Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

Published:Updated:

 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன !

150
வாசகிகள் பக்கம்

எதையுமே ப்ப்ப்ளான் பண்ணாம..!

இரண்டு மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் இமயமலைக்கு சுற்றுலா சென்றோம். சுற்றுலாவின் ஒரு கட்டமாக திங்கட்கிழமை ஒன்றில் டெல்லியில் இறங்கிய நாங்கள், ''அக்ஷர்தாம் கோயில், இந்திரா காந்தி வாழ்ந்த வீடு, லோட்டஸ் டெம்பிள் எல்லாம் பார்த்துட்டு, நைட் ஹரித்துவாருக்கு கிளம்பிடலாம்...'' என்று பிளான் போட்டோம். பார்த்தால், சென்ற இடமெல்லாம் 'திங்கட்கிழமை பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை’ என்ற பதிலையே சொன்னார்கள். ஒரு நாள் முழுக்க எந்த இடத்தையும் பார்க்க முடியாமல் வீணாகக் கழித்து, இரவு ரயிலேறினோம்.

அனுபவங்கள் பேசுகின்றன !
##~##

டூர் ப்ளான் செய்யும்போது, எந்தெந்த சுற்றுலா தலங்களில் என்றென்று ஸ்பெஷல் தர்ஷன் கிடைக்கும், அனுமதி கிடைக்காது, உணவு, உடை விஷயத்தில் அங்குள்ள விதிமுறைகள் என்னென்ன என்பது போன்ற விவரங்களையும் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதுக்கேற்றவாறு ப்ளான் செய்வது நலம் என்பது அப்போதுதான் உறைத்தது.

- எஸ்.மங்கையர்கரசி, வடலூர்

 மாற்றுப்புடவை... புதுப்புடவை!

கடந்த டிசம்பர் மாதம், காலை வேளையில் எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது எங்கள் ஊரில் (மயிலாடுதுறை, கூறைநாடு) இருக்கும் காளியம்மன் கோயிலுக்கு கையில் அர்ச்சனை தட்டுடன் சென்று கொண்டிருந்தார் ஒரு அம்மா. திடீரென அவர் நிலை தடுமாறி கீழே விழ, தேங்கியிருந்த மழை நீரால் அவர் புடவையெல்லாம் சேறாகிவிட்டது. ஓடிச்சென்று அவரைத் தூக்கிவிட்ட நான், ''எங்க வீட்டுக்கு வந்து சேத்தை கழுவிட்டுப் போகலாம் வாங்கம்மா...'' என்று அழைத்தேன். ஆனால், சேறு போனாலும் அவர் புடவையெல்லாம் ஈரமாக இருந்தது. ''நன்னிலத்துல இருந்து ஒரு வேண்டுதலுக்காக வந்தேம்மா...'' என்ற அவர் முகத்தில் கவலை ரேகைகள். சட்டென மாற்றுப் புடவை கொடுத்து, ''எல்லாம் நல்லபடியா நடக்கும்...'' என்று அவரை கோயிலுக்கு அனுப்பி வைத்தேன்.

அனுபவங்கள் பேசுகின்றன !

2011 புது வருடத்தன்று காலை யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தால்... அந்த அம்மா தன் கணவருடன் கையில் புதுப்புடவை, மஞ்சள், குங்குமம், ஸ்வீட் என மங்களகரமாக நின்றார். எனக்கு ஆச்சர்யம் ப்ளஸ் அதிர்ச்சி. அவர் என்னை ஆசீர்வாதம் செய்து அந்தப் புடவையைக் கொடுத்தபோது, மனம் என்னையும் அறியாமல் நெகிழ்ந்து உருகியது. 'அன்பே கடவுள்’ என்பதை நான் உணர்ந்த தருணம் அது!

- என்.ஞானசுந்தரி, மயிலாடுதுறை

'பின்'னால் வந்த புத்தி!

சமீபத்தில் ஒரு பயணத்தின்போது, ரயில் நிலையத்தில் விற்றுக் கொண்டிருந்த உணவுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு ரயிலேறினோம். சிறிது நேரத்தில் 'பசிக்குதும்மா’ என்று என் பேரன் அழ, உடனே ஒரு பொட்டலத்தைப் பிரித்து அவனுக்கு ஊட்டினாள் என் மகள். சிறிது சாப்பிட்டதும் புரை ஏறி அவன் இருமத் துவங்க, தண்ணீர் கொடுத்தோம். இருந்தும் இருமல் நின்றபாடில்லை. ''தொண்டையில என்னவோ குத்துற மாதிரி இருக்கு...'' என்று அவன் அழ ஆரம்பிக்க, பதறிவிட்டோம் நாங்கள். எங்கள் பக்கத்தில் இருந்த ஒரு பெண், தான் சாப்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்த உப்பை ஒரு டம்ளர் நீரில் கலக்கி, என் பேரன் வாயில் ஊற்ற, அடுத்த நிமிடமே அவன் சாப்பிட்ட அனைத்தையும் வாந்தியெடுத்தான். அதில் ஸ்டேப்ளர் பின் ஒன்றும் வந்து விழுந்தது.

அனுபவங்கள் பேசுகின்றன !

''குழந்தைகளுக்கு வெளிய எங்கயும் சாப்பாடு வாங்கிக் கொடுக்காதீங்க... அப்படிக் கொடுத்தா பருக்கை பருக்கையா பார்த்து கவனமா கொடுங்க...'' என்று அந்தப் பெண் சொன்ன வார்த்தைகளில் இருந்த பக்குவத்தை, முழுமையாக உணர்ந்தோம்!

- பிரேமா சாந்தாராம், சென்னை-110

நண்பராகவே இருந்தாலும்..!

சமீபத்தில் எனக்கு பல் கட்டுவதற்காக டாக்டரிடம் சென்றிருந்தேன். அவர் எங்கள் குடும்பத்துக்குப் பழக்கமானவர் என்பதால், என்ன செலவாகும் என்பதைப் பற்றியெல்லாம் முன்னதாக கேட்கவில்லை. சிகிச்சை முடிந்ததும், ''எவ்வளவு டாக்டர்?'' என்று கேட்க, ''ஆறாயிரம் ரூபாய்'' என்று அவர் சொன்னதும் தூக்கிவாரிப் போட்டது எனக்கு. காரணம் என் கையில் 1,500 ரூபாய்தான் இருந்தது. தெரிந்தவராக இருந்ததால், 'எதெதுக்கு எவ்வளவு கட்டணம்..?’ என்று விவரம் கேட்கவும் சங்கடமாக இருந்தது. இறுதியாக, ''ஏ.டி.எம்-ல போய் எடுத்துட்டு வந்துடறேன்...'' என்று அவகாசம் கேட்டுச் சென்று, பணத்தை எடுத்து வந்து 'பில்’லை செட்டில் செய்தேன்.

அனுபவங்கள் பேசுகின்றன !

டாக்டர் மட்டுமல்ல... பியூட்டி பார்லர், மளிகை, ஹோட்டல், டிராவல்ஸ் என்று எங்கு சென்றாலும், 'நமக்குத் தெரிஞ்சவங்கதானே...’ என்று மிதமாக இருந்து விடாமல், 'என்ன செலவாகும்...?’ என்பதை முன்கூட்டியே கேட்டு விடுவது சங்கடங்களைத் தவிர்க்கும்தானே..?!

- ஜே.கல்யாணி, ஸ்ரீரங்கம்

ஓவியங்கள்: கண்ணா