பிரபு சாலமன்... நல்ல சினிமா படைக்கும் தரவரிசை இயக்குநர். 'மைனா’ திரைப்படம் தந்த வெற்றி, வரவிருக்கும் 'கும்கி’ திரைப்பட எதிர்பார்ப்பு என உழைக்கும் விஷ§வல் காதலன். மலை, கிராமம், வயல்வெளி என இயற்கை தாயின் மடியில் தன் படங்களைப் பதிவு செய்யும் பிரபுவுடைய பசுமையான எண்ணத்தின் ஊற்று... புனிதா பிரபு சாலமன்.

''இவரின் அன்பு மட்டுமல்ல... உரிமை, கோபம் என எல்லாமே எப்போதும் என் ஒருத்தியைச் சுற்றித்தான் இருக்கும். அதுதான் எனக்கும் பிடிக்கும்!'' என்று ஆரம்பிக்கும் புனிதாவின் வார்த்தைகளில் வழிகிறது காதல்!

''பெற்றோர் நிச்சயித்து எங்கள் திருமணம் நிகழ்ந்தபோது எனக்கு வயது 18, அவருக்கு 23. 'சினிமா முயற்சியில இருக்கறவங்களுக்கு போய் பொண்ணைக் கொடுத்திருக்கீங்களே...’ என்ற உறவினர்களின் பயமுறுத்தல்களுக்கு இடையேதான் வாழ்க்கையை ஆரம்பித்தோம். இருவருக்குமே மிக இளவயது என்றாலும், குடும்பப் பொறுப்புகளில் நானும், தொழில் சார்ந்த விஷயத்தில் அவரும் மிகவும் பக்குவமாகவே இருந்தோம். வீட்டுப் பொறுப்புகளில் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டது நிறைய.

திருமணம் முடிந்த அடுத்த வருடத்தில் அவர் மாமா இயக்கிய 'நம்ம அண்ணாச்சி’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். அதுதான் அவருக்கு முதல் சினிமா என்ட்ரி. பிறகு, வெளியூர் ஷூட், ப்ரீ புரொடக்ஷன், போஸ்ட் புரொடக்ஷன் என்று மிகுதியான நேரத்தை அவர் வெளியில் கழிக்க வேண்டிய சூழல். செல்போன் எல்லாம் இல்லாத நாட்கள் அவை. பக்கத்து வீட்டுக்கு எப்போதாவது போன் வரும். அவருக்கு வேலை அதிகமாக இருந்தால் அதற்கும் வாய்ப்பிருக்காது. 'இவர் இப்போ எங்க இருப்பார், எப்போ போன் பண்ணுவார், வீட்டுக்கு வர இன்னும் எவ்வளவு நாளாகும்?’ என்று விடைதெரியாத கேள்விகளுடன் தன் கணவருக்காக வீட்டில் காத்திருக்கும் மனைவியின் மனநிலை... ரொம்பவே கனமானது. ஆனாலும் தன் லட்சியம், கனவைத் துரத்திக் கொண்டிருந்த அவர் பயணத்தை தொந்தரவு செய்யக் கூடாது என்று, என் பாரம் எதையும் அவரிடம் காட்டிக்கொள்ளாமல் வீடு, குழந்தைகள் என்று வேலைகளைத் தொடர்வேன்.

ஸ்கூல் முடித்தபோதே சினிமாதான் தாகமாக இருந்திருக்கிறது இவருக்கு. ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் சேர விண்ணப்பித்திருக்கிறார். பலநாட்கள் காத்திருந்தும் எந்தப் பதிலும் இல்லை. இறுதியாக, திருச்சியில் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறார். மூன்று வருட கோர்ஸையும் முடித்த பிறகு, ஒரு நாள் வீட்டில், ஒரு புகைப்படத்துக்கு பின்னால் இருந்த கவர் இவர் கண்களில் பட்டிருக்கிறது. பிரித்துப் பார்த்தால், இவர் திரைப்படக் கல்லூரியில் சேர்வதற்காக கல்லூரி நிர்வாகம் அனுப்பியிருந்த கடிதம். 'சினிமா வேண்டாம்!’ என்று அவர் அம்மா அந்தக் கடிதத்தை மறைத்து விட்டிருந்தது அப்போதுதான் அவருக்குத் தெரிந்திருக்கிறது.

'இதால என் வாழ்க்கையே திசை மாறிடுச்சு’ என்ற சமரசம் இல்லாமல், அவரின் ஒவ்வொரு அடியும், உழைப்பும், முயற்சியும், ஆர்வமும் சினிமாவை நோக்கியே நகர, இன்று 'நல்ல இயக்குநர்’ என்கிற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார். 'கும்கி’ படத்துடன் சேர்த்து தமிழில் ஏழு படங்கள், கன்னடத்தில் ஒரு

படம் என மொத்தம் எட்டுப் படங்கள் இயக்கியிருக்கிறார். ஒவ்வொரு படத்தின் காட்சியை எழுதும்போதும் சரி, படம்பிடிக்கும் போதும் சரி... என்னிடம் பகிர்ந்தால்தான் அவருக்கு திருப்தி. இடையிடையே சின்ன சின்ன மாற்றங்கள் சொன்னாலும் ரசிப்பார்.

ஒரு முறை பெசன்ட் நகர் சர்ச்சில் இருந்து மெரினா பீச் பக்கமாக காரில் சென்று கொண்டு இருந்தோம். மலைச் சூழல் சம்பந்தமான ஒரு கதையைச் சொல்லி, அந்த ஹீரோயினுக்கு கிராமத்து வழக்கில் கூப்பிட ஒரு பெயர் வைக்க வேண்டும் என்றார். நான் சட்டென 'மைனா..?!’ என்றேன். அடுத்த நாள் அழகாக டிஸைன் செய்த ஒரு ஷீட்டை என் முன் நீட்டினார். நான் சொன்னதுதான் படத்தின் தலைப்பு! அப்போது எனக்கிருந்த பரவசத்தை வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை.

ஒருமுறை நான் வீட்டில் இரண்டாவது மாடியில் ஒரு வேலையாக இருக்கும்போது காலில் அடிபட்டு, பாதத்தை தரையில் வைக்கவே முடியாத அளவுக்கு வலி ரணமானது. என் சத்தம் கேட்டு மேலே வந்தவர், அந்த அறையில் இருந்து கார் வரை என்னை தூக்கிக்கொண்டு வந்து வைத்து, பின் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துப் போனார். அது மேலும் நெகிழ்ச்சியோடு 'மைனா’ படத்தில் ஒரு ஸீன் ஆனது. அந்தக் காட்சியைப் பார்த்தபோது கண்கள் கலங்காமல் இருக்க முடியுமா..?! இப்படியரு கணவரை எனக்குக் கொடுத்த ஏசுவுக்கு எப்போதும் நன்றி கூறிக் கொண்டேதான் இருப்பேன்!

என் பையன் சஞ்சய், இப்போது கல்லூரி மாணவன். பெண் ஷைனி, ஏழாம் வகுப்புப் படிக்கிறாள். 'குடும்பத்தோட அட்மினிஸ்ட்ரேஷன் முழுசா உன் கையில. பசங்களோட படிப்பு, சாப்பாடு, வளர்ப்பு, வீடுனு எல்லாத்தையும் நீ சூப்பரா கவனிச்சுக்குற!’ என்று பாராட்டுவார். 'உங்களால குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியலைங்கிறதை சமாளிக்கறதுக்காக, இந்தப் பாராட்டா..?’ என்று சிரிப்பேன் நான். 'உதவி இயக்குநரா இருந்த காலகட்டத்துல பேட்டா தொகையா கிடைச்ச சொற்ப பணத்திலேயே அவ்ளோ சாமர்த்தியமா, சமர்த்தா குடும்பம் நடத்தினவ. உன்னோட கவனத்துல குழந்தைங்க வளர்ந்தா நிச்சயம் அவங்க ஜெயிப்பாங்க’ என்று அவர் பெருமைப்படும்போது, நான் அடையும் சந்தோஷத்துக்கு அளவேது!

எங்கள் இருவரிடமுமே ஒரு குணம் உண்டு. அதை நல்ல குணம் என்றும் சொல்லலாம்... கெட்ட குணம் என்றும் சொல்லலாம். ஷூட்டில் இருக்கும்போது அவருக்கு ஏதாவது உடம்பு முடியாமல் போனால், நான் பதற்றப்படுவேன் என்று என்னிடம் சொல்ல மாட்டார். அதையேதான் நானும் செய்வேன். அவர் வேலையில் இருக்கும்போது இங்கு வீட்டில் எனக்கோ, குழந்தைகளுக்கோ உடம்பு முடியாமல் போனால், அவரிடம் கொஞ்சம் தாமதமாகத்தான் சொல்வேன். 'ஏன் எங்கிட்ட சொல்லல..?’ என்று இருவருமே பரஸ்பரம் சின்ன சண்டை போட்டுக் கொள்வோம்.

கீழ் தளம் வீடு, மேல் தளம் புரொடெக்ஷன் ஆபீஸ் என்பதால், சாரை ஷூட் இருக்கும் நாட்களைத் தவிர எங்கேயும் விட மாட்டோம். இவருக்கும் நானும் குழந்தைகளும் இல்லாத நேரம் ரொம்பவே கஷ்டம். இப்படி இவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். அன்பு கசிந்தோடும் இந்த நெடுந்தொலைவு பயணம்... எங்களுக்கு இருபது வருட அனுபவமாச்சே!''