Published:Updated:

'எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா...

உடனே டி.டி. எடுங்கள்!

'எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா...

உடனே டி.டி. எடுங்கள்!

Published:Updated:

வே.கிருஷ்ணவேணி

'எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா...
##~##
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகும் தினங்கள், கிட்டத்தட்ட திருவிழாக்கள்தான்! கல்வித் துறை, பள்ளி, பெற்றோர்கள், மாணவர்கள், மீடியா என்று எல்லா தரப்பினரும் உற்சாகத்தில் பரபரவென சுழலும் நாட்கள் அவை. ஆனால், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காதவர்களுக்கும், தேர்வில் தவறியவர்களுக்கும் அது சோகம் சூழ்ந்த நாளாகிறது. அப்படித் தேர்வு முடிவால் சோர்ந்து போகும் மாணவர்களுக்கு தெம்பு கொடுக்க, 'விடைத்தாள் நகல்களைப் பெறுவது’, விடைத்தாள் மறுமதிப்பீடு, 'மதிப்பெண் மறுகூட்டல்’, 'உடனடித் தேர்வு’ என்று மாற்று வாய்ப்புகளை வழங்குகிறது கல்வித் துறை. அதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்வது... கடைசி நேர டென்ஷனைக் குறைப்பதோடு... உரிய நேரத்தில் பயன்படுத்தி பலனையும் பெற முடியும்.

இதற்காக இங்கே உதவிக்கரம் நீட்டுகிறார் கடலூர், கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர் இரா. நடராசன். ''பத்து மற்றும் ப்ளஸ் டூ வகுப்பு மாணவர்கள், ரிசல்ட் வெளியான கையோடு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்புக்கு டி.இ.ஓ. (மாவட்ட கல்வி அலுவலர்) அலுவலகங்களிலும், ப்ளஸ் டூ வகுப்புக்கு சி.இ.ஓ. (முதன்மை கல்வி அலுவ லர்) அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைப் பெற்று, அங்கேயே விண்ணப்பிக்கலாம். எத்தனை தாள்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறார்களோ, அதற்குரிய தொகையை டி.டி-யாக எடுத்து, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

'எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையா...

ப்ளஸ் டூ எழுதியவர்களுக்கு விடைத்தாள்களின் நகல்களைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இதற்காக சி.இ.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, தாள்களுக்குரிய தொகைக்கு டி.டி. எடுத்து இணைத்து, அங்கேயே அளிக்க வேண்டும். வீட்டு முகவரிக்கே நகல்கள் வந்துசேரும். இதையடுத்து, கூட்டுத் தொகையிலோ... மார்க் வழங்கிய விதத்திலோ தவறுகள் நிகழ்ந்திருந்தால், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் விவரமும் வீட்டு முகவரிக்கே அனுப்பப்படும்'' என்ற நடராசன்,

''பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் அதிகபட்சமாக மூன்று பாடங்கள் வரை தவறியவர்களுக்கு மட்டுமே உடனடித் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். முடிவுகள் வெளியான ஐந்து நாட்களுக்குள், சம்பந்தபட்ட பள்ளிகளிலேயே விண்ணப்பத்தைப் பெற்று, பூர்த்தி செய்து அங்கேயே அளிக்க வேண்டும். உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அதே கல்வியாண்டில் வகுப்புகளில் சேர்ந்துவிடலாம்'' என்று விளக்கங்களை அளித்தார்.

படம் : கே.ராஜசேகரன்