Published:Updated:

தைரியத்தை விதைப்போம்!

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர் சா.வடிவரசு

பிரீமியம் ஸ்டோரி
##~##

'ஆதியில் முளைத்த அதிசயம் நாங்கள்
பாதியாய் மீதியாய் ஆக்கின சாதிகள்
அறிவில், உழைப்பில், உறுதியில் நிமிர்ந்தோம்
அகிலத்தை உயர்வாய் நடத்திட துணிந்தோம்
மானிடம் ஒடுக்கிடும் வெளிகள் தகர்க்க
மகளிர் ஓரணி திரள்வோம்! வெல்வோம்!'  

- இடி முழக்கமென ஒலிகள் எழும்ப, சென்னையில் அகில இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது மாநாடு, ஆகஸ்ட் 8 முதல் 11-ந்தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது!

அமைப்பின் அகில இந்தியத் தலைவர் அருணா ராய் மாநாட்டை துவக்கி வைக்க, 29 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க... பாட்னாவில் இருந்து வந்திருந்த 50 இளம்பெண்கள் சீருடையுடன் மாநாட்டுக் கொடியை ஏந்தி வந்தது, நேர்த்தி!

தைரியத்தை விதைப்போம்!

மாநாட்டைப் பற்றி பேசிய சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆனி ராஜா, ''எங்கள் அமைப்புக்கு வயது 58. இத்தனை ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் களைய தொடர்ந்து பாடுபட்டு வருவதோடு, தீர்வுகளும் ஏற்படுத்தித் தந்துள்ளோம். நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போவது வேதனை. பெண்களால் என்ன செய்ய முடியும் என்ற ஆணாதிக்க தைரியம்தான் இதற்குக் காரணம்.

'நம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்கள்' என்று காத்திருக்காமல், இன்று பல பெண்களும் தனக்காக, தானே போராட காவல் நிலையம், கோர்ட், மனித உரிமை கமிஷன் என்று கிளம்பியிருப்பது ஆரோக்கியமான விஷயம். இந்த தைரியத்தை எல்லாப் பெண்களின் மனதிலும் ஊன்ற வேண்டும்.

தைரியத்தை விதைப்போம்!

அதை நோக்கியதாகவே நம் செயல்பாடு இருக்க வேண்டும்!'' என்று சூளுரையாகச் சொன்னார்.  

விழாவின் முக்கிய நிகழ்வாக, இலங்கை போரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட உள்ளம் தாங்கத் துணியாத கொடுமைகளும், அவர்களின் புனர் வாழ்வுக் கான வழிகளும் பேசப்பட்டன. இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்த புகைப் படக் கண்காட்சி கண்ணீரை வரவழைக்க, ''இந்தக் சோகமும் கோபமும் கண்ணீராக மட்டும் கரைந்துவிடக்கூடாது. அங்கு பாதிக் கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கான தீர்மானம் நிறைவேற்றி, அதை நோக்கி நாம் முன்னேற வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கு நடந்தாலும் உதவிக்கு சகோதரிகள் எங்களை அணுகலாம்!'' என்றார் அருணா ராய்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான பெண்களின் கண்களில் நம்பிக்கை ஏற்றியது அவரின் இந்த வார்த்தைகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு