ஆரம்பத்தில், ராமநாதபுரத்துக்கு வருவதற்கே தயங்கிய நான், இன்று முழுமையாக இந்த ஊர்க்காரியாகவே மாறி நிற்கிறேன். இந்த ஊரையும், மக்களையும் நான் எந்தளவுக்கு நேசிக்கிறேன் என்பதற்கு அடையாளம்தான் இந்த விருது!''

- உள்ளத்தில் இருந்து பேசுகிறார் முனைவர் சுமையா தாவூத்!

கீழக்கரை, தாசிம்பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரியின் முதல்வர்தான் இந்த சுமையா. ஊர்ப்பிரமுகர்களும், மாணவிகளும் கூட்டம் கூட்டமாக வந்து, வாழ்த்திச் சென்று கொண்டிருக்க, கீழக்கரை நகரமே விழாக்கோலம் பூண்டதுபோல் இருக்கிறது. தமிழக முதல்வரின் கைகளால், 'சிறந்த சமூக களப்பணியாளர்' விருதை சமீபத்தில் பெற்றிருக்கும் சுமையாவுக்கு, முகமெல்லாம் பரவசம்!

மிகவும் பின்தங்கிய, வறட்சி நிலவும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பெருமைக்குரிய இந்த விருது பெற்றதன் பின்புலத்தில் நிற்கின்றன... இவருடைய அக்கறை, சேவை மற்றும் விடாமுயற்சிகள்!

''பூர்விகம் எனக்கு மைசூர். என்றாலும், வாழ்ந்தது மதுரைதான். அப்பா சுகாதாரத்துறையில் பணிபுரிந்தார். அதனாலேயே சிறு வயதிலிருந்து சுத்தம், ஆரோக்கியம், சேவை என்பதில் மிகுந்த ஈடுபாடு. மதுரை, பாத்திமா கல்லூரியில் பேச்சிலர் டிகிரியாக ஹோம் சயின்ஸ்; கோவை, அவினாசிலிங்கம் கல்லூரியில் மாஸ்டர் டிகிரியாக ஃபுட் அண்ட் நியூட்ரிஷன் முடித்தேன். பிரசவகால உணவு மேலாண்மை பற்றி, அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். முடித்தேன். படிக்கும்போதே பாத்திமா கல்லூரி... பிறகு, அவினாசிலிங்கம் கல்லூரி இரண்டிலும் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்தேன்.

அப்போது மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் பேராசிரியர் பணி கிடைத்தது. ஆனால், 'இந்த வயதில், வடகிழக்கு மாநிலத்துக்கெல்லாம் வேலைக்காக செல்ல வேண்டாம்' என்று வீட்டில் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில்தான், கீழக்கரையில் 'சீதக்காதி டிரஸ்ட்’ மூலமாக புதிய பெண்கள் கல்லூரி திறந்திருப்பதாகக் கூறிய தோழிகள், 'அதில் சேர்ந்துவிடு’ என்றனர். தண்ணியில்லா காடு, வன்முறையான ஊர் என்றே கேள்விப்பட்டுள்ள அந்த பகுதிக்கு செல்வதா என்ற தயக்கம். இருந்தாலும், ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, நம்பிக்கையோடு இங்கு வந்தேன்!'' என்றவரின் பயணம் அங்கிருந்துதான் ஆரம்பித்திருக்கிறது.

''24 வருடங்களுக்கு முன் இக்கல்லூரி புதிதாக திறக்கப்பட்டபோது உதவிப் பேராசிரியராக சேர்ந்தேன். மொத்தமே 63 மாணவிகள்தான். கீழக்கரைப் பகுதியென்பது கட்டுப்பாடான முஸ்லிம்களும், உயர்கல்வி பற்றி யோசிக்காத இந்து மக்களும் வாழ்ந்த பகுதி. நாங்கள் தினமும் ஒவ்வொரு வீடாகச் சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துச் சொல்வோம். குறைந்த கட்டணத்தில் கல்வி தருகிறோம் என்று சொல்லியும், 'கட்டிக் கொடுத்து அனுப்பப் போற புள்ளைக்கு, படிப்பு எதுக்கு?’ என்று எங்களிடமே திருப்பிக் கேட்டார்கள். சிலசமயம் திட்டுவார்கள். மிகவும் சிரமப்பட்டோம். சில வருடங்களில் கல்லூரியின் தரம், பயிற்றுவிக்கும் முறை, ஒழுக்கம் பற்றிய தகவல்கள் வெளியே செல்லச் செல்ல, மாணவிகள் சேர்க்கை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது'' என்பவருக்கு, ஆசிரியர் பணியோடு... சேவைக் களத்தையும் கல்லூரியே தந்திருக்கிறது.

''கல்லூரியின் செயல்பாடு, கேம்பஸுக்குள் மட்டும் முடிந்துவிடக் கூடாது என்று எங்கள் நிறுவனர் நினைத்தார். சுற்றியுள்ள கிராமங்களில், கடலோரங்களில் வசிக்கின்ற மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்று 'சீதக்காதி டிரஸ்ட்’ மூலம் ஒரு தொண்டு நிறுவனத்தை பத்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தோம். நான்தான் அதற்கு புராஜெக்ட் ஆபீஸர். இப்பகுதி பெண்கள் சத்துக் குறைபாட்டினால் மிகவும் அவதிப்பட்டார்கள். அது சம்பந்தமாக நான் படித்திருந்ததால், விழிப்பு உணர்வுக் கூட்டங்களை கிராமங்களில் நடத்தி, வெற்றியும் பெற்றேன். ஏழை மக்களிடம் வட்டிக்கு விட்டு சுரண்டிக் கொண்டிருந்தது ஒரு கும்பல். அதைத் தடுக்கும் விதமாக சுயஉதவி குழுக்களை ஆரம்பித்தோம். ராமேஸ்வரத்திலிருந்து முதுகுளத்தூர் வரை 1,200 குழுக்கள் இன்று சிறப்பாக செயல்படுகின்றன. இது ஒரு சேவை என்பதால், புராஜெக்ட் ஆபீஸர் பணிக்கு சம்பளம் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன்''

- சிறு புன்னகையும் சேர்த்தே சுமையா பேசும்போது, சிஸ்டமேட்டிக்கான கல்லூரி வேலை, மாதம் பிறந்தால் சம்பளம் என்ற எல்லைக்குள் நின்றுவிடாமல், மக்களுக்காக மகிழ்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் அவர் மீது மரியாதை கூடியது.

கல்லூரிப் பணிகளிலும் சாதிக்கவே செய்திருக்கிறார் சுமையா. ''முன்பெல்லாம்... முஸ்லிம் பெண்கள் உயர் கல்வி கற்பதென்பது பணக்காரர்களுக்கு மட்டும் சாத்தியம். நாங்கள் அதை மாற்றியிருக்கிறோம். தென் மாவட்டத்தில் வருடத்துக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் டிகிரி முடித்து வெளியில் செல்கிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். பெரிய விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. இப்போது எங்கள் கல்லூரி ஐ.எஸ்.ஓ. வாங்குவதற்கும், 'நாக்’ கமிட்டியின் அங்கீகாரத்துக்கும் தயாராகி வருகிறது. நான் கலெக்டர் தலைமையில் இயங்கும் 'சிறுபான்மை பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தி’லும் உறுப்பினராக இருக்கிறேன். டோனர்களிடமிருந்து பணம் பெற்று, நலிந்த பெண்களுக்கு கடனுதவி அளிக்கிறோம். அதன்படி தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான கடன் வழங்கியது ராமநாதபுர மாவட்டம்தான்'' என்று பெருமையோடு சொன்னவர், அந்த ஊர் சமுதாய முன்னேற்றத்திலும் ஆழ்ந்த அறிவும், துடிப்புமாக இருக்கிறார்.

''பலவித சத்தான உணவுகள் தயாரிக்கப் பயன்படும் கடல்பாசி, மன்னார் வளைகுடாவில்தான் அதிகமாக உற்பத்தியாகிறது. இதை பிடித்து வரும் மீனவர்களுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை. செயற்கை முறையில் கடலோரத்தில் ஒரு நிறுவனம் பாசி வளர்க்கிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போதுமான வருவாய் இல்லை. குறைந்த செலவில் பாசியை உற்பத்தி செய்து, பிலிப்பைன்ஸுக்கு அனுப்பி, பிராசஸ் செய்து, அமெரிக்காவுக்கு அனுப்பி, அங்கிருந்து மறுபடி இந்தியாவுக்கு நூறு மடங்கு அதிக விலைக்குத் திரும்ப வருகிறது. இது பெரிய கொடுமைஇல்லையா? நம் ஊரிலேயே 'அகர் பிராசஸிங் யூனிட்’ போட்டு நாமே ஏற்றுமதி செய்தால், நம் மீனவர்களுக்கு அதிக லாபம் கிடைக்குமே! இதுசம்பந்தமாக கலெக்டரிடம் புரொபோசல் கொடுத்துள்ளேன். மேலும் எங்கள் கல்லூரி மூலம், அந்த மக்களுக்கு கடல் உணவு தயாரிப்பது, கைவினைப்பொருள் தயாரிப்பது பற்றி பயிற்சியும் கொடுக்கிறோம்''

- சுமையாவின் அக்கறை பாராட்டுக்குரியது.

''எந்த ஊரைப் பிடிக்காமல் அங்கேயே வேலைக்கு வந்தேனோ, இன்று அந்த ஊர்க்காரியாக மாறிவிட்டேன். வெள்ளந்தியான மக்கள் வாழும் ஊர் இது என்பதை, களத்தில் இறங்கியபோதுதான் மனதார உணர்ந்தேன். இந்த விருது, என்னை ஊக்கப்படுத்தியதுடன் என் பொறுப்புகளை அதிகரித்துள்ளது. உதவிப் பேராசிரியராக இங்கு வந்தவள் இன்று கல்லூரி முதல்வராகவும், மாவட்ட மக்கள் அறியக்கூடிய நபராகவும் உள்ளேன். இதற்கு காரணம் கல்லூரி நிறுவனர் பி.எஸ். அப்துல் ரஹ்மான். அவருக்கும், என் மக்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்!''

- காத்திருக்கும் மக்களின் வாழ்த்துக்கள் வாங்க நகர்ந்தார் சுமையா !