ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

கீ பாய்!

சாவி கொடுத்து விளையாடும் பொம்மை என்றால், என் மூன்று வயதுப் பேரன் நவீனுக்கு அவ்வளவு இஷ்டம். அவனுக்கு தம்பி பாப்பா பிறந்தபோது, அம்மாவையும் குழந்தையையும் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். தொட்டிலில் அசையாமல் உறங்கிக் கொண்டிருந்த தம்பியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் கை, காலை அசைத்து குழந்தை அழ ஆரம்பித்தது. உடனே இவன், ''பாட்டி... கீ கொடுக்காமலே பாப்பா அழுமா..?'' என்று கேட்க, நர்ஸ் உட்பட அனைவருக்கும் சிரிப்பு! ஆனாலும் தன் 'கீ இல்லாத டால்’ தம்பியை ஆச்சர்யம் விலகாமல் பார்த்துக் கொண்டே இருந்தான் பேரன்!

- ஜெயா கணேசன், சென்னை-83

''காக்காவுக்கும் தெரிஞ்சுடுச்சா..?!''

என் ஐந்து வயது சுட்டிப் பையன் கிஷோர் குமார், பயங்கர சேட்டை. ஒவ்வொருமுறை மேலே ஏறி, கீழே குதித்து என அவன் அடிபட்டு வரும்போதும், ''நீ சேட்டை பண்றதாலதான் உன்னை காட் பனிஷ் பண்ணிட்டார்'' என்று சொல்லிக் கண்டிப்பேன். ஒருநாள் ஸ்கூலில் இருந்து வந்தவன், ''அம்மா... நான் சேட்டை பண்றது காக்காவுக்கும் தெரிஞ்சுடுச்சா..?'' என்றான் கலக்கத்துடன். விசாரிக்க, ''காக்கா என் லஞ்ச் பாக்ஸ்ல இருந்த முட்டையை எடுத்துட்டுப் போய்... இன்னொரு பாய் பாக்ஸ்ல போட்டுடுச்சு...’ என்றான் ஆச்சர்யமாக. வரிசையாக அமர்ந்து சாப்பிடும்போது இவனுடைய பாக்ஸில் இருந்த முட்டையைத் தூக்கிய காக்கா, பறக்கும்போது தவறி இன்னொருவனின் பாக்ஸில் போட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நான், ''அவன் குட் பாயா இருந்திருப்பான். அதான் பேட் பாய் கிஷோரோட முட்டையை எடுத்து அவனுக்கு கொடுத்திருச்சு. இனி நீ லஞ்ச் மிச்சம் வெச்சா, உன் ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில் எல்லாம் தூக்கிட்டுப் போயிடும்'' என்றேன் சிரிப்பை அடக்கிக் கொண்டு!

அதிலிருந்து சாரின் லஞ்ச் பாக்ஸ் தினமும் ஆல் கிளியர்தான்!

- ஜெ.இந்து ஜெகன், திண்டுக்கல்

இலக்கண கரெக்ஷன்!

பல வருடங்களுக்கு முன் திருப்பதி சென்றிருந்தபோது, தேவஸ்தான விடுதியில் தங்கியிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த அறையின் கதவை வெளியில் யாரோ தாழ்ப்பாள் போட்டு விட்டார்கள். எவ்வளவு தட்டியும் யாரும் வரவில்லை. நாற்காலியில் ஏறி, கதவுக்கு மேல் இருந்த ஜன்னல் வழியாக பார்க்க, விடுதியின் நடுவில் இருந்த தோட்டத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்து கை அசைத்து, ''ஏமண்டி... ஏமண்டி...'' என்று தெலுங்கில் கூப்பிட்டேன். அவருக்குக் கேட்கவில்லை. உடனே என் ஐந்து வயது மகள், ''அம்மா, அவர் ஆம்பளதானே? 'ஏமண்டா, ஏமண்டா’னு கூப்பிட்டாதான் திரும்பிப் பார்ப்பாரு...'' என்று சொல்ல, அந்த சூழ்நிலையிலும் அறையெல்லாம் சிரிப்பு நிறைந்தது. பின், ஒருவழியாக நாங்கள் வெளிவந்தது தனிக்கதை!

எங்கள் குடும்பத்தின் எவர்கிரீன் காமெடி இது!

- தனலட்சுமி அண்ணாதுரை, சென்னை-40