Published:Updated:

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

Published:Updated:

குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

அம்மாக்களே... 'பாட்டி'யாக மாறுங்கள் !

அழகுப் பிஞ்சுகள் ஷிவானி, வர்ஷினி இருவரும் ஒரே மருத்துவமனையில், ஒரே நாளில் பிறந்தவர்கள். அம்மாக்கள் இருவரும் நெருங்கிய தோழிகள். தங்களுக்கு ஒரே நாளில் குழந்தை பிறந்ததில் இருவருக்குமே விண்முட்டும் சந்தோஷம்!

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1
##~##

ஷிவானியின் அம்மாவுக்கு கடந்த சில மாதங்களாக ஒரே மனவருத்தம்! 'நம்ம பொண்ணுகூட சேர்ந்து பொறந்தவதான் இந்த வர்ஷினி. ஆனா, அவ ரெண்டரை வயசில என்ன அழகாப் பேசுறா..?! இப்பவே பச்ச கலர், மஞ்ச கலர், பப்பு சாதம், பாட்டி போன் பேசுறாங்க, தாத்தா சாமி கும்பிடுறார், அப்பா கடைக்குப் போயிருக்கார்னு எல்லா வார்த்தைகளையும் மணி மணியா சொல்லுறா. ஆனா, ஷிவானி? இப்பத்தான் 'ம்மா... மம்மு’, 'ப்பா... த்..த்..தூக்கு’னு ரெண்டு ரெண்டு வார்த்தையா பேசுறா. வர்ஷினிக்கு அவ அம்மா கொடுக்கற சாப்பாடு மாதிரித்தான் நானும் ஷிவானிக்கு கொடுக்குறேன். அப்புறம் அவ மட்டும் எப்படி?’ என்று தன் மகள் பற்றி கவலைப்பட ஆரம்பித்தாள் ஷிவானியின் அம்மா!

இப்படி கலங்கும் அம்மாக்களே... உங்களின் வளரும் குழந்தையிடம், நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள் என்பதைக் கவனித்தது உண்டா? ஒன்றரை வயதுக்கு மேல் உங்கள் குழந்தை... பேசுவதற்கும், தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கும் ஆரம்பிக்கும். அது... குழந்தையுடன் நெருக் கத்தில் இருக்கும் அம்மாவோ, பாட்டியோ, குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஆயாவோ எப்படி குழந்தையிடம் பேசுகிறார் என்பதையும் பொறுத்தே அமையும். குழந்தையின் பேச்சு, பார்வை, கேட்கும் திறன், வாசனை அறியும் திறன், சுவையுணர்வு, தொடு உணர்வு, ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளும் திறன், கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறன் எல்லாம் இதைப் பொறுத்துதான் வளரும். இதை 'ஸ்டிமுலேட்டிவ் என்விரான்மென்ட்' (ஷிtவீனீuறீணீtவீஸ்மீ ணிஸீஸ்வீக்ஷீஷீஸீனீமீஸீt) என்கிறது குழந்தை மனநல அறிவியல்!

உங்கள் குழந்தையிடம், 'பாப்பா இங்க வா, அங்க போ’ என்று தட்டையாகப் பேசினால், குழந்தையின் கற்றுக் கொள்ளும் திறன் வளர்ச்சியடையாது. மாறாக அதே விஷயத்தை, 'பாப்பா, அம்மா பக்கத்துல வந்து, என் மடியில இருக்குற சிவப்பு கலர் பாக்ஸ எடுத்து அத்தைகிட்ட போய் கொடுங்க. அதுல இனிப்பு பணியாரம் சூடா இருக்கு... பாத்து எடுத்துட்டுப் போங்க’ என்று பேசும்போது குழந்தை 'அத்தை’ என்கிற உறவையும், 'கலர்’, 'பக்கத்தில்’ என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தையும், பணியாரம் என்பதன் சுவை, 'சூடு’ என்கிற தொடு உணர்வு என பல விஷயங்களைக் கற்று, தெளிவாகப் புரிந்து கொள்கிறது. இந்த கற்றலும் புரிதலும்தான் ஒரு குழந்தையின் மன வளர்ச்சியையும் அறிவுத் திறனையும் தீர்மானிக்கிறது.

இன்று நிறைய குழந்தைகளுக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தரும் 'ஸ்டிமுலேட்டிவ் என்விரான்மென்ட்' என்றிருப்பது டி.வி-தான். பெரும்பாலான குழந்தைகள் சேனல்களில் வரும் மொழியாக்கம் செய்யப்பட்ட கார்ட்டூன்களைத்தான் பார்க்கிறார்கள். அவையெல்லாம் குழந்தையின் அனைத்துத் திறன்களையும் வளர்ப்பதாக இருக்கிறதா என்பதை பெற்றோர்களும் அவற்றை உட்கார்ந்து பார்த்துத் தீர்மானிப்பது நல்லது. காரணம், அவற்றிலும் அடங்கியிருக்கிறது உங்கள் குழந்தையின் அறிவுத் திறனும், பண்பு மனமும்!

உங்கள் குழந்தையை அறிவில், பண்பில், குணத்தில், ஒழுக்கத்தில் சிறந்த மேதையாக்கு வதும், இவைஎல்லாம் இல்லாத கோழையாக்குவதும் நீங்கள் சொல்லும் சின்னச் சின்ன, பொருள் பொதிந்த கதைகளில் இருக்கிறது. அன்றைக்கு பாட்டிகள் சொன்ன கதைகள் கேட்டு வளர்ந்த தலைமுறையான நீங்கள், இன்றைக்கு எந்த அளவுக்கு அறிவோடு இருக்கிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்... அந்த உண்மை புரியும்.

''நாள் முழுக்க வீட்டுல வேலயே சரியா இருக்கு. இதுல குழந்தைகளுக்கு எங்க கதை சொல்றது'' என்று சொல்லித் தப்பிக்காமல், உங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்கு நேரத்தைத் தேடிப் பிடியுங்கள். காரணம், கதை கேட்டு வளரும் குழந்தைகளின் கேட்கும் திறன், ஒரு விஷயத்தின் மீது கவனத்தைக் ஒருமுகப்படுத்தும் திறன், யோசிக்கும் திறன் ஆகிய திறன்கள், கதை கேட்டு வளராத குழந்தைகளிடம் இருப்பதைவிட அதிகம் என்கின்றன ஆய்வுகளும் கண்முன் தெரியும் உண்மை உதாரணங்களும்.

நமக்கு ரொம்ப பழக்கமான, நெருக்கமான பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்கிறீர்கள் என்றால், அந்தக் கதையை மாற்றி மாற்றி சொல்லிப் பாருங்கள். ஒரு நாள், ''பாட்டி மெதுவடை சுட்டாங்களா... அப்ப வந்து காக்கா தூக்கிட்டுப் போயிருச்சு...'' என்று சொன்னால், இன்னொரு நாள் மெதுவடையை ஆமை வடையாக மாற்றி சொல்லுங்கள். இப்படி ஒரு விஷயத்தை வெவ்வெறு விதமாக சொல்லும்போது நிறைய புதுப்புது விஷயங்களைத் குழந்தை தெரிந்து கொள்ளும். ''வடை சூடா இருந்தா, காக்கா என்ன பண்ணும்?'' என்று இடையில் கேட்டுப் பாருங்கள். குழந்தை தரும் பதில்... உங்கள் கற்பனைக்கும் எட்டாத விஷயமாக, ஆச்சர்யப்படுத்தும். இது, குழந்தையை நேர்க்கோட்டில் மட்டும் சிந்திக்க விடாமல், பல கோணங்களிலும் சிந்திக்க வைத்து 'பன்முக சிந்தனையாளர்’ ஆக்கும்!

கதைகள் மட்டுமல்ல, விளையாட்டும்கூட வளர்த்தெடுக்கும்... உங்கள் குழந்தையை 'நம்பர் ஒன்’னாக!

- வளர்ப்போம்...

படம்: எம்.மாதேஸ்வரன்