Published:Updated:

கேபிள் கலாட்டா - அழகான பேய் !

ரிமோட் ரீட்டா படம்: வி.செந்தில்குமார்

பிரீமியம் ஸ்டோரி

 ஆன் தி வே டு கோடம்பாக்கம்!

##~##

இசையருவியில 'பாட்டும் பரிசும்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கற கவின், திருச்சியில இருந்து வந்திருக்கார். ''இவ்வளவு சீக்கிரத்துல என் மேல, உன் பார்வை பட்டவிதத்துல, நான் லக்கி ரீட்டா. சென்னை, லயோலா காலேஜ்ல கெமிஸ்ட்ரி படிச்சேன். இருந்தாலும் எனக்குள்ள இருந்த கேமரா ஆசை துரத்த, 'இசையருவி’யில கேரியரைத் தொடங்கி இருக்கேன். சீக்கிரமே கோடம்பாக்கத்துக்குப் போகணும். அதுக்கு வாசலா இந்த 'விஜே’ வேலை இருக்கும்னு நம்புறேன். ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து 'மௌனமொழி’னு ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்தோம். சமீபத்துல அதுக்கு 'டிபிகா’ (டான் பாஸ்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன் ஆர்ட்ஸ்) ஃபிலிம் ஃபெஸ்டிவெல்ல முதல் பரிசு கிடைச்சுருக்கு. எங்க டீமுக்கு கொள்ளை சந்தோஷம். என் பயணத்துக்கு இந்த வெற்றி எல்லாம்தான் தூண்டுதல்!''னு வேட்கையோட பேசினார் கவின்!

வாழ்த்துக்கள்!

கேபிள் கலாட்டா - அழகான பேய் !

விஜய் டி.வி. 'காஞ்சனா’ தொடர்ல... கண்களாலேயே பயமுறுத்திட்டு இருக்கற பூஜாவாவைப் பார்க்கப் போனேன்.

''ரீட்டாகிட்டேயிருந்து, 'பார்க்கலாமா..?’னு போன் வந்தா... உடனே டைம் ஃபிக்ஸ் பண்ணிடுற குட் கேர்ள் நான். எஸ்.எஸ்.மியூஸிக் ஆங்கரா இருந்த காலத்திலிருந்து, இன்னிவரைக்கும் இதை நான் மீறினதே இல்லை. சரிதானே?!''னு குழந்தையா கேட்டபடி ஆரம்பிச்சாங்க பூஜா.  

''என்ன திடீர்னு மர்ம சீரியல்ல பூஜா..?''

''ஆங்கரா வேலை பார்த்தப்பவே நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்துட்டுதான் இருந்துச்சு ரீட்டா. அப்போ நாம இருந்த வேகத்துக்கு அதுல எல்லாம் கான்சன்ட்ரேட் பண்ண முடியல. எஸ்.எஸ்.மியூஸிக் சேனல்ல இருந்து விலகி ஒரு வருஷத்துக்கு மேல ஆன இந்த நேரத்துல, 'காஞ்சனா’ சீரியல் கதை கேட்டேன். செம்ம த்ரில்லிங். சந்தோஷமா 'ஓ.கே’ சொல்லிட்டேன். ஆனா, நடிக்கறது எவ்வளவு

கேபிள் கலாட்டா - அழகான பேய் !

கஷ்டமான ஜாப்னு இப்போதான் புரியுது. ஆங்கரா இருந்தப்போ ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 மணி நேரம்தான் ஷூட். இப்போ சீரியலுக்காக 15 மணி நேரம்கூட தொடர்ந்து வேலை பார்க்க வேண்டியதா இருக்கு. சிட்டி பொண்ணாவே வளர்ந்துட்டு, இப்போ ஷூட்டிங்குக்காக தென்காசி, குற்றாலம்னு காடு, மேடெல்லாம் ஏறி, இறங்குற அனுபவம் புதுசா இருக்கு. ஆனா, அதோட ரிசல்ட்டை ஸ்கிரீன்ல பார்க்கும்போது, 'சூப்பர்!’னு தோணுது. வடிவுக்கரசி மேடம் உட்பட சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் பலரோடயும் நடிக்கறது ஒரு திருப்தினா, என்னைப் பார்க்கிற குழந்தைகள் எல்லாம் 'காஞ்சனா பேய்..!’னு பயப்படுறது, கலக்கல்!''னு குஷியான பூஜாகிட்ட பர்சனல் லைஃப் பத்தி பேசாம இருக்க முடியுமா..?!

''காதல் கணவர் க்ரேக், எஸ்.எஸ். மியூஸிக்ல என்கூட ஆங்கரா வேலை பார்த்தவர்னு உனக்கே தெரியும். திருமணம் முடிஞ்சு ரெண்டு வருஷங்களாச்சு. இப்பவும் காதலர்களாகவேதான் இருக்கோம். வீட்டுல எங்ககூட என் சிஸ்டர் ஆர்த்தியும் இருக்கா. மீடியா ஆர்வத்துல ஜர்னலிஸம் படிச்சுட்டு இருக்கற பொண்ணு. எப்பவெல்லாம் டைம் கிடைக்குதோ... அப்போவெல்லாம் நானும் அவளும் பெங்களூருவுல இருக்கிற எங்க பேரன்ட்ஸைப் பார்க்கக் கிளம்பிடுவோம். இதுதான் பூஜா@ஹோம்!''னு சிரிச்ச பூஜா,

''எஸ்.எஸ். மியூஸிக் ஃப்ரெண்ட்ஸ், கான்டாக்ட்ஸ் எல்லாம் மிஸ் பண்ணிட்டேன் ரீட்டா. அவங்க எல்லாம் இப்போ 'டச்’லயே இல்ல. 'காஞ்சனா’ பார்த்துட்டு எல்லாரும் கால் பண்ணுவாங்கனு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்... பார்ப்போம்!''னு ஃபீல் ஆனாங்க!

கா...ஞ்...ச...னா!

செய்திகள் வாசிப்பது..!

கேபிள் கலாட்டா - அழகான பேய் !

நேர்த்தியான முக பாவனை, அட்சர தமிழ் உச்சரிப்புனு சன் நியூஸ் சேனல்ல கல்யாணி செய்தி வாசிச்சா, ரம்மியமா ரசிக்கலாம். ''ஸ்கூல், காலேஜ் டேஸ்ல இருந்தே பேச்சுப் போட்டிதான் நம்ம கிரவுண்ட். அது தந்த தன்னம்பிக்கையும் ஆர்வமும் நியூஸ் ரீடர் வேலைக்கு என்னை முயற்சி பண்ண வெச்சது. இதோ... நினைச்சது நடந்துருச்சு. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், 'ஏய் இன்னிக்கு மழை பெய்யுமா?’, 'தங்கம் விலை என்னம்மா..?’னு கேட்டு வம்பு செய்றாங்க. சந்தோஷ சலிப்பா இருக்கு. காலேஜ் போயிட்டிருக்க என் தங்கை காவேரியும் இப்போ 'ஜீ டி.வி’-யில நியூஸ் ரீடர் ஆயிட்டா. என்னைவிட நல்லாவே பிக்-அப் பண்றா. இன்னும் ரெண்டு, மூணு மாசத்துப் பிறகு அவளையும் பேட்டி எடுக்க வருவ பாரு!''னு சர்டிஃபிகேட் கொடுத்தாங்க கல்யாணி!

நியூஸ் சிஸ்டர்ஸ் !

'அழகி’யும் அரை டஜன் சீரியல்களும்!

கேபிள் கலாட்டா - அழகான பேய் !

சன். டி.வி. 'அழகி’ சீரியல்ல 'பாஞ்சாலி’யா வந்து அசத்துற சுஜாதா, ஷட்டில் சாம்பியன். ''ஷூட்டிங் இல்லாத நாட்கள்ல ஃப்ரெண்ட்ஸோட ஷட்டில் விளையாடுறதுதான் பொழுதுபோக்கு. அந்த டீம்ல இப்போ என் பொண்ணுங்க மஞ்சுதர்ஷினி, பிரியங்கா ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்க. 14 வயசுல இருந்தே மீடியாவுல இருக்கேன் ரீட்டா. 'அழகி'யில என்னோட கேரக்டர் நல்ல ரீச் கொடுத்திருக்கு. அதன் பலனா அரை டஜன் சீரியல்கள்ல கமிட் ஆகி நடிச்சுட்டு இருக்கேன். விஜி மேடத்தோட சேர்ந்து நடிக்கிற சுவாரசியத்தை சொல்லியே ஆகணும். அதைவிட, அவங்க சீரியலைப் பார்த்துட்டு, அக்கா சரிதா தினமும் பாராட்டுறப்போ, ஆனந்த ஆச்சர்யமா இருக்கும். வடிவுக்கரசி அம்மா, ஆச்சி மனோரமா, ராதிகா மேடம், கோவை சரளா அக்கா மாதிரி நடிப்புல நல்ல பேரை சம்பாதிக்கணும். அதுதான் என்னோட ஆசை!''னு முடிச்சாங்க சுஜாதா!

ஷட்டில்ல சேர்த்துக்குவீங்களா..?!

கேபிள் கலாட்டா - அழகான பேய் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு