Published:Updated:

மலைக்கோட்டையே கிடுகிடுத்துடுச்சுல்ல...!

மலைக்கோட்டையே கிடுகிடுத்துடுச்சுல்ல...!

மலைக்கோட்டையே கிடுகிடுத்துடுச்சுல்ல...!

மலைக்கோட்டையே கிடுகிடுத்துடுச்சுல்ல...!

Published:Updated:

க.ராஜீவ் காந்தி

ஜனவரி 23, மலைக்கோட்டை மாநகரான திருச்சியில் 'ஜாலி டே’! 'அவள் விகடன் - விவெல்’ இணைந்து நடத்திய இந்த உற்சாகத் திருவிழாவின் மூலம்... 'போட்டி, கொண்டாட்டம் என்றாலே... சும்மா ஒரு கை பார்த்துடுவோம்ல...!’ என்று நிரூபித்துக் காட்டினர் ஆர்வமாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சூப்பர் ஹிட் ஆக்கிய திருச்சி மண்டல வாசகிகள்.

முதல் நாள் முன் தேர்வுப் போட்டிகளில் வாசகிகளின் திறமையைப் பார்த்தபோதே, அடுத்த நாள் ஃபைனல் போட்டிகளில் செம 'டஃப் ஃபைட்’ இருக்கும் என்பது தெரிந்ததால், ஜட்ஜஸ் எல்லாம் செம அலர்ட். மறுநாள் காலை ஏழு மணியிலிருந்தே கலகலப்பானது ஸ்ரீமதி, இந்திரா காந்தி கல்லூரியின் அரங்கம்!

மலைக்கோட்டையே கிடுகிடுத்துடுச்சுல்ல...!
##~##

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரான முனைவர் கே.மீனா குத்துவிளக்கேற்றி உற்சாகத் திருவிழாவை ஆரம்பித்து வைக்க, வழக்கமான பூரிப்போடு நிகழ்ச்சிகளைத் துவக்கினார் தொகுப்பாளர் அபீக்ஷா பட்.

வயது 60-ஐ தாண்டினாலும் இன்னமும் உற்சாகமாக எல்லா ஊர் 'ஜாலி டே’க்களிலும் பங்கேற்கும் வாசகி சின்னப்பொண்ணு, தான் 'ஜாலி டே’க்களில் பெற்ற வெற்றிச் சான்றிதழ்களை உடைபோல் உடுத்திக் கொண்டு மேடையேற, கரகோஷம் விண்ணைப் பிளந்தது.  

ஆரம்பமாயின போட்டிகள். 'நகைச்சுவை நேரம்' போட்டிக்காக வாசகிகள் தயார் செய்திருந்த ஸ்கிரிப்ட் ஒவ்வொன்றும் வடிவேலு, சந்தானம் காமெடிகளையே தூக்கிச் சாப்பிட்டன. டாக்டரிடம் பல் பிடுங்க வரும் ஒரு பேஷன்ட் படும் பாட்டை காமெடியாக்கிக் கலக்கினர் வனஜாவும், பாகப்பிரியாவும். பல் எடுப்பதற்காக போராடிய டாக்டர்... ஸ்பேனர், கட்டிங்பிளேயர், சுத்தியல் என பெரிய பெரிய அயிட்டங்களாக கையில் எடுக்க... மலைக்கோட்டையே கிடுகிடுக்கும் அளவுக்கு கரகோஷம்! அனுமார் கையிலிருக்கும் கதாயுதத்தைப் பயன்படுத்தியும் அகற்ற முடியாத அந்தப் பல், மனைவிவிட்ட 'அறை’யால் விழுந்ததாம் (நல்லா எழுதுறாங்கய்யா ஸ்கிரிப்ட்டு)!

மலைக்கோட்டையே கிடுகிடுத்துடுச்சுல்ல...!
மலைக்கோட்டையே கிடுகிடுத்துடுச்சுல்ல...!

வினாடி-வினாவில் வைகை, காவிரி, யமுனா, சிந்து, பிரம்மபுத்திரா என நதிகளின் பெயர்களில் கலந்துகொண்ட அணிகளில் 'டாண் டாண்’ என பதில்களைக் கூறி வெற்றி பெற்றது, காவிரி அணி (அட... திருச்சி ஸ்பெஷல்)! அந்த அணியில் இருந்த லலிதாவும், அகிலா கணேசனும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 'ஜாலி டே’வில் இதே 'வினாடி-வினா’வில் இருவருமாகவே கலந்துகொண்டு வென்றதை 'ஃப்ளாஷ்பேக்’கி மகிழ்ந்தனர்.

'ஜோடி அறிதலு’க்கு மேடையேறிய 40 வாசகிகளும் தங்கள் ஜோடியை அறிய காய், பழம் என மேடையிலேயே ஏலம்விட, கலகலப்பானது அரங்கம். இறுதியில் விற்றது... ஸாரி... ஜெயித்தது 'பழம்’ அணி!

மலைக்கோட்டையே கிடுகிடுத்துடுச்சுல்ல...!
மலைக்கோட்டையே கிடுகிடுத்துடுச்சுல்ல...!

போட்டிகளுக்கு நடுவே குத்துப் பாடல்கள் ஒலித்தபோதெல்லாம் இருக்கைகள் அனைத்தும் காலியாக, வாசகிகள் எழுந்து நின்று போட்டனர் அசத்தல் ஆட்டம். அதகள ஆர்ப்பாட்டத்துக்கு நடுவில் 'வீரத்தாய்’ எனும் நாடகத்தை 'மோனோ ஆக்டிங்’ பாணியில் நடித்து போர்க்களத்தை கண் முன் நிறுத்திய நம் வாசகி சரஸ்வதிக்கு, குவிந்தன பாராட்டுகள். பொங்கல் சீஸன் என்பதால் கையோடு மஞ்சள் கொண்டு வந்திருந்த வாசகிகளை, 'சர்ப்ரைஸ் போட்டி’க்காக மேடைக்கு அழைத்தார் அபீக்ஷா. சளைக்கவில்லை வாசகிகள். சுமார் 20 தோழிகள் மஞ்சளோடு மேடையேறி, பரிசைப் பெற்றனர். அடுத்ததாக, ''ஒரே பெயர் கொண்ட வாசகிகள் வாங்க...'' என்று அழைத்ததுதான் தாமதம், அரங்கமே மேடைக்கு ஏறியது. இறுதியாக 26 'சாந்தி’களும், 19 'மகாலட்சுமிகளு’ம் இணைந்து அசர வைத்தனர். மலைக்கோட்டை வாசகிகளின் அழகுப் பராமரிப்புக்கு டிப்ஸ் வழங்கினார் அபர்ணா.

நிகழ்ச்சி முடிவுக்கு வர, வெற்றியாளர்களுக்கு கிரைண்டர், குக்கர், கேஸ்ஸ்டவ்  என்று

மலைக்கோட்டையே கிடுகிடுத்துடுச்சுல்ல...!

2 லட்சம்  மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.  வந்திருந்த அனைத்து வாசகிகளுக்கும் 'விவெல் கிஃப்ட் ஹேம்பர்’ வழங்கப்பட்டன. இருந்தும், அரங்குக்குள் திக்... திக்... குறையவில்லை. காரணம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகிகளிலிருந்து 'பம்பர் பரிசு’க்கு என ஒரு வாசகியை தேர்ந்தெடுக்கும் நேரம் அது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அதிர்ஷ்டசாலி... திருச்சி, சின்னசெட்டி தெருவை சேர்ந்த ஷண்மதி. ''ரெண்டாவது முறையா 'ஜாலி டே’ல கலந்துக்கறேன்'' என்று ஆரம்பித்தவருக்கு சந்தோஷத்தில் வார்த்தைகள் தடுமாற, ''தேங்க்ஸ்!'' என்றார் மனது கொள்ளா பூரிப்புடன்! அதேவார்த்தையை ஒவ்வொருவரும் வாய்விட்டுச் சொன்னபடியே கலைந்தனர் வாசகிகள்!

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக், எம்.ராமசாமி