Published:Updated:

போர்டு எக்ஸாம்...பரபர டிஸ்கஷன்!

போர்டு எக்ஸாம்...பரபர டிஸ்கஷன்!

போர்டு எக்ஸாம்...பரபர டிஸ்கஷன்!

போர்டு எக்ஸாம்...பரபர டிஸ்கஷன்!

Published:Updated:

நாச்சியாள்

போர்டு எக்ஸாம்...பரபர டிஸ்கஷன்!

'போர்டு எக்ஸாம்' என்றாலே, ஸ்டூடன்ட்ஸ் மட்டுமல்ல... இரவு பகலாக அம்மா, அப்பா என்று குடும்பமே கூட உட்கார்ந்து படிக்கிறது. 'நூத்துக்கு நூறு சதவிகிதம் வாங்கினாதானே எங்களுக்குப் பெருமை..?’ என்று பொங்கல், புது வருஷம் என்றுகூட பார்க்காமல் உழைக்கிறார்கள் டீச்சர்ஸும்!

இந்த மூன்று தரப்பினரும் 'போர்டு எக்ஸாம்ஸ்’காக படும் கஷ்டங்கள், எதிர் கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்க்கும் மாற்றங்கள் பற்றியெல்லாம் இங்கே விவாதிக்கின்றனர்... ப்ளஸ் டூ மாணவர் அகிலன் கண்ணன், பத்தாம் வகுப்பு மாணவி கிருத்திகா இந்து, ஆசிரியை கீதப்பிரியா, தலைமை ஆசிரியை பீனா மற்றும் பெற்றோர் சார்பில் ராமமூர்த்தி. சென்னை, வில்லிவாக்கம், பத்மா சாரங்கபாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நாம் ஏற்பாடு செய்த அந்த விவாதத்தின் விறுவிறு காட்சிகள்... சுறுசுறு கலந்துரையாடல் இங்கே...

பீனா: நல்லா படிச்சு, ரிவிஷன் பண்ணின பிறகும் 'போர்டு எக்ஸாம்ஸ் எழுதப் போறோம்’னு மனசுக்குள்ள ரொம்ப பயப்படுறீங்களோ?

போர்டு எக்ஸாம்...பரபர டிஸ்கஷன்!

கிருத்திகா இந்து: நல்லா படிச்சிருக்கோம். எல்லா சப்ஜெக்ட்லயும் எல்லாம் தெரியும்னு கான்ஃபிடன்ஸ் இருக்கு. இருந்தாலும், கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

##~##

ராமமூர்த்தி: எக்ஸாம்ஸ்... எக்ஸாம்ஸ்னு சொல்லி பசங்களுக்கு பொங்கல், தீபாவளி மாதிரி பண்டிகைகளுக்கு கூட லீவு விடறது இல்ல. ரெஸ்ட்டே கொடுக்காம படிக்க வெச்சா பசங்களுக்கு வெறுப்பு வந்துடாதா மேடம்?

கீதப்பிரியா: உங்க பையனை ஸ்கூல்ல சேர்க்கறது... எப்படியாவது நல்ல மார்க் ஸ்கோர் பண்ணி, நல்ல வேலைக்குப் போயிடணுங்கிற எண்ணத்துலதானே? அதைப் பூர்த்தியாக்க நாங்க அப்படித்தான் செஞ்சா கணும். இன்னிக்கு எல்லா மட்டங்களிலும், எல்லா இடங்களிலும் காம்படிஷன் அதிகமாஆகிடுச்சே!

பீனா: அப்படி கடுமையா படிச்சாத்தான், 'என் மகளுக்கு இப்படி மார்க் கொறைஞ்சுடுச்சே...’னு தர்மசங்கடமா நீங்க எங்ககிட்ட நிக்கற நிலைமை வராது சார்.  

கீதப்பிரியா: இன்னொரு விஷயம்... பத்தாவது, பன்னிரண்டாவது படிக்கிற மாணவர்களை ஹேண்டில் பண்றது அவ்வளவு ஈஸியில்ல. என் கிளாஸ்லயேகூட, பொண்ணுங்க அமைதியா இருந்து, கொடுக்கற 'ஹோம் வொர்க்’கை சரியா படிச்சுட்டு வந்துடுவாங்க. ஆனா, பசங்க..? ரொம்ப குறும்பு பண்ற வயசு அது. எவ்வளவு கோச்சிங் கொடுத்தாலும் மார்க்ல குறைஞ்சடறான், ஃபெயில் ஆயிடறான். கவுன்சிலிங் கொடுத்து தான் பாஸ் பண்ண வைக்கி றோம்.

அகிலன் கண்ணன்: மேடம், எங்க குறும்பு மட்டும் பிரச்னையில்ல. எக்ஸாம் டைம்ல அம்மா, அப்பா எங்க முன்னாடி கோபமா பேசிக்கறது... எதையாவது சத்தமா விவாதிக்கறது... டி.வி. பார்க்கறது எங்கள மென்ட்டலா நிறைய டிஸ்டர்ப் பண்ணுதே (கிருத்திகா இந்துவும் தலையசைத்து ஆமோதிக்கிறார்).

பீனா: சரி... பெற்றோர்கள் ரெண்டு பேரும் வேலைக்குப் போற வீட்டுல, அதிக கவனம் கொடுக்கறதில்லையே?!

போர்டு எக்ஸாம்...பரபர டிஸ்கஷன்!

ராமமூர்த்தி: நானும் என் மனைவியும் வேலைக்குப் போறவங்கதான். ஆனாலும், பிள்ளைங்க தினம் என்ன படிக்கிறாங்களானு கவனிச்சுட்டுதான் இருக்கோம். அப்பத்தான் புள்ளைங்க நம்பிக்கையா இருப்பாங்க. அதேசமயம், அவங்கள ஓவரா டார்ச்சர் பண்ணினா... நம்மையும், படிப்பையும் வெறுக்க அதுவே காரணம் ஆயிடும்.

இன்னொரு பிரச்னை... போர்டு எக்ஸாம்ல ஆயிரத்துக்கும் மேல மார்க் வாங்கற ஸ்டூடன்டாலகூட, ஐ.ஐ.டி., என்ட்ரன்ஸ் எழுதி ஸீட் வாங்க முடியல. ஆனா, ஆந்திர மாணவர்கள் நிறைய பேர் ஐ.ஐ.டி-யில ஸீட் வாங்கறாங்க. தமிழ்நாட்டுல ஏன் இந்த பின்னடைவு?

அகிலன் கண்ணன்: நம்ம மாநிலத்துல எல்லா பள்ளிகள்லயும் நிறைய டோட்டல் மார்க் வாங்கணும்னுதான் கோச்சிங் கொடுக்கறாங்க. அதனால நிறைய மாணவர்கள் ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி, கம்ப்யூட்டர் பாடங்களைப் புரிஞ்சு படிக்கிறது இல்ல.

ராமமூர்த்தி: 'நாசா’வுல தலைமை அதிகாரிகளா வேல பார்க்கற நான்கு தமிழர்கள், 'நான் ப்ளஸ் டூ-ல படிச்ச ஃபிசிக்ஸ்தான் எனக்கு இப்ப கை கொடுக்குது’னு சொன்னாங்க. அப்ப மாதிரியான கல்வி முறை இப்ப இல்ல. 'படி, மனப்பாடம் பண்ணு, மார்க் வாங்கு’னு சொல்ற இந்த சிஸ்டம் மாறணும்.

பீனா: சி.பி.எஸ்.சி. ஸ்கூல் சிஸ்டத்துல அந்த மாதிரி 'அப்ளிகேஷன் பேஸ்டு’ கல்வி முறைதான் இருக்கு. அந்த மாதிரியான கல்வி மாற்றம் வரணும்னு பெற்றோர், ஸ்டூடன்ட்ஸ், டீச்சர்ஸ் மட்டும் நினைச்சா பத்தாது. அரசும் நினைக்கணுமே!

கிருத்திகா இந்து: இன்னொரு வேண்டுகோள்... அம்மா, அப்பா, டீச்சர்ஸ்ஸை புரிஞ்சுட்டு நாங்க நடந்துக்கறோம். அதேமாதிரி நீங்களும் எங்களைப் புரிஞ்சு நடந்துகிட்டா... டென்ஷன் இல்லாம படிப்போம், மார்க் எடுப்போம்!

ஆசிரியர்கள், பெற்றோரின் சிரிப்பு... 'டபுள் ஒ.கே!’ சொன்னது போல் இருந்தது!

படங்கள்: கே.ராஜசேகரன், வீ.நாகமணி