பிரீமியம் ஸ்டோரி

 வாசகிகள் பக்கம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

குட்டீஸ் குறும்பு

150

சிரிப்பு பைலட்!

##~##

ஒன்றாம் வகுப்புப் படிக்கிறான் பக்கத்து வீட்டுக் குட்டிப் பையன் சக்திதரன். 'பெரியவனாகி ஏரோப்ளைன் ஓட்டுவேன்!’ என்றவனிடம், 'அதுக்கு என்ன செய்யணும் தெரியுமா..?’ என்றேன். 'நான் நெத்தியில விபூதி பூசிக்கிட்டு, ஏரோப்ளைனுக்கும் விபூதி பூசிவிட்டு ஓட்டணும். அப்போதான் நல்லா ஓடும்!’ என்றான் படபடவென!

'எந்த வேலை செஞ்சாலும், விபூதி பூசிட்டுதான் செய்யணும்...’ என்று அன்று காலை அவன் தாத்தா செய்த அட்வைஸின் செயின் ரியாக்ஷன் அது என்பது புரிந்தபோது, சிரித்த சிரிப்பில் விமானத்தில் ஏறாமலே வானத்தில் பறந்தோம்!

குட்டீஸ் குறும்பு

- பழனீஸ்வரி தினகரன், நெமிலிச்சேரி

பகவானுக்கு வாபஸ் மனு !

குட்டீஸ் குறும்பு

பூஜை அறையில் என் அருகில் வந்து அமர்ந்த எனது நான்கு வயதுப் பெண் ஸ்ரீப்ரஜா, 'சாமி... நான் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கினா கோயிலுக்கு வந்து பால் அபிஷேகம் செய்யறேன், 108 தடவை தோப்புக்கரணம் போடறேன்...’ என்று வாய்விட்டு வேண்டிக் கொண்டாள். நான் பிரார்த்தனை செய்வதைப் பார்த்திருப்பாள் போல. உடனே நான், 'குழந்தைகள் எல்லாம் நேர்ந்துக்கக் கூடாது...’ என்றேன். சட்டென அவள் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு, 'சாமி... நான் ஒரு பேபி. அதனால பால் அபிஷேகத்தையும் 108 தோப்புக்கரணத்தையும் வாபஸ் வாங்கிக்கறேன்..!’ என்றாள் சீரியஸாக.

சிரிக்காமல் இருக்க முடியுமா என்னால்..?!

- ஆர்.மதுரம் ராம்குமார், ஸ்ரீரங்கம்

ஊர் எப்படி பேசும்?!

குட்டீஸ் குறும்பு

என் வீட்டுக்கு வந்திருந்த என் அப்பாவும், அம்மாவும் மீண்டும் ஊருக்குக் கிளம்ப, 'போகாதீங்க...’ என்று என் பையன் ஒரே அழுகை. பேரனின் அழுகைக்காக மனம் இரங்கி இருவரும் ஊருக்குச் செல்வதை ஒருநாள் தள்ளிப்போட்டார்கள். மறுநாள் பேரனிடம் பக்குவமாக, 'நாங்க வந்து ஒரு மாசம் ஆச்சு... 'மக வீட்டுல போய் இத்தனை நாள் இருக்குறாங்க’னு ஊர் எங்களைப் பேசாதா..?’ என்று கேட்டார் அவன் தாத்தா. உடனே அவன், 'ஊர் என்ன மேனா (மனிதனா)? அது எப்படிப் பேசும்? பொய் சொல்லிப் போகலாம்னு நினைக்கிறீங்களா?!’ என்று சொல்ல, ஒருவரை ஒருவர் பார்த்து சத்தமாகச் சிரித்துக் கொண்டோம்!

- புவனேஸ்வரி நெல்லையப்பன், திருநெல்வேலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு