பிரீமியம் ஸ்டோரி

அதிரவைத்த மதுரா!

##~##

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும்... லண்டன் ஒலிம்பிக் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்து விட்டார் இந்தியப் பெண்... மதுரா ஹனி. ஒலிம்பிக் தொடக்க விழாவின்போது இந்திய அணிவகுப்பை வழிநடத்திய சுஷில் குமாருக்கு மிக அருகே உற்சாகமாக வலம் வந்தார். அணிக்கு சம்பந்தமே இல்லாத இந்தப் பெண் யார் எனத் தெரியாமல், லண்டன் சென்ற இந்தியக் குழு திக்குமுக்காடியது. முழு விவரங்கள் தெரியும் வரை 'டாக் ஆஃப் தி இந்தியா’வாக இருந்தார். ஆர்வக் கோளாறு, புகழ் விரும்பி என நெகட்டிவ் விமர்சனங்களைத் தாண்டி, ட்விட்டரில் இணையவாசிகளை இரண்டு நாட்கள் பரபரப்பாக பேசவைத்த புண்ணியவதியானார், மதுரா.

'ஒலிம்பிக் அணி வகுப்பில் இந்திய அணியுடன் சேர்ந்து நடந்து சென்றது எனது தவறுதான். எனது நடவடிக்கை பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று பெங்களூருவில் தன்னிலை விளக்கம் அளித்திருக்கும் இந்த மதுரா யார்?!

நெட் டாக்ஸ் !

லண்டன் தொடக்க விழாவில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்தான் இவர். ஆர்வக் கோளாறு காரணமாக இந்திய அணியுடன் உலா வந்து சர்ச்சைக்கு ஆளாகிவிட்டார்.

எல்லாம் பப்ளிக்குட்டிதான்! 

  வலையுலகில் வலுப்படுத்துவோம் நட்பை!

நட்பு தினம்... சென்ற ஆண்டைப் போலவே இம்முறையும் அதிகம் கொண்டாடப்பட்டது சமூக வலைத்தளங்கள் மூலம்தான். ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் நொடிக்கு நூற்றுக்கணக்கான நட்பு தின வாழ்த்துகள் பகிரப்பட்டன. அதில், சமூக வலைத்தளங்களில் நட்பை வலுவாக்கிக் கொள்வதற்கான டிப்ஸ்களும் நிரம்பி வழிந்தன.

'ஒருவரின் ஃபேஸ்புக் சுவர், ட்வீட்களைப் பார்த்தாலே அவரது கேரக்டரை கணித்துவிட முடியும். அப்படி கவனிக்க வைக்கும் நல்ல நபர்களிடம் தானாக முன்சென்று ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுக்கத் தயங்காதீர்கள்; நண்பர்களின் ஸ்டேட்டஸ் மெசேஜ் மொக்கையானதாக இருந்தாலும்கூட லைக் செய்ய மறக்காதீர்கள்; ட்வீட்களை ரீட்வீட் செய்வது, ஃபேவரிட் செய்வது அடிக்கடி நடக்கட்டும்; தேவையானபோது ரிப்ளையோ, கமென்டோ கொடுங்கள். பிறந்த நாளில் தவறாமல் வாழ்த்துச் சொல்லுங்கள்...’

நெட் டாக்ஸ் !

- இப்படி நீளும் பட்டியலுக்கு முடிவே இல்லை. இன்னொரு பக்கம் ஃபேஸ்புக்கில், 'பெண்களுக்கே ஃப்ரெண்ட் ரெக்வஸ்டுகளும், லைக்கு களும் அதிக அளவில் கிடைக்கின்றன’ என்ற குமுறல்களுக்கும் பஞ்ச மில்லை!

இங்கயுமா..?!

 சமூக வலைதளங்களில் பாசமலர்!

ரக்க்ஷ£ பந்தன்... சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் தினம். ஒரு பக்கம் சகோதரத்துவத்தின் மகத்துவத்தைச் சொல்லும் பகிர்வுகள், இன்னொரு பக்கம் 'சகோதரிகள் ஜாக்கிரதை’ ரேஞ்சிலான ஜாலி சரவெடிகள் என கலகலத்தது ஆன்லைன். Happy Raksha Bandhan’ என்ற டேக், ட்விட்டரில் நாள் முழுவதும் டிரெண்டிங்கில் இருந்தது. செலிபிரிட்டிகளின் ட்வீட்களுக்கும், அவர்களது சொல்லாடல்களுக்கும் இணையத்தில் உலவி வரும் பாசமலர்கள் இடையே ஏக வரவேற்பு.

நெட் டாக்ஸ் !

எத்தனையோ ஜாலியான ட்வீட்களுக்கு மத்தியில், பலராலும் பகிரப்பட்ட பாடகி சின்மயியின் ட்வீட், ஹைலைட். twitter.com/Chinmayi என்ற அவரது பக்கத்தில் பதிவு செய்த ட்வீட் இதுதான் -

'இன்று ரக்க்ஷ£ பந்தன். இந்தத் திருநாளில் ஆண்கள் நேர்மையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். பெண் சிசுக் கொலை தடுக்கவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் தயவுசெய்து உதவுங்கள்.’

அருமை!

நெட் டாக்ஸ் !
நெட் டாக்ஸ் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு