Published:Updated:

நமக்குள்ளே....

நமக்குள்ளே....

நமக்குள்ளே....

நமக்குள்ளே....

Published:Updated:
நமக்குள்ளே....

அடுத்தவர்கள் நுழைவதற்கு இடம் தராதபடி, காற்றுப் புகாத இடைவெளியுடன் இருக்க வேண்டிய ஒன்றுதான் குடும்ப உறவு! பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், நான்கு சுவர்களுக்குள் குடும்ப உறுப்பினர்களே விட்டுக் கொடுத்து பேசித் தீர்த்துக் கொள்கிறபோது எல்லாம் சுகமே!

 மாறாக, ''எங்க மாமியார் இருக்காங்களே...'' என்று வாசற் கதவைத் திறந்து ஒரு இழு இழுத்தால்... உள்ளே புகுந்து குட்டையைக் குழப்ப ஒரு கூட்டமே குஷியோடு காத்திருக்கிறது என்பதுதான் நிஜம். நம்பி பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர்கள் யார் என்று புரிந்து கொள்ளாமல், குடும்பக் குழப்பங்களை அவர்களிடம் பந்தி வைத்துவிட்டு, சந்திக்கு வந்த சொந்தங்கள் பல பேரை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

##~##

இதுவே இப்படி என்றால், ஒட்டுமொத்தக் குடும்பமும் ஆளுக்கொரு பழியைச் சொல்லி, அடித்துக் கொண்டு தெருவில் நின்று பெரிய யுத்தத்தையே நடத்தினால்..? ஊரறிந்த சினிமா குடும்பத்தைப் பற்றித்தான் நான் சொல்கிறேன் என்று எல்லாத் தோழியருக்கும் புரிந்திருக்கும்.

ஏட்டிக்குப் போட்டியாக... சகிப்புத் தன்மையைச் சுத்தமாகத் தொலைத்துவிட்டு... இந்தப் பெரியவர்கள் மோதிக் கொள்கிற கொடுமை ஒரு பக்கம் என்றால்... தங்கள் குடும்பத்து குழந்தையை இந்த விளையாட்டில் பகடைக் காயாக்கி, இரக்கமில்லாமல் முரட்டுத் தனமாக இவர்கள் கையாளுகிற கொடுமை கண்ணீரையே வரவழைக்கிறது... மீடியாக்களில் பார்க்கும்போது!

'யார் பெரியவர்?' என்று நடக்கும் குடும்ப ஈகோ யுத்தத்தில்  ஒரு பாவமும் அறியாத சிறுவர்களின் இதயங்கள்தான் சுக்குநூறாக நொறுக்கப்படுகின்றன. இந்த உலகப் பொதுவிதியை எச்சரிக்கை யோடு உணர்ந்து கொள்ளாமல் மோதலைத் தொடரும் எவருமே மனதால் நிச்சயம் பெரியவர்களாக இருக்க முடியாது, இல்லையா!

உரிமையுடன்  

நமக்குள்ளே....



ஆசிரியர்