Published:Updated:

'சூப்பர் ஸ்மார்ட்’தலைமுறையே...சும்மா அசத்துங்க!

வி.ஐ.பி-க்களின் விறுவிறு டிப்ஸ்கள்

'சூப்பர் ஸ்மார்ட்’தலைமுறையே...சும்மா அசத்துங்க!

வி.ஐ.பி-க்களின் விறுவிறு டிப்ஸ்கள்

Published:Updated:

  க.நாகப்பன்

பரீட்சை நேரம் இது! மாணவர்கள் தேர்வை தேவையான தயாரிப்புகளுடன், பக்குவத்துடன் அணுகவும், நன் மதிப்பெண்களை வெல்லவும் சமூக அக்கறை கொண்ட பெரியவர்கள் சிலர் பகிர்ந்த அறிவுரை, பரிந்துரை விரிகிறது இங்கே...  

இன்சுவை, பேராசிரியர், உளவியல் ஆலோசகர்:

'சூப்பர் ஸ்மார்ட்’தலைமுறையே...சும்மா அசத்துங்க!
##~##

''முடிந்தவரை இரவில் கண் விழிச்சுப் படிக்கலாம். அப்புறம் அதிகாலையில எழுந்து படிக்கலாம். இதுதான் பரிந்துரைக்கான 'ஸ்டடி ஹவர்ஸ்’. சிலர் விதிவிலக்கா நடுராத்திரி எழுந்து படிப்பாங்க. அது அவங்க பல வருடங்களா ரெகுலரா பழக்கப்படுத்திக்கிட்ட ஸ்டடி ஹவர்ஸ்னா, படிக்கலாம். ஆனா, 'அவ எல்லாம் அப்படித்தான் படிக்கறா’னு பரீட்சை நேரத்துல இந்த 'ராக்கோழி’ பழக்கத்தை புதுசா ஏற்படுத்திக்க வேணாம். காரணம்... மனசும், மூளையும் களைப்பா இருக்கற நடுராத்திரியில படிச்சா, கருத்துக்கள் மனசுல சுலபமா பதியாது. படுக்கை அறையில படிக்கறதும் தூக்கத்தை தூண்டும். வேறு அறை, மொட்டை மாடி, படிக்கட்டுனு கவனச் சிதறல்களுக்கு வாய்ப்பில்லாத இடத்துல அமர்ந்து படிக்கலாம்.

வாய்விட்டு படிக்கறது தப்பில்ல. ஆனா, அது சீக்கிரம் களைப்பைத் தந்துடும். அதனால மனசுக்குள்ளேயே படிக்கறது நல்லது. கவனம் சிதறாம இருக்க, படிக்கற வரிகள்ல பென்சிலோ, விரலோ வெச்சுப் படிக்கலாம். உளவியல் ஆராய்ச்சியாளர்கள், 'கண்ணால பார்த்துப் படிக்கும்போது எல்லா வார்த்தைகளும் ஞாபகத்துக்கு வராது. விரல் வெச்சு படிக்கும்போது எளிதில் கிரகிக்க முடியும்’னு சொல்றாங்க!''

சைதை துரைசாமி, 'மனிதநேய அறக்கட்டளை’ தலைவர்:

'சூப்பர் ஸ்மார்ட்’தலைமுறையே...சும்மா அசத்துங்க!

''ஏற்கெனவே நடந்து முடிஞ்ச மாதிரி தேர்வுகள் எல்லாத்துலயும் இடம்பெற்ற எல்லா வினாக்களுக்கும் சாய்ஸ் இல்லாம பதிலை படிச்சு வெச்சுக்கணும். மற்ற மாணவர்களோட 'கைடு’களைப் பார்த்து, 'ஐயோ... அது நம்மகிட்ட இல்லையே’னு பதற வேண்டாம். எல்லா கேள்விகளும் பாட புத்தகத்துல இருந்துதான் வருமே தவிர, கைடுகள்ல இல்லைங்கறதை உணரணும். 'நாம எத்தனை சேப்டர்ஸ் முடிச்சுருக்கோம்... இன்னும் எத்தனை முடிக்கணும்’னு பிளான் பண்ணிக்கலாம். ஆனா, 'அவ நிறைய சேப்டர்ஸ் முடிச்சிருப்பாளோ’ங்கற ஒப்பீடு, பாடத்துல இருக்கற கவனத்தை கலைச்சு, மனசை அலைபாய வெச்சுடும்... கவனம். எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிருக்கற நானே உங்களுக்கு எக்ஸாம் டிப்ஸ் சொல்ற அளவுக்கு வளர்ந்திருக்கும்போது, 'சூப்பர் ஸ்மார்ட்’ தலைமுறையான நீங்க எல்லாம் அசத்திடுவீங்கதானே?!''

வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்., தமிழக அரசின் சுற்றுலாத்துறை செயலாளர்:

''தேர்வு நாட்களுக்கு இடையில இருக்கற விடுமுறைகளைப் பொறுத்து, அந்த நாட்கள்ல படிக்க வேண்டிய சப்ஜெக்ட்கள், சேப்டர்களை திட்டம் போட்டுக்கலாம். உதாரணமா, ஆங்கிலப் பாடத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை இருந்தா, 'ஏற்கெனவே போதுமான அளவு ரிவைஸ் பண்ணியாச்சு. அதுக்கு ஒரு நாள் போதும்’ங்கற நிலையில உங்களோட தயாரிப்பு இருந்தா, அந்த இன்னொரு நாள் விடுமுறையை கடினமா இருக்கற வேற ஒரு பாடத்துக்குப் பயன்படுத்திக்கலாம்.

'கடிகார முள் எவ்வளவு நகர்ந்திருக்கு, நாம எத்தனை பக்கங்கள் படிச்சிருக்கோம்...’ங்கற கணக்கோடயே படிக்காம, முழுசா மனம் ஒன்றிப் படிக்கணும். உள்ளங்கைகளுக்குள்ள சில நிமிடங்கள் முகத்தை புதைச்சு, ஒற்றடம் கொடுத்து எடுத்தா, கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

குறுக்கு வழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானது. அதனால, 'நல்ல’ சூப்பர்வைஸரா வரணும், எக்ஸாம் ஹால்ல 'பார்த்துக்கலாம்’னு எந்த குறுக்குச் சிந்தனையும் இல்லாம, நேர்மையான மனசோட கேள்வித்தாளை கையில வாங்கணும். வழக்கமா எல்லோரும் எழுதற விடைகளை நாமும்

'சூப்பர் ஸ்மார்ட்’தலைமுறையே...சும்மா அசத்துங்க!

எழுதாம, நம்மளோட விடை தனித்து தெரியற அளவுக்கு தனி மொழி நடையில எழுதலாம். 'நிறைய எழுதினா நிறைய மார்க் கிடைக்கும்’னு தேவையில்லாத எக்ஸ்ட்ரா தகவல்களை எழுதினா, நேரம்தான் விரயமாகும்!''

சுகி.சிவம், ஆன்மிக சொற்பொழிவாளர்:

''பெரும்பாலான மாணவர்கள் ஏதோ போர்க்களத்துக்குப் போகப் போற பதற்றத்தோட படிச்சுட்டு இருக்காங்க. 'அப்படி எதுவும் இல்ல. உன் வாழ்க்கையில உன்னை வெளிப்படையா நிரூபிக்கறதுக்கான வாய்ப்பு இது... உன்னோட அடுத்த கட்டத்துக்கான அடிப்படை இது. முடிஞ்சளவு முயற்சி செய்’னு பரீட்சை பத்தின பயத்தை நீக்கி, 'அது ஒரு பொறுப்பு’ங்கறதை அவங்களுக்கு பெற்றோர்களும், பள்ளி தரப்பும் புரிய வைக்க ணும்.  

மாணவர்கள் பரீட்சை நேரங்கள்ல சோர்வு, மந்தம் தரக்கூடிய உணவுகளை சாப்பிடாம சுறுசுறுப்பு தர்ற உணவு வகைகளை, அளவோட சாப்பிடணும். பாடங்களை எளிதா உள்வாங்க உணவு முறையும் முக்கியம்.

அம்பேத்கர், தனக்குப் படிக்க இடம் இல்ல, தனி அறை இல்லனு வருத்தப்படல. சின்னஞ்சிறு வீட்டுல இருந்தபடியே படிச்சுதான் சட்ட மேதையா உயர்ந்தார். அதனால, மாணவர்கள் பொருளாதார வசதியின்மையை குறையா எடுத்துக்காம, 'இந்த நிலையை மாத்தத்தான் படிக்கறேன்’னு மனசுல உறுதி ஏத்திப் படிக்கணும்!''

படம்: தி.விஜய்