வாழ்வின் இனிமையான தருணங்களை ரீவைண்ட் செய்து மகிழும் உன்னதம்... நட்புக்கே சாத்தியம்! அந்த அனுபவத்தை சமீபத்தில் ஒரு சில மணி நேரம் சந்தோஷமாகக் கொண்டாடி சுவைத்திருக்கிறார், தமிழக முதல்வர் ஜெயலலிதா.

ஆகஸ்ட் 30 அன்று... முதல்வரின் அழைப்பின் பேரில் சௌகார் ஜானகி, பி.சுசீலா, ராஜஸ்ரீ, அஞ்சலிதேவி, ஜமுனா, சரோஜாதேவி, சுகுமாரி, சச்சு, சோ என்று முதல்வருக்கு சிநேகமான முக்கிய பிளாக் அண்ட் வொயிட் ஸ்டார்கள் கூடி, போயஸ் தோட்ட வீட்டில் சந்தித்துக் கொண்டதன் ஆனந்தத்தை... அவர்களில் சிலர் பசுமை நிறைந்த நினைவுகளாக இங்கே பதிவு செய்கிறார்கள்!

''அந்த நாள் எங்க எல்லோருக்கும் பள்ளி, கல்லூரி தோழிகள் சந்தித்துக் கொள்கிற ஒரு 'கெட் டுகெதர்’ ஃபங்ஷன் போல அமைந்தது!''

- சந்தோஷ பூரிப்போடு பேச ஆரம்பித்தார் சச்சு.

''முதல்வர் பதவி ஏத்துக்கிட்ட நாள்ல இருந்தே இப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அடுத்தடுத்து அவங்களுக்கு இருந்த தொடர் வேலைகளால... தள்ளிப் போய்க்கிட்டே இருந்துச்சு. இறுதியா, அன்னிக்குதான்னு தெரிஞ்சதுமே, எங்க எல்லோருக்கும் சர்ப்ரைஸும், சந்தோஷமும் தாங்கல.

ஹைதராபாத்ல ஜமுனா, கேரளத்துல சுகுமாரி, பெங்களூருல சௌகார் ஜானகி அம்மா, சரோஜாதேவி மேடம்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையில இருக்காங்க. எல்லோருமே எப்பவாவது குடும்ப நிகழ்ச்சிங்க, பொது நிகழ்ச்சிங்கனு எதேச்சையா சந்திச்சுக்கிட்டாதான் உண்டு. அப்படி இருக்க, நினைச்சே பார்க்காத நேரத்துல... திடீர்னு எல்லாரையும் ஒண்ணு சேர்த்து சி.எம். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது, மனதை ரொம்பவே பசுமையாக்கிடுச்சு!''

- கண்களிலும் களிப்புக் காட்டியவர்,

''அன்னிக்கு நான்தான் முதல் ஆளா போயஸ் தோட்டத்துல போய் நிக்கணும்னு, அவ்ளோ ஆர்வமா இருந்து கிளம்பிப் போனேன். ஆனா, எனக்கு முன்னயே சுசீலா மேடம் அங்க இருந்தாங்க. அடுத்ததா... சுகுமாரி, சௌகார் அம்மானு ஒவ்வொருத்தரா ஆஜரானாங்க. சோ சார்... சி.எம். வீட்ல ஒருத்தர்னுதான் சொல்லணும். எங்க எல்லோரையும் முகமலர்ச்சியோட, பழைய நினைவுகளோட முதல்வர் வரவேற்றது, மனசுக்கு மகிழ்ச்சியா இருந்துச்சு. 'இந்த எளிமையும், திறமையும்தான் உங்களோட பலம்!’னு அஞ்சலிதேவி அம்மா சொன்னப்போ, 'உங்களோட அன்பும், பாசமும் எனக்கு எப்பவும் வேணும்!’னு சி.எம் எளிமையா சிரிச்சாங்க'' என்ற சச்சு,

''சினிமா ஷூட்டிங்ல நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவங்கள், பாடல்கள், சமையல், பொழுதுபோக்குனு பேச்சு சுவாரசியமானது. அந்த நேரத்துல அவங்க காதுல அணிஞ்சுருந்த 'டைமண்ட் ஸ்டெட்’டை பார்த்த நான், 'உங்களோட டேஸ்ட்டே தனிதான். அப்போ எல்லாம் ஷூட்டிங், வெளி நிகழ்ச்சிகள்னு எல்லாத்துக்கும் அணிகிற டிரெஸ்ஸஸ், ஜுவல்லரியை நீங்களே வடிவமைச்சுக்குவீங்கள்ல..? அதெல்லாம் உங்களுக்குத் தனி அழகை கொடுக்கும். ஷூட்டிங்ல கொஞ்சம் டைம் கிடைச்சாலும், புக்ஸ்... புக்ஸ்.. புக்ஸ். அப்பப்பா! அதெல்லாம்தான் இன்னிக்கு இவ்ளோ கூர்மையான ஆட்சி அனுபவத்தை கொடுத்திருக்கு!’னு நான் சொன்னதும், 'அதெல்லாம் இன்னுமா ஞாபகம் வெச்சுருக்கே!’னு என் கையைப் பிடிச்சுக்கிட்டாங்க!'' என்றார் அந்த நேரத்து உற்சாகம் இப்போதும் குறையாதவராக!

பூரிப்பு பொங்க பேசிய சௌகார் ஜானகி, ''இந்த சந்திப்புக்கு முதல் நாள், ஜெயா டி.வி-யோட 14-ம் ஆண்டு கொண்டாட்டத்துலயும் கலந்துகிட்டேன். அங்க இசை நிகழ்ச்சிகள் நடந்துகிட்டிருந்தப்போ... ரெண்டாவது வரிசையில அமர்ந்திருந்த என்னை பார்த்துட்டு, 'முன் பக்கம் வாங்க!’னு கைகொடுத்து அழைச்சு பக்கத்துல உட்கார வெச்சுகிட்டாங்க சி.எம். அதுதான் அவங்களோட குணம். அந்த பூரிப்போட ஈரம் காயறதுக்குள்ளயே அடுத்த நாள் சந்திப்பு. ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. இவ்ளோ வேலைக்கும் இடையே... எங்களோட வருகைக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்குறாங்களேனு வியப்பா இருந்துச்சு. 'நீங்க ஏன் பெங்களூருலயே தங்கிட்டீங்க?’னு என்னைக் கேட்டாங்க. 'ஜில்லுனு கிளைமேட் இருக்கும். நான் இருக்குற இடம் ரொம்ப அமைதியா, மனசுக்கு ரம்மியமா இருக்கும்...’னு சொன்னேன். 'நல்லா சமைப்பீங்களே..! அப்போ எல்லாம் உங்களோட சமையல்னா ரெண்டு ஸ்பூன் அதிகமாவே சாப்பிட்டிருக்கேன்!’னு சொன்னப்போ... மனசும், உடம்பும் குளிர்ந்துபோச்சு'' என்று பரவசமானவர்,

''பேசிக்கிட்டிருக்கும்போது, வீட்டுச்சுவரில் மாட்டியிருந்த சி.எம். சின்ன வயசு போட்டோவை எல்லாரும் கவனிச்சோம். 'அது ஆறு வயசுல எடுத்தது. எனக்கே தெரியாம... போட்டோ காம்படிஷனுக்கு எங்கம்மா அனுப்பி வெச்சு, பரிசு வாங்கின படம். அந்த ஞாபகமா மாட்டி வெச்சுருக்கேன்!’னு சொன்னப்போ, 'பிறக்கும்போதே கோல்ட் ஸ்பூனோட பிறந்த பொண்ணாச்சே!’னு நான் சொல்ல, அவங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்!'' என்றார் சௌகார் தானும் சந்தோஷமாக.

அடுத்து நம்மிடம் பேசியவர்... ராஜஸ்ரீ. ''முதல்வர் வீட்ல கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் இருந்தோம். அந்த நேரம் முழுக்க அவங்க எங்களோடயே செலவழிச்சது... எங்க எல்லாருக்கும் ரொம்பவும் பெருமையாவும் மகிழ்ச்சியாவும் இருந்துச்சு. சரோஜாதேவி மேடத்தைப் பார்த்து, 'ஏன் ஒரு பக்கமா

கைத்தாங்கலாவே நடக்குறீங்களே..?’னு சி.எம். கேட்டாங்க. 'ரெண்டு மூணு, வாரங்களா கையில பெயின் இருக்கு’னு சரோஜா மேடம் சொல்ல, 'அதெல்லாம் இல்லை... விருந்து சாப்பாட்டை பார்த்தா.... வலி எல்லாம் பறந்து போயிடும்!’னு சௌகார் மேடம் அந்த நேரத்துல ஜோக்கடிக்க, அங்கே, சிரிப்பு அலை குறைய வெகு நேரமாச்சு.

விருந்து உபசரிப்பு முடிந்து, அன்றைய சந்திப்போட நினைவா புகைப்படங்கள், எங்க எல்லோருக்கும் சி.எம். கையால பட்டுப்புடவை பரிசுனு விடைபெற்றப்ப, பிரிய மனசில்லாமலேயே கிளம்பினோம்!''

- ராஜஸ்ரீயிடம் சந்தோஷமும், ஏக்கமும்!

'கலகலப்பா இப்படி மனம் விட்டுப் பேசி, மகிழ்ந்து எத்தனை வருஷங்களாகியிருக்கும்..!’ என்று நிச்சயம் அன்று நினைத்திருப்பார், ஜெயலலிதா!