''திருட்டுங்கறதே... பெரும்பாலும் பெண்களை இலக்கா வெச்சுதான் நடந்துக்கிட்டிருக்கு. அதுக்குக் காரணம், 'எதிர்ப்பு காட்டற அளவுக்கு பெண்களுக்கு தைரியம் இல்லை'ங்கற நம்பிக்கைதான். அதை தூள்தூளாக்கி, முன்மாதிரி பெண்களா நாங்க நிக்கறோம்னு நினைக்கறப்பவே... சந்தோஷமா இருக்கு!''

- விருதுடன் சிரிக்கிறார்கள் தாய் ராஜலட்சுமியும், மகள் சிவரஞ்சனியும்!

'துணிவு மற்றும் சாகச செயலுக்கான இந்த ஆண்டின் 'கல்பனா சாவ்லா’ விருதை, முதல்வரிடமிருந்து பெற்றிருக்கிறார்கள் இருவரும். வீட்டுக்கு வந்த திருடனை மடக்கிப் பிடித்த வீரத்துக்காக விருது பெற்றிருக்கும் இவர்களை கடலூர் மாவட்டம், புவனகிரி, பு.உடையூர் கிராமத்தில் சந்தித்தோம். அன்றைய சம்பவத்தில் இருந்து ஆரம்பித்தது பேச்சு.

''வீட்டுக்காரர் மளிகைக்கடை வெச்சுருக்காரு. அன்னிக்கு அவரு சென்னை போயிருந்தாரு. நானும் இளைய மகள் சிவரஞ்சனியும் கடையை மூடிட்டு... ஹால்ல படுத்திருந்தோம். ராத்திரி கேட்டோட பூட்டை உடைச்சுட்டு, முகமூடி போட்ட ரெண்டு பேரு உள்ள வந்துட்டானுங்க. ஒருத்தன் என்னோட தாலிச் சங்கிலியை வேகமா புடிச்சி இழுத்தான்''

- முகத்தில் அந்த நிமிட பதற்றம் ராஜலட்சுமிக்கு.

''அம்மா, அவன் பிடியில இருக்க, எனக்கு என்ன பண்றதுனே தெரியல. ஒரு நொடியில சுதாரிச்சு, 'திருடன்... திருடன்...’னு கத்தினேன். எங்களோட நகையில் இருந்த அவனோட கவனம்... அக்கம் பக்கத்துல யாரும் வந்துடக்கூடாதேங்குற பயமா மாறிடுச்சு. தப்பி ஓடப் பார்த்ததுல, வழுக்கி விழுந்து ஒருத்தனோட கால் ரெண்டும் பெஞ்சுல மாட்டிக்கிச்சு. ஒரு துண்டை எடுத்து அவனோட கழுத்தைச் சுத்தி நானும் அம்மாவும் இறுகப் பிடிச்சுக்கிட்டோம்'' என்று சிவரஞ்சனி ஆக்ஷனோடு செய்து காட்ட,

''எங்கள ஏதாவது செஞ்சுடுவானோங்கற பயத்துல, பக்கத்துல கெடந்த மண்வெட்டிய எடுத்து நடுக்கத்தோடயே அவனை வெட்டினேன். மூணாவது முறையா வெட்டும்போது, மண்வெட்டியோட காம்பு உடைஞ்சு மண்வெட்டி அவனோட கையில மாட்டிக்கிச்சு. 'இனி அவ்ளோதான் நம்மளக்

கொன்னுருவான்’னு பயத்துல வியர்த்திருச்சு. ஆனா, அவன்கிட்ட இருந்து தப்பிக்கணுமேங்குற பயமே பலம் தர, ஒரு கத்தியை எடுத்து, நகர முடியாத அளவுக்கு அவனை வெட்டினேன்''

- ஆக்ஷன் படத்துக்குக் குறைவில்லாத காட்சிகளைச் சொன்னார் ராஜலட்சுமி.

''எங்க ஆக்ரோஷத்தை பார்த்து இன்னொருத் தன் ஓடிட்டான். வெட்டுப்பட்டவன, ஊர்க்காரங்க உதவியோட போலீஸ்ல ஒப்படைச்சோம். இன்னொருத்தனையும் பிடிச்சுட்டாங்க. மறுநாளே, போலீஸ் அதிகாரி சைலேந்திரபாபு (ஏ.டி.ஜி.பி.) எங்களைப் பாராட்டினதோட, ரொக்கப் பரிசும் தந்தாரு...''

- முகத்தில் பரவசம் சிவரஞ்சனிக்கு.

''போன் மூலமா விஷயம் தெரியவர, பதறிக்கிட்டு ஊருக்கு வந்து பார்த்தா... அக்கம் பக்கம், போலீஸ்னு எல்லாரும் அம்மாவையும் பொண்ணையும் புகழ்ந்துட்டு இருந்தாங்க. 'திருடனைப் புடிக்கப் போய் உங்களுக்கு ஏதாவது ஆயிருந்தா என்ன பண்றது..?’னு கலங்கினப்போ, 'திட்டம் போட்டா செஞ்சோம்... அந்த நேரத்துல அசாத்திய துணிச்சல் வந்துருச்சு!’னு சிரிச்சாங்க!'' என்றார் ராஜலட்சுமியின் கணவர் தாமோதரன்.

''எங்க ஊருல எல்லா பொண்ணுங்களுக்கும் இந்த அம்மா - பொண்ணுதான் ரோல் மாடல்!'' என்று மெச்சுகிறார்கள் அக்கம் பக்கத்தினர்.

''முதல்வர் கையால விருதோட 5 லட்சம் பரிசுத் தொகையும், 10 கிராம் எடை கொண்ட தங்கப் பதக்கத்தையும், பாராட்டுச் சான்றிதழையும் வாங்கினப்போ, தமிழ்நாடு முழுக்க எங்களோட துணிச்சல் போய் சேர்ந்திருச்சு '' என்று சிலிர்க்கும் சிவரஞ்சனி, பண்ருட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார்.

''இப்ப எங்க பார்த்தாலும் திருட்டு நியூஸ்தான். ஒருவேளை நமக்கு அந்த சூழ்நிலை வந்தா... திருடனை எப்படி எல்லாம் எதிர்க்கலாம்னு மனசுக்குள்ள ஒரு ரிகர்சல் பார்த்துக்கலாம். ரோட்டுல செயினை அத்துட்டுப் போனா, அட்லீஸ்ட் 'திருடன் திருடன்’னு கத்திட்டே ரோட்டுல கிடக்குற கல்லை எடுத்து அவன் மேல எறியலாம். மாட்டிடக் கூடாதுங்குற பயம்தான்... திருடனுங்களோட பலவீனம். அப்படி அவனுங்க தடுமாறும்போது, நாம முன்னேறிடணும்!''

- அனுபவ வார்த்தைகள் சொல்லும் சிவரஞ்சனிக்கும் அவர் அம்மாவுக்கும், விருது மிகப் பொருத்தமே!

வீரத் தமிழச்சிகள் !