Published:Updated:

கேபிள் கலாட்டா

விருது

கேபிள் கலாட்டா

விருது

Published:Updated:

ரிமோட் ரீட்டா

''ரீட்டா... ஆறு வருஷமா நாங்க விழுந்து விழுந்து பார்த்த 'கோலங்கள்' சீரியலுக்கு விருது கிடைச்சிருக்கு. சான்ஸை மிஸ் பண்ணாம, அந்த டீமுக்கு எங்க வாழ்த்துக்களைச் சொல்லிடு. அதோட... இப்படியரு அருமையான தொடரை எங்களுக்குத் தந்த தயாரிப்பாளர்கிட்ட நாலு கேள்விகளைப் போட்டு, பதிலை வாங்கறதுக்கும் மறக்காதே...'' என்று அதிதீவிர ரசிகைகளிடம் இருந்து போன் மூலம் எனக்கு உத்தரவு!

கேபிள் கலாட்டா
##~##

விட்டேன் ஸ்கூட்டியை... 'விகடன் டெலிவிஸ்டாஸ்' தயாரிப்பாளர் பா.சீனிவாசன் ஆபீஸுக்கு! ''வாழ்த்துக்கள்'' சொன்ன கையோடு, ச்சும்மா வரிசையா கேள்விகளை எடுத்துவிட ஆரம்பிச்சுட்டா... உங்க ரீ... ட்... டா...!

''ஆறு வருஷங்கள்... 1,533 எபிசோடுகள் என வரலாறு படைத்து, விருதைப் பெற்றிருக்கிறது 'கோலங்கள்'... எப்படி உணர்கிறீர்கள்?''

''விகடன் டெலிவிஸ்டாஸ், 1998-ல் 'அட்சயா' என்ற வாராந்திர சீரியலை முதன் முதலாக தயாரித்தது. 2001-ல் 'அலைகள்' எனும் நெடுந்தொடர். அடுத்து தயாரித்த 'அப்பா' எனும் சீரியல் சரியாகப் பேசப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து நம்பிக்கை வைத்து, எங்களை ஊக்குவித்து, 'இம்முறை வெற்றி அடைவீர்கள்' என்று உற்சாகப்படுத்தி, மீண்டும் எங்களுக்கு வாய்ப்புத் தந்தார் சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறன். 'கோலங்கள்' வெற்றிக்கு அவர்தான் முதல் காரணம்!

'கோலங்கள்' சீரியலில் இடம் பெற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட அனைவரும் ஆரம்பத்திலிருந்தே காட்டிய அக்கறையான உழைப்பு... அளப்பரியது. அது, விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம். அத்தனைக்கும் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த விருது!''

''நட்பு, பாசம், காதல், அன்பு, தவிப்பு, கோபம், திகில் என... சகலத்தையும் கதைக்குள் கொண்டு வந்து, டீன் ஏஜ் முதல், ஓல்டு ஏஜ் வரை அனைவரையும் இரவு 9 மணிக்கு டி.வி. முன்பாக கட்டிப்போட்ட அந்த மேஜிக்கின் மூலகர்த்தா யார்?''

கேபிள் கலாட்டா

''முதல் எபிசோடிலிருந்து கடைசி எபிசோடு வரை இயக்குநர் திருச்செல்வம் காட்டிய அயராத உழைப்புதான் அந்த மேஜிக்! முதல் முறையாக விகடன் டெலிவிஸ்டாஸ் மூலமாக இயக்குநராகி, தேவிபாலாவின் மூலக்கதையை, 'கோலங்கள்' என்று ஒரு விருட்சமாக வளர்த்தெடுத்தார் திருச்செல்வம். கதை, திரைக்கதையை நேர்த்தியாக நெய்ததோடு மட்டுமல்லாமல், 'தொல்ஸ்' என்ற கேரக்டரையும் ஏற்று, அந்தக் கேரக்டராகவே மாறிப்போனார். 'கோலங்கள்’ பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், எங்கள் அலுவலகத்தில் 'தொல்காப்பியம்' என்றேதான் கூறுவோம். அந்த அளவுக்கு கோலங்களுடன் ஐக்கியமானவர், 'தொல்ஸ்' திருச்செல்வம்!''

''உலகம் முழுக்க இருக்கும் தமிழ்கூறும் இல்லங்கள்தோறும் பேசப்பட்ட அந்த அபி கேரக்டருக்கு தேவயானியைத் தேர்வு செய்தது எப்படி?''

கேபிள் கலாட்டா

''மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அபி கேரக்டரை சுமந்து செல்லக்கூடிய அளவுக்கு திறமை படைத்த ஒரு கதாநாயகியைத் தேடினோம். அதீத நடிப்புத் திறமை பெற்றிருப்பதோடு, தொலைக்காட்சிக்கு புதிய முகமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம். அதில் எங்களின் முதல் சாய்ஸ்... தேவயானி. கேட்டதுமே ஒப்புக் கொண்டுவிட்டார். இடையில், டெலிவரிக்காக இரண்டு தடவை மட்டும் விடுமுறை எடுத்துக் கொண்டவர், ஆறு வருஷங்களும் ஆர்வம் குறையாமல் நடித்தார்... அபியாகவே மாறியும் போனார்.''

'''கோலங்கள்’ அபி, 'தென்றல்' துளசி என்று பெண்ணுக்கு நேரும் பிரச்னைகளை மையப்படுத்தியே உங்கள் சீரியல்கள் சுழல்கின்றவே? வீட்டிலும், வெளியிலும் பெண்களை அந்த அளவுக்குச் சோதனைகள் வருத்திக் கொண்டுதான் இருக் கின்றனவா?''

''ஃபேக்ட் ஈஸ் ஸ்ட்ரேஞ்சர் தென் ஃபிக்ஷன் (திணீநீt வீs stக்ஷீணீஸீரீமீக்ஷீ tலீணீஸீ யீவீநீtவீஷீஸீ) என்றொரு பழமொழி சொல்வார்கள். அதுதான் உண்மை. அதாவது, சமுதாயத்தில் நடப்பவற்றைத்தான் சீரியல்கள் பிரதிபலிக்கின்றன. வெளியில் சொல்லிக் கொள்ளமுடியாத, தொலைக்காட்சிகளில் வெளிப்படுத்த முடியாத வகையில் தினம்தினம், சோதனைகள்... வேதனைகள் என்று பெண்கள் அவஸ்தையில் முடங்கியபடிதான் இருக்கிறார்கள். அவற்றில் பத்தில் ஒரு பங்குதான் சீரியல்களில் காட்டப்படுகின்றன.

பணிக்குப் போகும் பெண்களின் பிரச்னைகளை 'கோலங்கள்' அபியும், படிக்கப் போகும் பெண்களின் பிரச்னைகளை 'தென்றல்' துளசியும் பிரதிபலித்தார்கள் என்றால், ஹோம்மேக்கர்களாக இருக்கும் பெண்களின் பிரச்னைகளை பிரதிபலிக்கிறார் 'திருமதி செல்வம்' அர்ச்சனா.''

''கோலங்கள் பார்ட் டூ வருமா?''

''இதைப் பற்றித்தான் திருச்செல்வத்திடம் பேசிக் கொண்டிருக்கிறேன். நேரம், களம் அதற்கான சூழ்நிலை ஏற்பட்டால்... பார்ட் டூ வரலாம்.

இந்த நேரத்தில் இன்னும் ஒரு சந்தோஷ செய்தி... ஏற்கெனவே 'ரங்கோலி' என்ற பெயரில் கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகாவில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது 'கோலங்கள்’. அடுத்து, பிப்ரவரி 14 முதல், 'மைகே ஸே பந்தி டோர்' (பிறந்த வீட்டு பந்தம்) என்ற பெயரில் 'கோலங்கள்’ இந்தி பதிப்பு ஒளிபரப்பாக இருக்கிறது. யு டி.வி-யுடன் இணைந்து, விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிக்கும் இந்தி சீரியலை, ஸ்டார் பிளஸ் சேனலில் இரவு 8.30 மணிக்கு பார்க்கலாம்.''

''ஏற்கெனவே தென்னக மக்களின் ஆதரவை முழுமையாகப் பெற்றுவிட்ட, 'கோலங்கள்' வடஇந்தியா மக்களின் பேராதரவோடு வெற்றிக் கொடி நாட்டட்டும்'' என்று வாசகிகளின் சார்பில் 'பெஸ்ட் விஷஸ்' சொல்லி விடைபெற்றாள் உங்க ரீட்டா!

அவார்டுகள் அள்ளியிருக்கற ஸ்டார்ஸ் சிலரின் சந்தோஷத் துளிகள்...

தேவயானி, சிறந்த கதாநாயகி, (கோலங்கள்): ''தகவல் வெளியானதுல இருந்து என் மொபைல் என்னை அழைச்சுட்டே இருக்கு. அத்தனை வாழ்த்துகள். நெகிழ்ந்துட்டேன். பெரிய திரை 'பிரேக்’குக்கு அப்புறம், 'கோலங்கள்’ மூலமா என்னை 'விகடன் டெலிவிஸ்டாஸ்’ சின்னத்திரைக்கு அழைச்சுட்டு வந்தப்போ, 'கண்டிப்பா இந்த சீரியல் சக்சஸ் ஆகும்’ங்கற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனா, அது 'ரெக்கார்ட் பிரேக்’ ஆனது, எங்களோட டீம் வொர்க்குக்கு கிடைச்ச வெற்றி! 'சிறந்த நடிகை’ அவார்டு, என் ரெண்டாவது பொண்ணு ப்ரியங்கா பிறந்ததுனு 2007-ம் வருஷம் எனக்கு டபுள் ஷாட்தான்! இந்த விருதை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கறேன்!''

சத்யப்ரியா, சிறந்த குணச்சித்திர நடிகை, (கோலங்கள்)’: ''ரொம்ப உடம்புக்கு முடியாம படுத்திருந்தேன். 'உங்களுக்கு விருது கிடைச்சிருக்கு’னு கோலங்கள் டீம்லதான் போன் பண்ணி சந்தோஷ செய்தி சொன்னாங்க. அப்படியே பெட்ல இருந்து துள்ளிக் குதிச்சு எழுந்து தெம்பா உட்கார்ந்துட்டேன். சீரியல் ஒளிபரப்பான அந்த ஆறு வருஷமும் 'அபி’ குடும்பத்தோட ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வாழ்ந்து முடிச்ச திருப்தி!''

சஞ்சீவ், சிறந்த கதாநயகன், (திருமதி செல்வம்): ''அம்மாகிட்டதான் இந்த சந்தோஷ செய்தியை முதல்ல சொன்னேன். என்னைக் கட்டிப்பிடிச்சு, பரவசமானாங்க. 'நீ பிறந்த அதிர்ஷ்டமும், உன் அம்மாவோட அன்பும்தான் இதுக்கு காரணம்...’னு என் ஏழு மாசக் குழந்தை 'லயா’வுக்கும், மனைவிக்கும் மனதார 'தேங்க்ஸ்’ சொன்னேன். 'திருமதி செல்வம்’, என் கேரியர்ல முக்கியமான சீரியல்.''

குமரன், சிறந்த கதாசிரியர், (திருமதி செல்வம்): ''திருமதி செல்வம், என்னோட முதல் புராஜெக்ட். எப்பவுமே திறமையை நம்பி பொறுப்பை ஒப்படைக்கற 'விகடன் டெலிவிஸ்டாஸ்’க்கும், ரசிகர்களுக்கும் என்னை நிரூபிச்சுட்ட நிம்மதி இந்த தருணத்துல ஏற்படுது. விறுவிறுப்பா போயிட்டிருக்கற எங்களோட 'தென்றல்’ சீரியல், அடுத்த வருஷமும் எங்களை விருதுப் பட்டியல்ல வைக்கும்னு கண்டிப்பா நம்பறோம்!''

'ஆனந்த’ வெற்றி!  

கேபிள் கலாட்டா

2008ம் ஆண்டுக்கான சிறந்த நெடுந்தொடருக்கான விருதைப் பெற்றிருக்கிறது 'ஆனந்தம்'. அதன் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் (சத்ய ஜோதி பிலிம்ஸ்): ''2007ல 'ஆனந்தம்’ சீரியலுக்கு சிறந்த வில்லி, சிறந்த புரொட்யூசருக்கான விருதும் கிடைச்சிருக்கு. 2008க்கு சிறந்த கதாநாயகி, சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த இயக்குநர் விருதுகளோட சிறந்த நெடுந்தொடருக்கான விருதையும் வாங்கியிருக்கிறது ரொம்ப பெருமைக்குரிய விஷயம்.

 சீரியல்னாலே அழுகைதான்னு மக்கள் மத்தியில ஒரு முத்திரையே பதிஞ்சி போயிருந்தது. அதையெல்லாம் உடைக்கிற மாதிரி, பெண்கள் அழற மாதிரியான ஸீனை பெரும்பாலும் தவிர்த்து, லட்சியம், தைரியம், சாதிக்கணும்ங்கிற வெறியோட போராடி நிமிர்ந்து நிக்கிற மாதிரியான உள்நோக்கத்தோட கதை அம்சத்தைத் தேர்ந்தெடுக்கிறோம். அதுதான் சீரியல் விருதுக்கான சக்சஸ் பார்முலா.’'