Published:Updated:

நெட் டாக்ஸ்

'மவுஸ்’ஸிகா

கணினியுக 'தோழிகள்’!

சங்க காலத்தில் தலைவனும் தலைவியும் சேர்வதற்குத் தோழிகள் உதவுவதுபோல், கணினியுகத்தில் சில வலைதளங்கள் துணைபுரிகின்றன. மேட்ரிமோனியல் வலைதளங்களில் படலம் பார்த்து நொந்து போனவர்கள், சரியான வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்காக சமூக வலைதளங்களில் கண்விழித்துத் துழாவுபவர்கள்... என பலருக்கும் வரப்பிரசாதமாக இருக்கின்றன, இந்தத் தோழி வகையறா தளங்கள்.

நெட் டாக்ஸ்

நமக்கு வாழ்க்கைத் துணையாவதற்குக் கச்சிதமானவரைத் தேர்வு செய்யும் வாய்ப்பையும், அவர்களுடன் நட்புகொண்டு, முழுமையான அறிதல், புரிதல், விசாரணைகளுக்குப் பின் முடிவை எடுத்துக்கொள்ள வகை செய்யும் இவ்வித தளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தடம்பதிக்கத் தொடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், முன்னெச்சரிக்கையுடன் அணுகுவதும் அவசியம்.

கணினியுக தோழிகள் சிலர் - twomangoes.com, marryafriend.com, ditto.com, okcupid.com, youpid.com

 ஆன்லைன் நிச்சயதார்த்தம்!

'நாங்கள் உணவு, உடை, உறைவிட விஷயங்களில் வேண்டுமானால் மாறி இருக்கலாம்; ஆனால், திருமண விஷயத்தில் பாரம்பரியத்தையே பின்பற்றுகிறோம்’ என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் பெருமிதத்துடன் சொல்கிறார்கள். ஆம்... வெளிநாட்டில் செட்டில் ஆன இந்தியர்கள் பெரும்பாலானோர்... சொந்த நாட்டைச் சேர்ந்த மாப்பிள்ளை, பெண்தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நினைத்த மாத்திரத்தில் சொந்த ஊருக்குப் போய் நிச்சயம் செய்துகொள்ளாத சூழலில்தான் இவர்களுக்கு உதவுகிறது 'ஆன்லைன்’.    

நெட் டாக்ஸ்

இரு வீட்டாரும் கம்ப்யூட்டர்களுக்கு முன் அமர்ந்து, வீடியோ சாட்டிங் மூலம் பேசி, திருமணத்தை நிச்சயம் செய்துகொள்ளும் வழக்கம் இப்போது மிகுதியாகிவிட்டது. ஆன்லைனிலேயே திருமணத்துக்கு முந்தைய சடங்குகளை முடித்துக் கொண்டு, மணநாள் அன்றே மாப்பிள்ளையும் மணமகளும் முதன் முதலில் சந்தித்துக் கொள்ளும் தருணங் களும் அதிகமாகிவிட்டன. இப்படிச் செய்யப்படுபவை அனைத் துமே அரேஞ்டு மேரேஜ் என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம்.

வீடியோ சாட்டிங் நிச்சயதார்த்தத்தின் மகிமையை உணர்ந்த பிரபல மேட்ரிமோனி நிறுவனங்கள், இப்போது ஆன்லைனில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக ஸ்பெஷல் அரேஞ்ச்மென்ட் வேலைகளையும் தொடங்கியிருக்கின்றன!  

மவுஸ் முடித்து வைக்கும் மணங்கள் !

 வலைப்பூவரசி!

அனுபவத்தைப் பகிர்தல் என்ற அடிப்படை நோக்கத் தைக் கொண்டதே ப்ளாக். அப்படி ஓர் அசல் வலைப்பூ, 'அக்கம் பக்கம்’. தன் அனுபவங்களை பக்கத்துவீட்டுத் தோழி போல் பகிர்ந்து வருகிறார், அமுதா கிருஷ்ணன். நெல்லையில் பிறந்தவர். சென்னையில் வசிப்பவர். ஆசிரியையாக பணிபுரிந்தவர். இவருக்குப் பிடித்தது பயணம். அதை அனுபவமாகப் பதிவு செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். கல்வி, அனுபவம், குழந்தை வளர்ப்பு, உறவுகள்... இப்படி பயனுள்ள தலைப்புகளின் கீழ் எழுதிவரும் அமுதா, இந்த இதழின் வலைப்பூவரசி. இவரது வலைப்பூ - http://amuthakrish.blogspot.in/

நெட் டாக்ஸ்