிச்’ என கவர் வார்கள்!

பியூட்டி பார்லர், காஸ்ட்லி ஆடைகள், அக்ஸஸரிஸ் என அதற்காகும் செலவுகள் தோராயமாக எவ்வளவு இருக்கும்..?!

சென்னை, அண்ணாநகர் கிரீன் டிரெண்ட்ஸின் சீனியர் ஸ்டைலிஸ்ட் ரிஷ்மா மற்றும் பயிற்சியாளர் சசிகுமார் பார்லர் செலவுகள் பற்றிப் பேசினார்கள்...

காஞ்சி பட்டுடுத்தி...கஸ்தூரி பொட்டு வைத்து..!
காஞ்சி பட்டுடுத்தி...கஸ்தூரி பொட்டு வைத்து..!

''கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்ன, 'என்ன எப்படியாவது அழகாக்கி டுங்க’னு சிலர் வருவாங்க. அது தவறு. திருமண தேதி முடிவானவொடன மண்டபம், சமையல், பத்திரிகைனு அதுக் கான வேலைகளை ஆரம்பிச்சுடறது போல, மணமக்களுக்கான பார்லர் ட்ரீட்மென்ட்டுகளையும் ஆரம்பிச்சுடணும். அப்போதான் மணநாள் அன்னிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். அதனால குறைஞ்சது திருமணத்துக்கு முன்ன இருக்கும் ரெண்டு மாதங்களிலாவது 15 நாட்களுக்கு ஒருமுறை பியூட்டி டிரீட்மென்ட்கள் எடுத்துக்கணும்! இது, திருமண நேரத்தில் மணப்பெண்ணுக்கான மேக்கப் செய்யவும், முகத்தை பொலிவாக  வைக்கவும் உதவும்.

காஞ்சி பட்டுடுத்தி...கஸ்தூரி பொட்டு வைத்து..!

மணப்பெண் மேக்கப், பல பேக்கேஜ்களாக இருக்கிறது. 'கிளாஸிக் பேக்கேஜ்’ 4,000 ரூபாய். இந்த பேக்கேஜ்ல ஃபேஷியல், ஃபேஸ் கிரீம் பிளீச், வேக்ஸிங், திரெட்டிங் (அப்பர் லிப், ஐப்ரோ), ஷாம்பு மசாஜ், பெடிக்கியூர், மேனிக்கியூர்னு எல்லாம் அடங்கும். 5,250 ரூபாய்க்கு பிரீமியம் பேக்கேஜ், 6,500 ரூபாய்க்கு மெஜெஸ்டிக் பேக் கேஜ்-னு இன்னும் அட்வான்ஸ்டான பேக்கேஜ்களும் உண்டு. இதேபோல மணமகனுக்கு... கிளாஸிக் பேக்கேஜ் 3,300 ரூபாய், பிரீமியம் பேக் கேஜ் 4,100 ரூபாய், மெஜஸ்டிக் பேக்கேஜ்-க்கு 4,600 ரூபாய்னு தனித்தனியா இருக்கு. இது எல்லாமே 'கிரீன் டிரெண்ட்ஸ்’-ன் ரேட்!'' என்றார்கள்.

அடுத்ததாக, ஆடை, ஆபரண செலவுகள் பற்றிச் சொல்கிறார், சென்னை, ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸின் மேனேஜிங் டைரக்டர் சுந்தரலிங்கம். ''இந்த வருஷம் மணமக்களுக்கான விதவிதமான திருமண ஆடைகளை அறிமுகப் படுத்தியிருக்கிறோம். இங்கே 'நாதஸ்வரம்’ சீரியல் நடிகை ஸ்ரீத்திகா உடுத்தியிருக்கும் பட்டுச்சேலை, மணப்பெண்ணுக்காக பிரத்யேகமா வடிவமைக்கப் பட்டது. ஜர்தோஸி, ஷைனிங் ஸ்டோன் வொர்க் குடன், பள்ளு முழுக்க கோல்ட் ஸ்பிரிங் வொர்க் மற்றும் ஃபளவர் டிசைன்னு அசத்துற இந்த மெரூன் கலர் காஞ்சி பட்டின் விலை 38,500 ரூபாய். நெக் வொர்க் மற்றும் ஜர்தோஸி வொர்க் செய்த பிளவுஸ், ஸ்பெஷல் அட்ராக்ஷன்! இதற்கு மேட்ச்சான ஃபேன்ஸி ஜுவல்லரி விலை 3,550.

காஞ்சி பட்டுடுத்தி...கஸ்தூரி பொட்டு வைத்து..!

அடுத்ததா, இந்த வயலட் மற்றும் கிரீன் கலர் ஜார்ஜெட் டிசைனர் புடவை, ரிசப்ஷனுக்கு கிராண்ட், ஹை லுக் தரும். நெட்டட் மற்றும் கட் வொர்க்குடன் கூடிய ஷைனிங் ஸ்டோன், ஸ்பிரிங் டிசைன்னு

காஞ்சி பட்டுடுத்தி...கஸ்தூரி பொட்டு வைத்து..!

கவர்ற இந்தப் புடவையோட விலை, 7,200. இதற்கு மேட்சான ஃபேன்சி ஜுவல்லரியின் விலை 3,550 ரூபாய்.

தீபக் அணிந்திருக்கிற மணமகனுக்கான ஆடைகள், மெஜஸ்டிக் லுக் தரக்கூடியவை. மெரூன் கலர் ஃபேன்ஸி ஷெர்வானியின் விலை, 12,500. லைட் ப்ளூ ஷர்ட் மற்றும் நேவி ப்ளூ கலர் கோட்டுடன் கூடிய ரிசப்ஷன் சூட்-ன் விலை, 5,800. இதில் ப்ளூ கலர் ஷர்ட்டோட காலர் மற்றும் முன்பக்கம் செய்யப்பட்டிருக்கும் எம்ப்ராய்டரி வொர்க், அழகு கூட்டும். அதேபோல் கோட்டின் பின்புறம் செய்யப்பட்டிருக்கிற சின்ன எம்ப்ராய்டரி மற்றும் ஸ்டோன் வொர்க், குட் லுக் தரும்'' என்றார் சுந்தரலிங்கம்.  

கல்யாணத்தன்னிக்கு களையா இருங்க!

ஆடைகள் உதவி: ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ்,
தி. நகர், சென்னை
அலங்காரம்: கிரீன் டிரெண்ட்ஸ்,
அண்ணாநகர், சென்னை